தமிழர் நாந்தா, முதலில் உங்களுக்கு புரியுதா தேனியின் கருத்து ?இனத்துக்கும் மதத்துக்கும் எனக்கு வித்தியாசம் தெரியும் .. புரியாதது கடவுளை நம்புவன் முட்டாள் , பிள்ளையாருக்கு செருப்பு மாலை போட்டு செருப்பால அடித்தவன், தமிழ், மொழியை காட்டுமிரண்டு மொழின்னு சொல்லி அதை தமிழிலேயே எழுதியவன் உங்க தந்தை பெரியார் .. அவருடைய சீரிய தொண்டணானா . நீங்க (தேனீ) எப்படி இந்து மதத்தை பத்தி பேசுறீங்க ? ஒரு பக்கம் இந்து கடவுளுககு செருப்பு மாலை,கடவுள் மறுப்பு, மறுப்பக்கம் சிவனை பத்தி ஆராய்ச்சி .. இதுதான் தமிழரை சரியான பாதையில் நிறுத்தும் லட்ச்சணமா ? யாரை ஏமாற்ற இந்த சூழ்ச்சி? இதை கூட இருந்தே குழிபறிப்பதுன்னு சொல்லுவாங்க .. இதையேதான் உங்க கன்னடக்காரன் பெரியாரும் பண்ணினார் …தமிழ் தமிழ்னு சொல்லி கண்ட இனத்து பேச்சை கேட்டு இன்றைக்கு தமிழன் வீணா போனதுதான் மிச்சம்.
Loading...
இன்று தமிழன் ஒற்றுமை இல்லாத்துக்கு காரணம் ஆரியன் இல்லை .. திராவிடம் என்னும் திருடன் , தமிழுக்கா தமிழனுக்கா போராடியவர்கள் நிறைய தமிழர்கள் .. அவர்களை மறந்து கண்ட இனத்துக்கா பெரியார் (கன்னடம்)( அம்பேத்கார்) வட மாநிலம் இவன்களுக்கா போராடி செத்து போறாங்க நம்ப அப்பாவி தமிழர்கள் ..நான் தமிழன் , நான் இந்து ,, இதை தப்ப பேசினா நான் கண்டிப்பா போராடுவேன் . இதுக்கு பேரு பற்று.. இதை வெறினா அதையும் ஏத்துக்குவேன் …
Loading...
ஓர் இனம் நல்லதொரு சமய நெறியைக் கொண்டு அதனையே வாழ்க்கை நெறியாக கொண்டால், அவ்வினம் அற நெறியில் நின்று இறைவுண்மையை உணர்ந்து பண்பட்ட சமூதாயமாக வாழ்வாங்கு வாழும். ஏன் தமிழரின் இன்றைய ஒற்றுமையும், மேன்மையும் பிறரோடு ஒப்பிடுகையில் தாழ்ந்து நிற்கின்றது? ஏன் அவர்தம் சமய நெறி தமிழரை ஒற்றுமையாக வாழ வழி வகுக்கவில்லை? ஏன் இறை நெறியில் அறிவார்ந்த இறை வழிபாட்டை விட்டு வெறுமனே கிரியைகளில் உழன்று பணத்தை மூடத்தனமாக செலவழித்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்? ஏன் தமிழரிடையே சாதியப் பிரிவும் அதனால் வரும் ஒற்றுமின்மையும் நீடித்து நிலைக்கின்றது? ஏன் இந்து மதம் இதுநாள் வரை சாதிப் பிரிவை ஒழிக்க இயலவில்லை? நல்லதொரு வாழ்கை நெறிக்கு இந்து மதம் ஒரு வழிகாட்டியாக இருந்திருந்தால் ஏன் அந்த சாதிப் பிரிவினை ஒழிக்க முற்படவில்லை? ஏன் தமிழரிடையே பல தெய்வ வழிபாடும் ஒவ்வொரு பிரிவினருக்கும் வெவ்வேறு தெய்வ வழிபாடும் கிரியைகளும் கொண்டுள்ளனர்? ஏன் அந்த சமய வழிபாடுகளை வைத்துக் கொண்டு தரகர் குழுவும் வியாபார குழுமங்களும் இந்து மதத்தை மூட நம்பிக்கைகள் மலிந்த ஒரு வியாபார பொருளாக்கி விட்டனர்? ஏன் இன்று தமிழரும் பிறரும் அந்த இந்து மதத்தை விட்டுத் தொடர்ந்து வெளியேறிய வண்ணமாக உள்ளனர்? அறிவார்ந்த தமிழன் இதற்கு முதலில் அறிவார்ந்த பதில் கொடுக்கட்டும். மேலும் கேட்க வேண்டிய கேள்விகள் நிறையவே இருக்கின்றன.
Loading...
கேள்விகள் நிறையவே இருந்து என்ன பயன்? நான் கேட்ட கேள்விக்கு பதிலை சொல்லமா எதற்கு எதிர் கேள்வி?
Loading...
நல்ல வேடிக்கையாய் இருக்கிறது தேனீ அவர்களே. நான் உங்களை தேனீ அவர்களே என்கிறேன்; நீங்கள் என்னை அவன் இவன் என்கிறீர்கள்; அதுவும் ஏகதாலதுடன். என்னை தேச துரோக குட்ராவாளி போல் காண்பித்து, நீங்கள் என்னமோ கேப்டன் விஜயகாந்த் அளவுக்கு செயல் படுகிறீர்கள். அதிலும் மற்றவர்கலை எனக்கு எதிராக தூண்டல் வேறு. இதுதான் உங்கள் வீட்டில் சமைத்த சைவ சித்தாந்தமா ? நான் சைவ சித்தாந்தத்தை மதிப்பவன். ஆனால் உங்கள் வீட்டில் சமைத்த சைவ சித்தாந்தத்ததை அல்ல. குமரன் அவர்களே, தாங்களுக்கு தமிழிலேய தகராறான், இதுல ஆங்கில விளக்கம் வேறு. தேனீ அவர்களே, நீங்கள் இப்படி எழுதி உள்ளீர்கல்: “ஏன் இந்து மதம் இதுநாள் வரை சாதிப் பிரிவை ஒழிக்க இயலவில்லை?” தமிழில் தான் உலகத்திலேயே அதிக சாதி பிரிவு உள்ளது; அதுவும் 450 மேல். கிறிஸ்துவர்களில் பெந்தகோஸ், மெதோடிஸ், என்க்ளிகன், ரோமன் கதோலிக் என்று நிறைய பிரிவுகள் உள்ளது. இஸ்லாமியர்களில், ஷியா, சன்னி, குர்டிஷ், அளவிட்ஸ், என்று நிறைய உள்ளது. ஆனால் இந்து மதத்தில் நான்கு மட்டும் தான் உள்ளது. அதுவும் ஆண்களுக்கு மண்டும். பெண்கள் இதில் வருவதில்லை. விஷயம் தெரிய வில்லை என்றால், கடவுளின் காலில் விழுங்கள். இல்லை எண்ணிடம் கேளுங்கள். நான் ஒரே ஒரு கேள்விதான் கேட்டேன். ஏன் திருக்குறளில் காமத்துபால் வருகிறது, அதை ஏன் பொதுவில் போதிபதில்லை என்று ? உடனே கேப்டன் விஜயகாந்த் அளவிற்கு பேசுகிறார் தேனீ அவர்கள். மன்னன் அவர்களே “சிவனையும் ஹரியையும் நம் கடவுள்” இதற்க்கு நன்றி.
Loading...
