30 தீவிரவாதிகளை சுட்டுத் தள்ளிய ஆப்கான் ராணுவம்

affஆப்கானிஸ்தானில் வடக்கில் உள்ள குண்டூஷ் மற்றும் ஹெல்மண்ட் மாகாணத்தின் தென் பகுதியையும் கடந்த ஆண்டு தலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றினர். அவற்றை மீட்க ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கடும் சண்டையில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களுக்கு சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளும் உதவி வருகின்றன. இதற்கிடையே ஆப்கானிஸ்தான் ராணுவம், போலீசாரும் இணைந்து தஜிகிஸ்தான் எல்லையில் தீவிரவாதிகளுடன் கடும் போரிட்டு வருகின்றன.

இந்த நிலையில் தஜிகிஸ்தான் எல்லையில் உள்ள தர்ஹாத் மாவட்டத்தில் தலிபான் தீவிரவாதிகளின் பிடியில் இருந்த முக்கிய நகரம் நேற்று கைப்பற்றப்பட்டது.

அதே நேரத்தில் நடைபெற்ற கடும் சண்டையில் 30 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களின் வாகனங்களும், ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவலை ஆப்கானிஸ்தான் ராணுவ அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கிடையே கடந்த வாரம் நடந்த தாக்குதலில் அமெரிக்க வீரர் ஒருவர் உயிரிழந்தார். 2 பேர் காயம் அடைந்தனர்.

-http://www.athirvu.com