நம்பிக்கையற்ற பெற்றோரை கொன்று விடுங்கள்: சிறுவர் படையினருக்கு கட்டளையிட்ட ஐ.எஸ்

child_isisஐ.எஸ்.தீவிரவாத அமைப்பு மீது நம்பிக்கை இல்லாத பெற்றோரை கொன்று விடுங்கள் என சிறுவர் படையினருக்கு அந்த அமைப்பு கட்டளையிட்டுள்ளது.

சிரியா மற்றும் ஈராக் பகுதிகளில் உள்ள சிறுவர்களை அவர்களின் குடும்பங்களில் இருந்து பிரித்து ஐ.எஸ்.தீவிரவாதிகள் தங்கள் குழுவில் கட்டாயமாக இணைத்து வருகின்றனர்.

தீவிரவாத குழுவில் இணைய மறுக்கும் சிறுவர்களை உடல் உறுப்புகளை சிதைப்பது போன்ற கடுமையான தண்டனைகளை அளிக்கின்றனர்.

குழுவில் இணைந்து பயிற்சி பெறும் சிறுவர்களை அடிப்படைவாதிகளாக மாற்றியும் ஐ.எஸ்.குழுவினர் மீது நம்பிக்கை அற்ற உறவினர் மற்றும் பெற்றோரை கொலை செய்ய வேண்டும் எனவும் சிறுவர்களுக்கு கட்டளையிட்டுள்ளனர்.

isis-video

குர்து படையினருக்கு எதிராக பெரும்பாலும் ஆயுதங்களுடன் போராடுவது இதுபோன்ற சிறுவர் படையினரே என்று குர்து தளபதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மூளைச்சலவை செய்யப்பட்ட இந்த சிறுவர்களே ஐ.எஸ்.தீவிரவாதிகளுக்கு கேடையமாக பயன்படுத்தப் படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் குர்து படையினருக்கு சந்தேகம் வராத வகையில் தற்கொலைப்படையாகவும் ஐ.எஸ்.குழுவினர் சிறுவர்களை பயன்படுத்தி வருகின்றனர்.

இளைஞர்களை தங்கள் அணியில் இணைப்பதற்காக சமூக வலைத்தளங்களில் சிறுவர்களின் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளையே ஐ.எஸ். பயன்படுத்தி வருகின்றனர்.

ஐ.எஸ்.படையில் இணைவதற்காக கட்டாயமாக கொண்டு செல்லப்படும் சிறுவர்கள் பெற்றோர் ஞாபகத்தில் அழுவதற்கும் அங்கு அனுமதி இருப்பதில்லை என தப்பி வந்த சிறுவர்கள் தெரிவித்துள்ளனர்.

பயிற்சிகள் கடுமையானதாகவும் அதிக துன்புறுத்தலுக்கு ஆளானதாலும் தப்பி வந்து தற்போது அகதிகள் முகாமில் இருக்கும் சிறுவர்கள் சிலர் மனநலம் குன்றி காணப்படுவதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

-http://world.lankasri.com