திலிப்,எனக்கு தமிழ் மொழி தகராறு….இப்போது சில காலமாக கற்றுவருகிறேன்.மேலே உள்ள விளக்கம் நான் சமீபத்தில் படித்தது,செம்பருத்தி நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் அவ்வளவுதான்.தாங்கள் ஏன் அடிக்கடி உணர்ச்சிவசம் படுகிறீர்? தாங்கள் தமிழ் மொழி கற்றவர்…ஏன் இன்னமும் தங்கள் பெயரை தமிழில் எழுத முடியவில்லை?
Loading...
முதலில் மலேசிய தமிழனுக்கும் Dhilip 2க்கும் என் வாழ்த்துக்கள். தமிழை காட்டு மிராண்டி மொழின்னு ஒரு தறுதலை சொல்றான் .. அதை கேள்வி கேட்காமா அவனை தந்தைன்னு வெக்கமில்லாமா சொல்றீங்க . என்ன மானக்கேட்ட பொழைப்பு ? ஏன் தமிழரின் இன்றைய ஒற்றுமையும், மேன்மையும் பிறரோடு ஒப்பிடுகையில் தாழ்ந்து நிற்கின்றது. இதில தேனீக்கு கேள்வி வேற > எப்படிடா இருக்கும் ஒற்றுமை? தமிழனே தாய் மொழியை காலில் போட்டு மிதித்தால் எப்படி உருப்படுவோம் ? வெக்கமா இல்லை ..எதுக்க இந்து மதத்தில் உள்ள தமிழனை மட்டும் தாக்குற ? ஏன்னா அவன்தான் இழிச்சிவாயன்.. கிறிஸ்டியன் தமிழனை கேளு. முஸ்லிம் தமிழனை கேளு .. கேட்டுப்பாரு .. உன்னை உண்டு இல்லைன்னு ஆக்கிடுவான் . தந்தை புத்தி தானே மகனுக்கும் வரும் …..
Loading...
ஜாதிகள் எல்லா மதத்திலும் உள்ளன. இதில் ஹிந்து மதத்திற்கும் மற்ற மதத்திற்கும் என்ன வேறுபாடு என்றால் நாம் ஜாதி என்கிறோம் மற்றவர் பிரிவு அல்லது குளம் என்கின்றனர். அவ்வளவே. எல்லா மதங்களிலும் ஒற்றுமை பற்றிய தகராறு உள்ளது. இதற்க்கு காரணம் மதம் அல்ல மனிதர்களின் எண்ண அலைகளே.இறைவன் மிருகங்களில் கூட ஜாதி / பிரிவு வைத்து தான் படைத்து உள்ளார். மனிதனுக்கும் மிருகத்துக்கும் உள்ள வேறுபாடு , மிருகங்கள் தங்களுக்குள் இனவாரியாக அடித்துக் கொள்வதில் இல்லை. மனிதனோ தாம் ஆறு அறிவு படைத்தவன் என்ற கர்வத்தினால் அடித்துக் கொள்கிறான் . நம் மதம் பல தெய்வங்களை கொண்டது போல் தருவிக்கப் பட்டுள்ளது. இதற்க்கு காரணம் நம் குடும்ப வாழ்வில் உள்ள குடும்ப பாங்கான அமைப்பையே கொண்டு நம் இறைவனையும் பல தெய்வங்களாக காண்கிறோம் வழி படுகிறோம். நம் மதத்தில் முனிவரையோ அல்லது சாமியாரையோ இறைவன் அடிகளாக பார்க்காமல் அவர்களையும் இறைவனுக்கு சம மாக கருதுவதால் தான் பல பிரச்சனைகள். இது நம்மில் காணும் அறியாமையே. மாதா பிதா முன்னறி தெய்வம் , மாதா பிதா, குரு தெய்வம் என்று என்று நம்புகிறோம். எனவே தான் சில பலரை நாம் தெய்வத்திற்கு சமமாக கருதுகிறோம்.
Loading...
தமிழர் இனம் பெற்ற சித்தாந்த சைவம் உயிரைப் பற்றிதான் பேசுமே ஒழிய அவ்வுயிர் கொண்ட உடலைப் பற்றிப் பேசுவதில்லை. இது உயிருள்ள அனைத்து சீவான்மாகளுக்கும் பொருத்தும், நிற்பன, ஊர்வன, பறப்பன, நடப்பன என்ற அனைத்து சீவராசிகளுக்கும் கூறப்பட்டது. ஒவ்வொரு உயிருமே அதன் தன்மையில் ஒரே நிலையை உடையவை. வினைப் பயன் அடிப்படையில் அவை வெவ்வேறு உடலைப் பெறுகின்றன என்று கூறியது சித்தாந்த சைவம். அதனால், உயிர் குலத்தில் பிறப்பின் அடிப்படையில் சாதி பேதம் இல்லை என்று கூறும் ஒரே சமயம் சித்தாந்த சைவம். தமிழர் சமயம் கூறும் நெறியினை அறிந்து அதனையே நமது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு வாழ்வோமானால் சாதி பேதம் தமிழரை விட்டு நீங்கும்.அதற்கு முதலில் தமிழரின் சமய நெறியை நம்மர்வர்கள் உள்வாங்க வேண்டும். அதன் வழி வாழ மனவுறுதி கொள்ள வேண்டும். அதைவிடுத்து அயலார் கொண்டு வந்து நம் மீது திணித்த நெறியைக் கொண்டு அவர்களின் சுய நலத்திற்க்காக வகுத்த குலங்களை நம்மீது திணித்து அதில் இன்னும் வேற்றுமையை வளர விட்டதுதான் இந்து மதத்தின் சாதனை. இதற்குப் போய் திராவிடன் சொன்னான் என்று வேற்றான் மீது பழி சுமத்துவது ஏன்? ஏன், மலேசியாவில் திராவிடக் கட்சிக்காரர்கள் சொல்லித்தான் சாதியத்தை வளர்கின்றீர்களா? சொந்த புத்தி இல்லையா? ஏன் இன்னமும் இந்த சாதியம் அனைத்திலும் தலை விரித்தாடுகிறது? ஆக, தமிழர் இனம் அவர்தம் சமய நெறி பகரும் உயிர் போற்றுதல் என்ற நன்னெறியில் நின்றால் அங்கே சாதியத்திற்கு இடமில்லாமல் போகும். நல்லது ஒன்றை நமது சமய நெறிகளில் உள்ளதை உள்ளவாறு சொல்லும் பொழுது அதனை ஏற்காமால், அச்சாதியத்தை போற்றுவதர்க்காக பிற இனக் குழுக்களை கை நீட்டிக் காட்டுவதேன்? அறிவுரை தமிழருக்குத் தேவை என்பதால் பிறர் கெட்டு வாழ்ந்தால் நாமும் அவர்களைப் போல கெட்டுதான் வாழ வேண்டுமா? நாம் 21-ம் நூற்றாண்டில் வாழ்கிறோம் என்பதை உணர்ந்து திருந்தி வாழ தமிழர் கற்றுக் கொள்ள வேண்டும். அதற்கு நம் சமய நெறிகள் வழி காட்டுவது போல் போற்றி நடந்தால் ஒற்றுமை வரும் நம்மிடையே.
“சாத்திரம் பேசும் சழக்ர்காள் கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்? (திருமுறை 5.60.3)
சாத்திரம் என்பது சமய இலக்கண வரம்புக்கு உட்பட்ட அறிவியலும் அருளியலும் கலந்த நூல்களைக் கற்றோர், தங்கள் பரம்பரையும் சாதியையும் பெரிதாகப் பேசுவதால் ஒரு பயனும் இல்லை என்று சொன்னவர் திருநாவுக்கரசர். இவ்வாறு சொல்லியது 1,300 வருடங்களுக்கு முன்.
ஏன் தமிழருக்கு இன்னும் அறிவு விளக்கம் பெற முடியவில்லை. வெகு காலமாக நம்மிடையே இருக்கும் சமய நெறிகளைப் போற்றத் தெரியாமல் அயலார் அவர்தம் பண்பாட்டை நம் மீது திணித்தைக் கூட உணர முடியாமால் நம் அறிவை மறைத்து வைத்திருப்பது இந்து மதம் என்ற வைதிக மதம். இதனை அறிந்து திருந்துங்கள் தமிழர்களே. தமிழர் சமய நெறியை அறிந்து அதன் வழி நில்லுங்கள் நாம் உய்வோம். நம்மிடையே ஒற்றுமை வளரும்.
Loading...
எதற்கு தமிழர் சமய நெறி அறியாது மாறிப் போனவர்களைக் கேள்விக் கேட்க வேண்டும்? இந்து என்ற வைதிக மத நெறிகளை வெறுத்துப் போனார்கள் அவர்கள். குறை அவர்களிடம் இல்லை. நம் சமய நெறிகளை நாம் கற்று அறியாமல் வாழ்வதும், அதனால் மேலோர் என்றும் கீழோர் என்றும் பாகுபாடு காட்டுவதும் நமது அறியாமை. நம்மை நாம் திருத்திக் கொள்வோம். மாறிப் போனவர்களைப் பற்றி கவலை நமக்கு ஏன்? அவர்களை ஏன் இங்கு கொண்டு வந்து நிறுத்த வேண்டும்?
Loading...
தமிழரின் சமய நெறிகளை அறியாது, அதனைக் கொச்சைப் படுத்தி, அது தப்பு என்று உணர்த்திய பிறகும், சொன்னதை மீட்டுக் கொள்ள மாட்டேன் எனும் தற்குறிக்கு மரியாதை ஒரு கேடா?
Loading...
திலிப் 2 அவர்களே எனக்கு உங்களை தொடர்பு கொள்ள ஆவலாக இருக்கிறது தயவு செய்து எனக்கு உங்கள் மின் முகவரியை தர முடியுமா ?
Loading...
கடைசியில் நான் கெட்டவன் என்று முடித்திருக்கிறார் நண்பர் தேனீ அவர்கள். மரியாதை கேட்டும் தர மறுக்கிறார்; பாரவாயில்லை. மன்னன் அவர்களே, நீங்கள் கல கட்சிதமாக எழுதியுள்ளீர்; பாராட்டுக்கள். எனக்கே சிலநேரங்களில் அப்படி வராது. சரி விசயத்திற்கு வருகிறேன். கண்ணப்பநாயனார் அவர்கள் கல்லில் தேனை கலந்து சிவபெருமானுக்கு (சிவலிங்கதிற்கு) வைத்து வணங்கி உள்ளார். மேலும் மான் இறைச்சி வைத்து படைத்தது, வணங்கியும் உள்ளார். அவர் 63 நாயன்மார்களில் ஒருவர். சிவத்தை கொண்ட சைவர்கள், சுத்த சைவம் என்பார்கள்; தமிழர்கள். இங்கே சைவம் என்றால் என்ன என்று பார்க்க வேண்டும். திருவள்ளுவ பெருங்தகை இப்படி கூருகிரார்: கொள்ளாள் புலாலை மறுத்தானை எல்லா உயிரும் கைக்கூப்பி தொழும். ஒரு உயிரை கொன்று தின்றாதவனை, எல்லா உயிரும் கைகூப்பி தொழும். அப்படி பார்தால்லும், செடி கொடி இலை என்று எல்லாதிற்கும் உயிர் உள்ளது. அதனால் தான் வளர்கிறது. இரும்புக்கு உயிர் இல்லை; எனவே அது வளர்வது இல்லை. நண்டுக்கு ரத்தம் பச்சை கலர். இப்படி பல குழப்படிக்கு மத்தியில், காஷ்மீரில் இருக்கும் சைவர்கள், மீன்களை கடல் புஷ்பம் என்று சாப்பிடுகிறார்கள். எனவே, சைவம் எது என்று நண்பர்கள் விளக்கம் தர வேண்டுகிறேன். தேனீ அவர்களை தவிர காரணம் அவர் பிடித்த முயல் சைவம் என்பார்.
Loading...
குமரன் அவர்களே, உங்களுக்காக, முதல் முறையாக, என் புனை பெயரை தமிழில் எழுதிகிறேன். திலிப் இரண்டு! மஞ்சுளா, நான் என் ஈமெயில் தருவதை தவிர்க்கிறேன், விளக்க முடிய வில்லை; மனித்து கொள்ளுங்கள்.
Loading...
திலிப்! நான் சமைக்க தோட்டத்தில் 2 கத்திரிக்காய்,2 தக்காளி,சில காய்கறிகளை பறித்து சமைத்தால் என் பசி அடங்கி விடும்.அந்த செடி கொடிகள் ஓரிரு வாரத்தில் மீண்டும் காய்த்திருக்கும்.அதே போலே புலால் புசிப்பவர்கள் பாதி கோழி,பாதி ஆடு அல்லது வேறு ஏதாவது வளர்ப்பு பிராணியை வெட்டி சமைத்து சாப்பிட்ட பிறகு அதே பிராணி தொடர்ந்து உயிர் வாழ முடியாது!
Loading...
இந்துக்களிடம் இருக்கும் சாதி பிரிவுக்குப் பிறப்பின் அடிப்படையில் பொருள் கொள்வதும், பிற மதத்தவரிடம் இருக்கும் பிரிவுக்கு அவர்தம் கொண்ட சமய நெறி வேற்றுமைகளின் அடிப்படையில் பொருள் கொள்ளப்பட்டது என்பதை கூட பகுத்தறிய முடியாது போனால் தவறு யாரிடம் உள்ளது? தமிழர், பல காலமாக சிந்தித்துத் தெளிய மறந்து விட்டது என்பதற்கு இப்படிப் பட்ட கருத்தே தக்கச் சான்று.
Loading...
தமிழர் சமய நெறியை நன்கு கற்றுத் தெளிந்தவருக்குக் கண்ணப்ப நாயனாரின் வரலாற்றில் எவ்வொரு சந்தேகமும் வராது. அவ்வாறு அல்லாதோருக்கு மாமிச உணவு உண்பதற்கும் அதனை இறைவனுக்குப் படைப்பதற்கும் கண்ணப்பரை காரண காரியமாகச் சொல்வது முழு அறியாமையேயாம். அடுத்து கண்ணப்ப நாயனாரின் வரலாற்றைச் சற்று அறிவோம். செம்பருத்தி வழியாக எம் தமிழருக்குத் தமிழரின் சமய நெறியை உணர்த்துவது யாம் செய்யும் சிவ புண்ணியத்தின் தொடர்ச்சியாகும். தொடரும்.
Loading...
சனவரி, 2016 மாத சிவனருள் இதழில், “அறுபத்து மூவரே நாயன்மார்! அறுபத்து நான்கு அல்ல!” என்ற தலைப்பில் முகப்புக் கட்டுரை ஒன்றை வரைந்துள்ளார் சித்தாந்தச் செல்வர், சைவ சிகாமணி முனைவர் நாகப்பன் ஆறுமுகம் அவர்கள். அக்கட்டுரையை இங்கே முழுமையாக பதிவு செய்து விட்டு கண்ணப்ப நாயனாரின் வரலாற்றில் இருக்கும் பசு கரணம் மற்றும் பதி கரணத்தைப் பற்றி விளக்குவோம்.
“அறுபத்து மூவரே நாயன்மார்! அறுபத்து நான்கு அல்ல!”
