இலங்கையின் புதிய அரசியல் அமைப்பில் இந்திய அரசியலமைப்பு விடயங்களும் உள்வாங்கப்படும் என்று தாம் நம்புவதாக தேசிய நல்லிணக்கம் மற்றும் அலுலக மொழிகள் துறை அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இந்திய உயர்ஸ்தானிகரம் கடந்த 9ஆம் திகதி ஏற்பாடு செய்திருந்த ப்ரவசி பாரதீய திவாஸ் 2016 நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும்போதே அவர் இந்த நம்பிக்கையை வெளியிட்டார்.
இலங்கையில் உள்ள முக்கிய இந்திய வம்சாவளி பிரமுகர்கள் 50பேர் வரை இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
நிகழ்வில் மனோ கணேசன் பிரதம அதிதியாக பங்கேற்றார்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் வரலாற்று ரீதியாக சிறந்த உறவு நிலவுகிறது.
இலங்கையில் உள்ள இந்தியர்கள் இலங்கையின் நலனுக்காக பல்வேறு வழிகளிலும் உதவியுள்ளனர்.
இந்தநிலையில் இலங்கையில் இன்று புதிய அரசியல் அமைப்பு குறித்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன்போது இந்திய அரசியல் அமைப்பில் சிறுபான்மையினரின் நலன்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு உட்பட்ட நல்ல விடயங்கள், இலங்கையின் அரசியல் அமைப்பிலும் உள்வாங்கப்படும் என்று தாம் நம்புவதாக மனோ கணேசன் குறிப்பிட்டார்.
-http://www.tamilwin.com