பாஸ் தலைவர்: ஹராபான் நீடித்திருக்க ‘தொங்காட் அலி’தேவை

tongபுதிதாக  அமைக்கப்பட்டிருக்கும்  கூட்டணி  அரசியல்  அரங்கில்  நீடித்து  நிலைத்திருக்க  அதற்கு “தொங்காட்  அலி”  தேவைப்படலாம்  என  கிளந்தான்  துணை  மந்திரி  புசார்  நிக்  அமார்  நிக்  அப்துல்லா  கூறினார்.

இன்று  ஷா  ஆலமில்  அதன்  முதலாவது  தலைமைத்துவ  மாநாட்டை  நடத்திய   எதிரணிக்  கூட்டணியின்  எதிர்காலம்  பற்றி செய்தியாளர்கள்  மாநில  பாஸ்  ஆணையர்  II-இடம்  வினவினார்.

“பக்கத்தான்  ஹராபான் எவ்வளவு  காலம்  இருக்கும்  என்பது  தெரியாது.

“ஒரு  வேளை ‘தொங்காட்  அலி’  உட்கொண்டால்  சற்று  நீடித்திருக்கலாம்”, என  நிக்  அமார்  கிண்டலடித்தார்.