இஸ்தான்புல் நகரை உலுக்கிய பாரிய குண்டு வெடிப்பு (வீடியோ இணைப்பு)

Screen-Shot 06துருக்கி தலைநகர் இஸ்தான்புல் அருகே நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலில் 10 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள சுல்தானாமெட் பகுதியில் இன்று சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்தது.

புளூ மசூதியின் அருகே நடைபெற்ற இந்த குண்டுவெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்டனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த குண்டு வெடிப்புக்கு தற்கொலைப்படை தீவிரவாதிளே காரணம் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இச்சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்ததும் ஏராளமான அவசர ஊர்தி மற்றும் மீட்புப்படை வாகனங்கள் அங்கு விரைந்துள்ளதாகவும், தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் ஏராளமான உடல்கள் ரத்தவெள்ளத்தில் சிதறிக்கிடப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனிடையே இந்த தாக்குதலில் ஜேர்மனியை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகளவு இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக ஜேர்மன் சான்சலர் ஏஞ்சல் மேர்கல் கூறியதாவது, இந்த தாக்குதலில் ஜேர்மனியை சேர்ந்தவர்களே அதிகம் பலியாகியுள்ளதாகவும் காயமடைந்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் சர்வதேச தீவிரவாதம் தனது கோர முகத்தை வெளிகாட்டியுள்ளது. அதற்கு எதிராக நாம் செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சிரியாவை சேர்ந்த ஒருவர் தான் தாக்குதல் நடத்தியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

எனவே இதன் பின்னணியில் ஐ.எஸ். அமைப்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

-http://world.lankasri.com