“சைவ சமய அடியார்களில் அறுபத்து மூவர் நாயன்மார் என்னும் சிறப்பு பெற்றனர். இச்சிறப்பு சிவபெருமானின் திருவருளால் அருளப் பெற்றது. அறுபத்து மூவருக்கு மேல் அறுபத்து நாலாமவர் எவரும் இல்லை.
அண்மைக் காலத்தில் சமயச் சொற்பொழிவாளர் கிருபானந்த வாரியாரை அறுபத்து நாலாம் நாயன்மார் என்று சிலர் பேசியும் எழுதியும் வருகின்றனர். இது முற்றிலும் தவறு.
கிருபானந்த வாரியார் சிறந்த சொற்பொழிவாளர், சமய அறிவு நிரம்பப் பெற்றவர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இந்தத் தகுதியை மட்டுமே நாயன்மாருக்குத் தகுதியாக கொண்டால் நூறு, இருநூறு என்று நாயன்மார் எண்ணிக்கை அளவு இன்றிப் பெருகும். அளவு பெருகினால் தகுதி தாழ்ந்து போகும். தனக்கு வேண்டியவரை இனம், சாதி பார்த்துக் கூட நாயன்மார் வரிசையில் சேர்த்துவிடத் தமிழர் முயற்சி செய்வர். எனவே அறுபத்து மூவருக்கு மேல் நாயன்மார் எண்ணிக்கையை உயர்த்துவது சைவ மரபுக்கு முரணும் இழுக்குமாகும்.
நாயன்மாருக்கு என்ன இலக்கணம் என்று ஆராய்ந்து பார்த்தால் அறுபத்து மூவருக்கு மேல் நாயன்மார் ஏன் இல்லை என்று அறிந்து கொள்ளலாம்.
1. நாயன்மார் சிவபெருமானை மட்டுமே வழிபட்டனர். சிவனைத் தவிர பிற தெய்வங்களை வழிபடவில்லை.
2. நாயன்மார் நல்ல செல்வ நிலயில் இருந்து சிவப்பணிக்காகவே தம் செல்வங்களை இழந்தனர்.
3. செல்வம் அனைத்தையும் இழந்த நிலையிலும் சிவ வழிபாட்டையும் சிவத் தொண்டையும் கைவிடாமல் செய்தனர்.
4. சிவ வழிபாட்டுக்கும் சிவ தொண்டுக்கும் தம் உயிரையும் ஈந்தனர். இறைவன் தோன்றி அவர்களை மீண்டும் உயிர்பித்தான். வீடுபேறு அருளினான்.
5. நாயன்மார்களை இறைவன் தேர்ந்து நமக்கு அறிவித்தான். சுந்தர மூர்த்தி நாயானார் திருத் தொண்டர் தொகை பதிகத்தில் அவர்களின் சிறப்பை அடைமொழியாகக் கொண்டு பதிவு செய்தார். இதனை அடிப்படையாகக் கொண்டே சேக்கிழாரும் திருத்தொண்டர் புராணம் பாடினார்.
இக்காரணங்களால் அறுபத்து மூவருக்கு மேல் எவரும் நாயன்மார் ஆகவில்லை. நாயன்மார் வரிசையில் அமரும் தகுதி முழுமையும் பெற்றிருக்கும் மாணிக்கவாசகர் கூட நாயன்மார் வரிசையில் இடம் பெறவில்லை. கிருபாந்த வாரியாரை நாயன்மார் என்று கூறுவதற்கு மேலே குறிப்ப்டப்பெற்ற ஐந்து தகுதிகள் பொருந்தவில்லை என்பது வெளிப்படை.
எனவே அறுபத்து மூவருக்கு மேல் நாயன்மார் எவரும் இல்லை. அறுபத்து மூன்று நாயன்மார் சைவருக்கு குருமார் ஆவர். நமது சமய வாழ்வுக்கு எடுத்துக் காட்டாக வழிகாட்டுவோர் நாயன்மார். நாயன்மாரைப் போற்றி இறைவன் திருவருளையும் திருவடியையும் அடைவோம். சிவ சிவ.
– முனைவர் நாகப்பன் ஆறுமுகம்
Loading...
குமரன் அவர்களே, நம் நகம் மற்றும் முடியை வெட்டினாலும் அவை மீண்டும் வளரும். அது போலவே தாவர வகைகளும். இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில்,நீங்கள் பறித்த காய் கறி மீண்டும் பறித்த இடத்தில் காயித்திருக்க வாய்ப்பு இருக்காது. ஆனால் செடியின் மற்ற பகுதியில் காயித்திருக்கும். அதுபோலவே மனித மிருக உடலில் மற்ற உறுப்புகளை வெட்டினாலும் மீண்டு வளராது. திரு திலீப்பின் வாதத்தில் உண்மை உள்ளது. ஒரு குழந்தைக்கு எப்படி தாய் தந்தை முக்கியமோ அதுபோலவே நம் சைவமும் வைணமும் நம் மதத்திற்கு. அரியும் அறனும் ஒன்று . முதலில் இதை நினைவில் நிறுத்துங்கள். எல்லாம் சிவ மயம் என்ற போதிலும் அந்த சிவனே பெருமாளை தான் நினைக்கிறார் தாம் அவதாரமாக இருக்கும் பொழுதும். இதையே நம் புராணங்கள் கூறுகின்றன. தமிழன் என்பது இனம் அன்றி மதம் அல்ல. இறைவன் யாவரையும் ஒரு நிலையில் தான் பார்கிறார்.
Loading...
இந்துக்களுக்கு ஜாதி பிரிவு உண்டு அதே போல மத்த மதத்திருக்கும் பிரிவு உண்டுன்னு mannan .. அவர்கள் தெளிவா சொல்லிட்டார் , அப்ப கூட இந்துவ இழிவுபடுத்துவிலே தீவிரமா இருக்கார் அறிவாளர் தேனீ … மத்த மதம் தான் அவருக்கு உயர்வு .. மலேசியா தமிழன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம கண்டதை பேசி எரிச்சல் அடைகிறார்..
Loading...
மன்னா, எனக்கு உணவு கொடுத்த தாவரத்தை நான் கொல்லவில்லை!… உயிர் கொல்லாமைக்கு என் விளக்கம்.அரியும் அறனும் ஒன்று,தமிழன் என்பது இனம்,இறைவன் எல்லா உயிரினங்களையும் ஒரே நிலையில் தான் பார்க்கிறார்….என்பதற்கும் மாற்று காருத்து இல்லை…. (தங்கள் பெயரை தமிழில் எழுதினால் இன்னும் சிறப்பு – இது என் தனிப்பட்ட கருத்து)
Loading...
மன்னன் தெலுங்கர்களுக்கு பெருமாளை வணகவேண்டுமேன்றால் அது அவர்களின் உரிமை .. தமிழர்கள் சைவசமய நெறியாளர்கள் .. ஆரியர்களுக்கும் அவர்களோடு இரண்டற கலந்த தெலுங்கர்களும் வைணவத்தை உயர்த்தி பிடிப்பதில் தப்பில்லை .. ஆனால் தமிழர்களுக்கு அறிவுரைகூற கிளம்பகுடாது .. தமிழர்ரோடு ஒட்டிஉறவாடி கலாசாரம் மொழி வழிபாட்டுக்கு குறுக்கே நிக்கக்கூடாது …. நீங்க ராமனை / பெருமாளை /ஆன்சநெயரை/ சக்கம்மாவை வணங்குங்க அது உங்களது உரிமை .. தமிழர் விசயத்தில் தலையிடாதிர் .
Loading...
தேனீ அவர்கள் பொன்னான நேரத்தை வீணடிக்காதிர்கள்.. சைவ சமய வழிபாடு திருமுறை தேவார விளங்கங்களோடு சிறு சிறு கட்டுரையாக செம்பருத்திக்கு எழுதுங்கள் .. முடிந்தால் ஆங்கிலத்திலும் எழுதி செம்பருத்தி ஆசிரியருக்கு அனுப்புங்கள் .. தினசரி நாளிதழ்களை எல்லாம் ஆரிய கொண்டு மசாலா வழிபாடு பாபா ரத ஊர்வல செய்திதான் ..தமிழர்களை தமிழ் நாளிதழ் தவறாக மூட பழக்கவழக்கங்களை போதிக்கிறதா ! இந்தமண்ணில் த .நேசன் பத்திரிக்கை முதலாளியம்மா இந்த பாபா பிரசாரத்தை மேட்கொண்டார்கள் வெற்றியும் பெற்றார்கள் .. இன்னுமொரு தோழர் பத்திரிக்கை காரங்க எப்போதும் தமிழக திருட்டு கொள்ளைகார வடுகட்சிக்கு மலேசிய மண்ணிலிருந்து சால்ரா அடிக்கிறதே பத்திரிக்கை தர்மம் ! தமிழக தமிழர் தேசிய கட்சிகளையும் அரசியலையும் மழுங்கடிகிரார்கள்… தமிழ் இனத்தின்மேல் பற்றுள்ள எவனும் இவர்களின் பத்திரிகையை வாங்கமாட்டன் ..தமிழ் மீது பற்றும் இனத்தின் மீது பாசாமும் கொண்ட ஒவ்வொரு இஸ்லாமிய தமிழனும் என் சகோதரனே ..ஆரதளுவுவேன் .. நாளும்பொழுதும் இனத்தையும் மொழியையும் சமயத்தையும் அழிக்க கிந்து என்கிறபோர்வையில் வரும் ஆரியனையும் அவர்களின் அடிவருடிகள் என்றும் தமிழர்களுக்கு எதிரியே .. தமிழர்களே எதிரியை விட அருகில் இருந்து உறவாடி துரோகம் செய்பவனிடம் எப்பொழுதும் எச்சரிக்கையாய் இரு ..
Loading...
ஆதியோகி 1 hr · மற்ற மதத்தினரை விட இந்துக்களே மிகவும் மகிழ்ச்சியானவர்கள்! சில தினங்களுக்கு முன், லண்டனின் தேசிய ஆய்வறிக்கை மையம் (UK Office for National Statistics) எந்த மதத்தினர் மிகவும் மகிழ்ச்சியானவர்கள் என்ற அடிப்படையில் பரவலான ஓர் ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின் முடிவாக, இந்துக்களே மிகவும் மகிழ்ச்சியானவர்கள் என அந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இந்த ஆய்வின் முடிவுகள் லண்டன் பத்திரிக்கைகளில் பரவலாக வெளிவந்தன. ஹஃபிங்டன் பத்திரிக்கையாளர், கத்ரின் சினவ்டவுன், ”மற்ற மதத்தினரை காட்டிலும் இந்து மதத்தினரே மிகவும் மகிழ்ச்சியானவர்களாக திகழ்கின்றனர்” என ஆய்வின் முடிவை தன் செய்தியுரையில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். இந்துக்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதன் பின்னால் அவர்களின் உடல்நலம், பாதுகாப்புமுறை மற்றும் வாழ்க்கைத்தரம் ஆகியவை அடங்கியுள்ளன. இதனால் இந்துக்களே உடல்நலமிக்கவர்களாகவும், லண்டனுக்கு எந்தவொரு தீமைகள் விளைவிக்காதவர்களாகவும், வாழ்க்கைத் தரத்தில் உயர்ந்தவர்களாகவும் திகழ்கின்றனர். இந்துக்கள் உடல்நலத்திற்கும் மனநலத்திற்கும் யோகாசனப் பயிற்சியும் தியானமும் மேற்கொள்வர். இந்துக்களின் உணவுமுறையும் மிகவும் ஆரோக்கியமானதாகவும், இதமளிப்பதாகவும் அமைந்துள்ளது. இந்துக்கள் கடைப்பிடிக்கும் தர்மநியதி உலகவாழ்க்கைக்கு நன்மை விளைவிப்பதாகவும் எந்தவகையிலும் அது மற்ற அப்பாவி உயிர்களைக் கொல்லவும் தூண்டுவதில்லை. இதனால் இந்துக்களால் லண்டனுக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் கிடையாது. மேலும், இந்த ஆய்வறிக்கையின் படி இந்துக்களுக்கு அடுத்தபடியாக பௌத்தர்கள், கிறிஸ்துவர்கள் மற்றும் யூதர்கள் உள்ளனர். இறுதியாக மகிழ்ச்சி குறைந்த மதத்தினராக இஸ்லாமியர்கள் உள்ளனர். மதமற்றவர்களும் மகிழ்ச்சி குறைந்தவர்களாக உள்ளனர். m.huffpost.com/uk/entry/9138076
தமிழர் எழுச்சிப்பறை, உம்மை போன்று நானும் தமிழனே. ஆனால் உம்மை போன்று வெறியன் அல்லவே. யார் சொன்னது தமிழர் அனைவரும் சைவ சமயம் என்று… தவறு. உமது இந்த விவாதத்தால் நம் தமிழ் இனத்தை கேவலம் செய்யாதீர். நீங்கள் போடும் இந்த கூப்பாடு அந்த சிவனுக்கே உடன்படாது. எப்ப்போது நீர் ஹிந்து மதத்தை சைவம் வைஷ்ணவம் என்று பிரித்து கூற முற்பட்டிரோ அப்போதே நீர் ஒரும் வெறும் …..என்று சொல்லாமல் சொல்லி விட்டீர். தமிழர் என்றால் திராவிடன் என்று அர்த்தமில்லை. தமிழ் நாட்டில் தான் மட்டமான திராவிட மாந்தை திரிகிறது என்றால் மலைய்சியவிலுமா? எம்மை பொறுத்தவரை சிவனையும் பெருமாளையும் வேறாக கருதுபவர் மூடரே. உம்மை போன்ற மட்டமான தமிழர்களால் நம் ஹிந்து மதம் படும் பாடு பெரும்பாடு தான்.
Loading...
குமரா நன்றி. . தங்களின் விருப்பம் போல் யாம் எம் பெயரை தமிழில் தந்து விட்டோம் .
Loading...
தேனியின் சிவ சித்தந்தர்க்கு மாற்று கருத்து இல்லை. ஆனால் அவரின் கருத்தும் அதை சொல்லும் முறையும் அழகன்று.அவர் தம் சைவ சித்தாந்த்தடிற்கு சான்றாக 63 நாயன்மார்களை வைத்து விவாதிப்பது அழகே. அதற்காக வைஷ்ணவத்தை இழிவாக பேசுவது முறையாகாது. எஹ்னெனில் அறனும் அறியும் ஒன்றே.
Loading...
தமிழர் எழுச்சிப்பறை, உம்மை போன்று நானும் தமிழனே. ஆனால் உம்மை போன்று வெறியன் அல்லவே. யார் சொன்னது தமிழர் அனைவரும் சைவ சமயம் என்று… தவறு. உமது இந்த விவாதத்தால் நம் தமிழ் இனத்தை கேவலம் செய்யாதீர். நீங்கள் போடும் இந்த கூப்பாடு அந்த சிவனுக்கே உடன்படாது. எப்ப்போது நீர் ஹிந்து மதத்தை சைவம் வைஷ்ணவம் என்று பிரித்து கூற முற்பட்டிரோ அப்போதே நீர் ஒரும் வெறும் …… என்று சொல்லாமல் சொல்லி விட்டீர்.
