மஹிந்த புலிகளை தோற்கடித்தமையை மறுக்க முடியாது: காந்தியின் பேரன்

Kanteமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விடுதலைப்புலிகளை தோற்கடித்தமை தொடர்பில் நினைவுக் கூறப்படுவார். எனினும் போரின் போது மேற்கொண்ட குற்றங்களையும் மறக்க முடியாது என்று மகாத்மா காந்தியின் பேரனான கோபாலகிருஸ்ண காந்தி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவி ஏற்பு ஓராண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வின்போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

வேலுப்பிள்ளை பிரபாகரன் வரலாற்றில் இடம்பெற்றுவிட்டார். அவரின் குறிக்கோளும் வரலாற்றில் இடம்பெற்றுவிட்டது.

வேலுப்பிள்ளை பிரபாகரனின் குழந்தை என்ற காரணத்துக்காக கொடியமுறையில் அந்த குழந்தையை கொன்றதன் மூலம் அந்த குழந்தை பயங்கரமான முறையில் இந்த உலகத்தை விட்டு சென்றுள்ளது.

இதன்மூலம், சமாதானம் அகன்று சென்றது. துப்பாக்கிகள் மௌனமாகின. அதேநேரம் சமாதான பேச்சுக்களின் குரல்களும் மௌனமாகின.

ஆனால், பிரபாகரனின் குறிக்கோள் தற்போதைய நிகழ்ச்சி நிரலில் இருந்து வெளியேறியுள்ளபோதிலும் அது நிரந்தரமாக வெளியேறவில்லை என்றும் கோபாலகிருஸ்ண காந்தி தெரிவித்தார்.

சிங்கள இனவாதத்தையும் தமிழ் இனவாதத்தையும் தாம் எதிர்ப்ப்பதாக குறிப்பிட்ட அவர், மலையக மக்கள் உட்பட்ட அனைத்து சமூகத்தவர்களுக்கும் நம்பிக்கை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அரசாங்கத்தை கையேற்றதன் பின்னர், தேசிய சமாதானம் வரும் என்பதில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் தற்போதைய ஆட்சியின் கீழ் இலங்கை நம்பிக்கை தீவாக மாறும் எதிர்காலத்தில் இலங்கை நம்பிக்கை கண்டமாகவும் மாறும் உறுதிப்பாடு உள்ளதாக கோபாலகிருஸ்ண காந்தி தெரிவித்தார்.

-http://www.tamilwin.com

TAGS: