பக்கத்தான் ஹராபான் மலாய்க்காரர் சம்பந்தப்பட்ட விவகாரங்களுக்கும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய தருணம் வந்து விட்டது பிகேஆர் உதவித் தலைவர் ரபிஸி ரம்லி கூறினார்.
இதற்குமுன் எதிரணிக் கூட்டணி அவ்விவகாரத்தை வெளிப்படையான முறையில் அணுகியதில்லை இல்லை. ரபிஸி, “14வது பொதுத் தேர்தலில் எதிரணி மலாய்க்காரர் வாக்குகளைப் பெற முடியுமா?”, என்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசினார்.
“இனியும் அப்படி இருக்க முடியாது. அவர்கள் நேரடி பதிலை எதிர்பார்க்கிறார்கள். அவர்களுக்கு நாம் நேரடிப் பதிலைக் கொடுக்க வேண்டும்”, என்றார்.
மலாய்க்காரர் விவகாரத்தை அணுகும்போது அதை பிஎன் செய்வதுபோல் மலாய்க்காரர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட கட்சிகளிடமே விட்டு விடாமல் ஹராபான் கூட்டாக அதை அணுகித் தீர்வு காண வேண்டும்.
ஆங்கிலேயன் எப்போதுமே Divide and Rule பாலிசியை கையாளுபவன். அதனையே இந்நாட்டிலுள்ள பிரஜைகளில் ஒரு இனமான மலாய்க்காரர்கள், இந்தியர்களின் ஏமாளித்தனத்தையும், சீனர்களின் money minded தனத்தையும் பயன்படுத்தி, பூமிபுத்திரா, புக்கான் பூமிபுத்ரா, என பிரித்து, இந்தோனேசியர்களையும், இஸ்லாமியர்களையும் நாட்டினுள் கண்மூடித்தனமாக புக வைத்து, ஆட்சி பீடத்தை கைப்பற்றிக் கொண்டார்கள். மலாய்க்காரன் ஒருவனை சக பிரஜையான தமிழன் ஒருவன் ‘நாட்டுக்காரன்’ [நாட்டான்] என்று சொல்லுமளவுக்கு தன்னை கேவலபடுத்திக் கொண்டான். இந்நாட்டு பிரஜையான ஒரு மலாய்க்காரன் ‘நாட்டுக்காரன்’ என்றால், அதே இந்நாட்டு பிரஜையான ஒரு தமிழன் ‘காட்டுக்காரனா’? மலேசியத் தமிழர்கள் தூக்கில் தொங்க வேண்டிய காலம் நெருங்கி வருவதுபோல் தோன்றுகிறது.
அடிச்சாண்ட பல்டி
இந் நாட்டின் குடிமக்கள் யாவரும் மலேசியர்கள். எந்த வளர்ச்சியும் எல்லாரையுமே சார வேண்டும். ஒரு இன/ சமயத்தை சேர்ந்தவர்க்கு மட்டும் இருக்ககூடாது. ஆனால் நடக்குமா? MIC – MCA -துரோகி சப்பிகள் நம்மை எல்லாம் விற்று விட்டாங்கள்– இவன்களை சாக்காக வைத்து நம்மவர்களுக்கு என்னமோ பெரிதாக செய்கிறார்கள் போல் நாடகம் போடுகின்றனர். அத்துடன் காகாதிமிர் ஆரம்பித்த மலாய்க்காரன் எஜமானன் என்ற எண்ணம் பேயாட்டம் போடுகின்றது– அரை வேக்காடுகளை பதவியில் வைத்தால் வேறு என்ன நடக்கும் அத்துடன் தினசரி இனத்துவேசம் அரசால் அரங்கேற்றப்ப்படும்போது வேறு என்ன எதிர்பார்க்க முடியும்– கேள்வி கேட்பவர்கள் எல்லாம் கம்பி என்ன வேண்டிய நிலைக்குத்தள்ளப்படும் போது …………………………….?