Loading...
ஆமாயா நாம் தமிழ் வெறியர் .சைவவமைய வெறியர் .. அதனால்தான் அடுத்த இனத்துக்குள் ஊடுருவி அந்த இன மொழி சமயத்தை நாசம் பண்ணி நடுத்தெருவில் வைத்துள்ளோம் ! இந்த மலேசிய மண்ணில் தமிழர்களிடத்தில் என்னமா அன்னியர்கள் சமய பிசினஸ் பண்ணுகிறார்கள் .. இங்குள்ள் இந்துசமய விற்பனர்கள் 100/95% ஒரு இனம்தான் முன்னிலை வகிக்கிறது ..சரியாக அவதானித்தால் புரியும் ..சரி தமிழர்கள் வைஷ்ணவர்களும் இருக்கிறார்கள் ..அங்கு பூசை புனஸ்காரம் தெலுங்கர்கள் அல்லது தெலுங்கு பார்பனர்கள் மட்டுமே ..என்ன ஒரு இனவெறி ..எந்த தமிழன் நாமம் போட்டுட்டு அலைகிறான் ? ராமனை அதிகமாக தெலுங்கர்கள்தான் வழிபடுவார்கள் .. மலையாளிகளோ தமிழர்களோ வழிபடுவது மிகவும் அரிது .. முருகனை இந்து என்கிற வடநாட்டவர்கள் வழிபடுவார்களா வெங்காயம் பதில் சொல்லு ? இல்ல எங்கயாச்சும் ஆலயம் கட்டி வச்சிருகிரார்களா ? கிந்து இந்தியா என்கிற பெயரை சூட்டியவன் வெள்ளைக்காரன் ..
Loading...
தமிழர் எழுச்சிப்பறை வேண்டுகோளுக்கு இணங்க இப்பகுதியில் இதுவே எமது இறுதி கருத்தாக இருக்கும்.
கண்ணப்ப நாயனார் வரலாற்றில் அவரின் இறுதி 6 நாட்களே அதி முக்கியத்துவம் வாய்ந்தவை. திண்ணப்பனென்ற கண்ணப்ப நாயனார் வேடுவர் குலத்தில் பிறந்து குறிஞ்சி நிலப் பகுதியில் வாழ்ந்தவர். அவர் முருக வழிபாட்டைக் கொண்டவர். அக்காலத்தில் குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த மக்கள் முருக வழிபாட்டை கொண்டிருந்தனர் என்பதனை சேக்கிழார், “முருகுஅலர் அலங்கல் செவ்வேள்; முருகவேள் முன்றில் சென்று; பரவுதல் செய்து நாளும்; பராய்க் கடன் நெறியில் நிற்பார்” என்று தெரிவிக்கிறார். மேலும், அவர்தம் வழிபாட்டில் “வாரணச் சேவலோடும்; வரிமயில் குலங்கள் விட்டுத்; …. புகழ்புரி குரவை தூங்கப்; பேர் அணங்கு ஆடல் செய்து பெருவிழா எடுத்த பின்றை” என்று கூறுவதால், அவ்வழிபாட்டில் புலால் படைத்து குரவைக் கூத்துடன், வெறியட்டாமும் கொண்டு வழிபடுவர் என்பது தெளிவு. இவ்வகையில் வந்த திண்ணன், ஒரு நாள் கன்னி வேட்டைக்குச் செல்லும் பொழுது திருக்காளத்தி மலை உச்சியைப் பார்த்து தன் நண்பனிடம் வினவ அங்கே குடுமித் தேவர் உள்ளார் என்று கூறியவுடன், தன்னையுமறியாது மலை உச்சியை நோக்கி ஓடுகிறார். அங்கே சிவலிங்கம் ஒன்று எவ்வொரு பாதுகாப்பும் இன்றி இருப்பதைப் பார்த்து அப்பெருமான் மீது அன்பு கொண்டு அச்சிவலிங்கத்தைப் பாதுகாக்கவும், தம் குல வழக்கப்படி புலால் உணவை படைத்து வருகின்றார். எம்பெருமான் அவர்தம் அன்பை மெச்சி உலகத்தாருக்கு அவரை அடையாளங்காட்ட திருவுள்ளம் கொண்டு 6-வது நாள் சிவலிங்கத் திருமேனியில் வலது கண் பகுதியில் உதிரம் கொட்டச் செய்து, அதனை நிறுத்த முற்பட்டு கண்ணப்ப நாயானார் தனது வலகண்ணை பெயர்த்து சிவலிங்கத் திருமேனி மீது பதிக்க உதிரம் நின்று, மீண்டும் இடது கண் பக்கம் உதிரம் கொட்ட ஆரம்பிக்கிறது. அதற்காக தனது இடது கண்ணையும் பெயர்க்க முட்பட்ட போதே இறைவன் தோன்றி தடுத்தாட்க் கொள்கிறார். இதில் முதல் 5 நாட்கள் கண்ணப்பர் செய்த வழிபாடு பசுகரணம் எனப்படும். மாந்தர் தன் சிற்றறிவால் ஐம்புலன்களையும் அந்தக்கரணங்களையும் கொண்டு செயல்படும் முறை. இது அவர்தம் குல வழக்கப் படி செய்த வழிபாடாகும். 6-வது நாள் அவர் செய்த செயல் பதி கரணமாகும். இறைவனே அவரை ஆட்கோண்டு அவ்வாறு செய்ய வைத்தமையால் தான் செய்வது அறியாது சிவன் செயலே என்று பெறப்படுவது பதி கரணமாகும். இவ்வாறு நடந்தது கண்ணப்ப நாயனாரின் முன் தவப் பயன் என்றும் சேக்கிழார் விளக்குவார். முப்பிறவியில் சிவ சம்பந்தமுடையவர் என்பது இதன் பொருளாகும். ஆகையால், கண்ணப்ப நாயனாரை மேற்கோள் காட்டி மாமிசம் படைத்து வழிபாடு செய்வது சைவத்தில் ஏற்புடையது என்பது பிழையான கருத்தாகும். இன்றோ முருக வழிபாட்டில் அவ்வாறான மாமிச உணவு படைத்தல் என்பதும் களைந்து விட்டதை நாம் அறிவோமே. அப்புறம் ஏன் தமிழர் வழிபாட்டு முறையை அறியாதவர் போல் தேவை இல்லாத கருத்துட்டத்தை இங்கு பதிவு செய்ய வேண்டும்? இவ்வாறான கருத்திற்கே எமது ஆட்சேபத்தைத் தெரிவித்து தமிழர் சமய நெறியினை விளக்க முற்பட்டது. இதில் ஆதங்கமும் கலந்து இருந்ததின் காரணம் தன்னை இந்து என்று சொல்லிக் கொண்டவரே தமிழரின் உண்மை சமய நெறி அறியாமல் ஆரிய புராணக் கூற்றுகளையும், அயலார் கொடுத்த தப்பான விளக்கங்களையும் கொண்டு கட்டுரைத் தலைப்புக்குச் சற்றும் சம்பந்தம் இல்லாமல் இங்கே அவர்தம் கருத்தைப் பதிவு செய்ததுதான். இனியாவது அவர் திருந்தி வாழ்வாராக.
Loading...
“அவ்வழிபாட்டில் புலால் படைத்து குரவைக் கூத்துடன், வெறியட்டாமும் கொண்டு வழிபடுவர் என்பது தெளிவு.” முதலில் நம் முதுகின் அழுக்கை சுத்தம் செய்ய வேண்டும். அடுத்தவரை சொரண்டுகிறேன் என்கிறார் ஒருவர்…..”தம் குல வழக்கப்படி புலால் உணவை படைத்து வருகின்றார்” புலால் படைக்கும் பொழுது குலம் தேவைபடுகிறது….”இன்றோ முருக வழிபாட்டில் அவ்வாறான மாமிச உணவு படைத்தல் என்பதும் களைந்து விட்டதை நாம் அறிவோமே.”….முருக வழிப்பாட்டில், அதர்வண தெய்வமான இடும்பனுக்கு, தைபூசதிர்க்கு பிறகு 16 வது நாள் இறைச்சி கறி கலபார்கலே ? தெரியாதா ? முருகர் அதர்வண தெய்வமான இடும்பனை, தன் காவலாளியாக வைத்துள்ளாரே, நேரிடியாக அவரிடமே சைவத்தை போதிக்கலாமே? என்னவே, அடுத்தவரின் வாழ்க்கையை விமர்சனம் செய்வதை நிறுத்துங்கள். “உங்கள் மனைவி அழகானவள் என்று சொல்ல உங்களுக்கு எல்லா உரிமைகளும் உள்ளது. ஆனால் அடுத்தவரின் மனைவியை பற்றி அல்ல” – கவியரசர் கண்ணதாசன் இப்படிதான் சொல்கிறார்.
Loading...
அன்பே சிவம் என்று கூறும் வாயில் இப்போது தான் ஒரு வெறியர் என்று கூறுவது வேடிக்கை. சிவ புராணம் படித்து முருகன் ஏன் தென்முக கடவுள் என்று அறிவது சிறப்பு.. மலையாளிகள் ராமரை வழிபடவில்லையா ? பிறகு குருவாயூர் குருவாயுரப்பன் மற்றும் திருவனத்தபுரம் பத்மநாபன் யாராம் ? ஹ…ஹ… சரி போகட்டும். நம் மதம் எப்போதும் மாமிச உணவுவகைகளை இறைவனுக்கு படைக்க சொன்னதில்லை. கண்ணப்பறை போன்று குல அடிப்படையில் படைத்த புலாலையே இறைவன் அவரின் பக்தியை பாராட்டி ஆட்கொண்டார் . இது கான்னப்பரின் தூய பக்தியினை காட்டுகிறது. அதற்காக நாமும் புலால் படைத்தது வழிபடலாம் என்று அர்த்தமாகாது.
Loading...
முருகனுக்கு , ஒரிசா , மேற்கு வங்காளம் மற்றும் ஹிமாச்சல் மாநிலங்களில் கோவில் உள்ளன. சிவனை போற்றும் பக்தர் அவர்தம் மகனான முகனை வழிபட மாட்டாரா!!1 ஹிந்து மதம் சமுத்திரம் போன்றது . அதன் அருமையை உணர்வதற்கு அவ்வளவு எளிதல்ல .
Loading...
ஒரிசாவில் பலஆயிரகணக்கான தமிழர்கள் அங்கெ வாழ்கிறார்கள் ..மற்ற மாநிலங்களிலும் வாழலாம் .. – தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்ந்தார்களோ அங்கெல்லாம் சென்று ஆக்கிரமிப்பது வடுக வரலாறு .. அதிலும் சொந்த அடையாளத்தை மறைத்தே ஆக்கிரமிப்பது தனிச்சிறப்பு ! போங்க நைனா போய் திசைமாறும் வைணவர்களை சங்கத்தில் இணைத்து இந்துமதத்தை பெருக்குங்கள் …எங்க நேரத்தை வீணடிகாதீர்கள்.. நன்றி வணக்கம்
Loading...
மனிதனின் உணவு செரிமான வழியை முதலில் புரிந்து கொள்ளுங்கள். ஆடு இல்லை தலை மட்டும் உண்ணும் ஒரு பிராணி; அல்லது ஒரு உயிரினம். புலி சிங்கம் ரத்த உணவைதான் சாப்பிடும். ஆனால் உலகில் உள்ள அணைத்து மனிதர்களும், காய்கறி, தாவர இறைச்சி, இப்படி வகைவகையான உணவுகளை செரிமானாம் செய்யும் வயிறு கடவுள் படைத்திருக்கிறார்… உலகத்தில் இருக்கும் 800 கோடி மக்களில், 10 கோடி தமிழர்கள். அதிலும் ஒரு சிறு சாரர் சொல்கிறார்கள், கடவுள் சைவம் என்ற உயிர் உள்ள காய்கறிகளை, தாவர வகைகளை மட்டும் சாப்பிட சொன்னார் என்று. அந்த காய் கறிகளை பறிக்கும் போதும், வெட்டும் போதும், அவைகளுக்கு வலிக்கும். அவைகளின் ரத்தம் வெள்ளை. நம் காது 20-20 கிலோ ஹெர்ட்ழ்(HERTZ) ஒலி மட்டும் கேட்கும் தன்மையுடையது. அவைகள் அழும் பொழுது, 10 ஹெர்ட்ழ் ஒலிக்கு கீழ் ஒலி எழுப்பும். நமக்கு விளங்காது. எனவே அவை அழவில்லை என்பது, எப்படி அறிவுடைமை ஆகும் ?
Loading...
ஹ…ஹ… தமிழர் எழுச்சிப்பறை உம்மை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது. வடக்கில் எங்கே கந்தன் கோவில் என்றீர் , எங்கு உள்ளது என்று குறிப்பிட்டேன். இப்போது அங்கு தமிழர்கள் வாழ்கிறார்கள் என்று கூறுகிறீர் ..நீர் எந்த அளவிற்கு சிவனையும் சைவத்தையும் பின்பற்றுகிறீர் என்று தெரிகிறது. சரி போகிறது. சிவனையாவது நல்ல முறையில் வழிபட்டு வாருங்கள்.
Loading...
இறைவன் நமக்கு வேண்டிய அனைத்தையும் நம்மிடமே வழங்கி விட்டார்,புலன்கள் ஐந்தும் அவ்வாரே. x – men சக்திகள் எல்லாம் சித்தர்கள் நிலை,உயிர் கொல்லாமை சாதாரண மனிதனின் ஐம்புலன்களுக்கு (பஞ்ச புதங்களுக்கு) https://en.wikipedia.org/wiki/Tattva_(Siddha_Medicine) உற்பட்டது.திலிப் ஐயா…இதை தங்களுக்கு நான் சொல்ல செய்ய தேவை இல்லை! நமது விவாதம் இங்கே மனிதனுக்கு தன்னையே உணவாக அளித்த தாவரம் இறக்குமா? அல்லது பிராணி இறக்குமா?
Loading...
தைபூசமும் முடிந்து விட்டது. இன்னும் பொங்கலை கட்டிக்கிட்டு அழுவதை பார்த்தால் சிரிப்புதான் வருது.
Loading...
பிராணிகள் குட்டி போட்டு கொண்டே இருக்கும். அதுதான் அதனின் வேலை. குமரன் அவர்களே, எல்லா உயிரினங்களுக்கும் வேலை உண்டு. பேய்களுக்கும் கூட. இந்து மதம் மிகவும் தத்ருபமாக விளக்குகிறது. உங்கள் வாததிர்க்கே வருகிறேன். எங்கே ஒரு புலியிடம் சென்று, கடவுள் நம்மை சைவமாக சாப்பிட சொல்கிரா என்று சொல்லுங்கள் பாப்போம் ?
Loading...
தமிழர் சமயத்தை உள்வாங்கி கொண்டு அதில் ஆரியன் பல பல சேர்க்கைகளை சேர்த்து உருவாக்கியதுதான் தற்பொழுது உள்ள இந்து சமயம் . ஆரியனின் கட்டமைப்ப்பு எப்படி என்றால் , எதிரியை பலத்தால் எதிர்க்க முடியாவிடில் அவனை உறவாடி கவிழ்ப்பது . இதற்க்கு நல்ல உதாரணம் , சில காலங்களுக்கு முன்பு திருவள்ளுவர் சிலை அல்லது படத்தில் திருவள்ளுவர் பூணூல் இருக்கும் படியாக செய்து அவரை பிராமணன் என்றான் ஆரியன் , பின்பு பலத்த எதிர்ப்பு கிளம்பியதுடன் அது கை விட பட்டது . ஆரியனின் முதல் வேதத்தில் என்ன உள்ளது , எழுத பட்ட காலம் எது, எப்படி தமிழ் சொற்கள் அதில் பிரயோகிக்க பட்டது ? ஆரியனின் DNA /மரபணு ஏன் திராவிடர்களுடன் வேருபடிகிறது (திராவிடர்கள் தென் இந்தியாவை வடக்கிலும் உள்ளனர் )? ஆரியனின் DNA ஏன் இந்தியன் அல்லாதவரோடு ஒன்று படுகிறது ? அவன் வந்தேறி என்பதற்கு இதுவே முதல் சான்று . ஆரியனின் தலைவன் / அரசனே இராமன் போன்ற அவனின் கடவுள்கள் மேலும் அவனின் கடவுள்கள் 170,000 ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் வாழ்த்தாக கூறுவது நகைப்பாக உள்ளது. பூமியில் மனிதன் இனம் எப்படி , எப்பொழுது உருவாகியது அதன் பிறகு பனிக்காலம் , கற்காலம் பின் உலோக காலங்களின் வயது என்ன ? சரி அப்படியே ஆரியன் கூறுவது உண்மை என்று வைத்தாலும் அந்த கதைகளெல்லாம் எப்படி நேற்று நடந்ததுபோல் அவ்வளவு நேர்த்தியாகவும் கோர்வையாகவும் எழுத முடியும் ? யோசிக்கவும்.. ஏதேனும் நம்பும் அளவுக்கு ஆதாரம் உண்டா ? தமிழரிடமிருந்து தன் வசமாக்கப்பட்ட பல பொக்கிசங்கள் ஆரியனின் வேதத்தில் உள்ளது , அவனின் வேதங்கள் எழுத பட்ட கால கட்டங்கள் எதுவென்று ஆரிய பற்றாளர்கள் கூற இயலும்மா ? ஆரியன் தமிழரை தனது ஆதிக்கத்தில் எப்பொழுதும் வைத்துகொள்ள கையாண்ட பல தந்திரங்களில் ஒன்றுதான் இந்த “சித்திரை தமிழ் வருட பிறப்பு ” இதை அறியாமல் பலர் ஆரிய நா….ய்களை தை மேல் வைத்து ஆடுகின்றனர் . தமிழனுக்கு புத்தாண்டை நிர்ணைக்க இந்த ஆரிய நா …..ய் யார் ? முதலில் ஆரிய நா….ய்களின் வரலாறை படியுங்கள் பிறகு புரியும் அவன் யார் என்று . சுமார் 2 அல்லது 3 விழுக்காடு தான் தமிழ் நாட்டில் ஆரியன் ஆனால் அவன் தான் மற்ற 97 விழுக்காடு மக்களை சூழ்ச்சியுடன் ஆண்டுகொண்டுவருகிறான் . இது ஏன் யாருக்கும் புரிய மாட்டின்கிறது? சும்மா கண்மூடி தனமாக ஆரிய நா…ய் விட்ட கதைகளை ஏன் நம்புகிறார்கள் என்றுதான் புரியவில்லை, இதில் படித்தவர்கள் என்று கூறி கொள்பவர்கள் அவனை தாங்குவதுதான் நகைப்பாக உள்ளது ….பகுத்தறிவுடன் சிந்தியுங்கள் தமிழர்களே…
Loading...
திலிப் 2 அவர்களே, உங்கள் கேள்வி வேடிக்கையாக இருக்கிறது. முதலில் புலியின் பல் அமைப்பு , ஆடு/மாடு/குதிரையின் பல் அமைப்பு மற்றும் மனிதனின் பல் அமைப்பு எவ்வாறு அமையபெற்றுள்ளது என்று பாருங்கள் , உங்கள் கேள்வியின் பதில் அதில் உள்ளது . இயற்கையின் “food chain ” எப்படி நடைபெறுகிறது மற்றும் அதன் முக்கியத்துவம் என்ன என்பது நான் சொல்ல தேவையில்லை உங்களுக்கு . சைவம் என்பது சமயம் உணவல்ல ! சைவர்கள் சார்ந்திருப்பது சைவ சமயம் . மரக்கறி உனவென்பதெ சரி. உங்களின் கீதையில் “அணைத்து உயிரினத்திலும் கடவுள் உள்ளதாக ” கூறப்பட்டுள்ளதே ???? அப்படியாயின் எவ்வாறு மனிதன் மற்ற உயிரை கொன்று தன் பசி தீர்க்க முடியும் ? மனித வயிர் மாமிசத்தை சீரணம் செய்ய உகந்தது அல்ல , மற்றும் மனிதனின் பல் அமைப்பும் மாமிசம் சாப்பிட உகந்ததல்ல , இதை நீங்கள் மருத்துவரிடம் உறுதி செய்துகொள்ளலாம் . மனிதனின் முன்னம் பல் வெட்ட , அதற்க்கு பிறகு கிழிக்கும் பற்கள் இறுதியாக அரைக்கும் பற்கள். மாமிசம் உண்ணும் மிருகத்திற்கு இவ்வாரா அமைத்துள்ளது ?
Loading...
எப்பொழுது இடும்பன் “தெய்வம் ” ஆனார் ? எப்பொழுது அவர் முருகனுக்கு காவலாளி ஆனார் ? எப்போது இடும்பன் மாமிசம் கேட்டார் ?? ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும் …..என்ன எழுதுகிறோம் என்று அறியாமலே சிலர் எழுதுகின்றனர் போலும்………..
Loading...
மனிதனுக்கு உணவாகும் சில தாவரமும் இறக்கின்றன. அவற்றுள் தண்டுக்கீரை , சிறுகீரை போன்ற கீரை வகைகளும், வெங்காயம் ,கேரட் போன்ற மண்ணிற்குள் உருவாகும் கிழங்கு வகைகளும் இறக்கின்றனவே .
Loading...
மன்னா,தாங்கள் கூறுவதும் அனைத்தும் உண்மை,அதே தாவரங்களின் அறுவடைக்கு பிறகு அதாவது தேவையானதை எடுத்து கொண்டு தேவையற்றத்தை விட்டு செல்லுங்கள்,ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் கழித்து பயிர் செய்த இடத்தை சென்று பாருங்கள்,மீண்டும் தளிர் வரும். திலிப் ஐயா, இன விருத்தி இறைவன் படைப்பு அதில் மாற்று கருத்து இல்லை ,ஆனால் அவைகளை கொன்று உண்பவறல்ல சைவ சமயத்தார். மனிதன் herbivore அல்லது omnivore வகையை சார்ந்த பாலுட்டி என்பதை தெளிவாக tamilan tamilan கூறிவிட்டார்.நாம் மனிதனின் உணவு சங்கிலி food chain யை விவாதிக்கும் பொது ஏன் carnivore புலி சிங்கம்…..? தாங்கள் முனைவர் பட்டம் பெற்றவர் தங்களின் அறிவு பசிக்காக இங்கே Q&A session யை நடத்துவதையும் நான் அறிவேன்.தங்கள் எல்லா கேள்விகளுக்கும் இங்கே பதில் கிடைக்க வாய்ப்பு இல்லை காரணம் சித்தர்கள் அனைத்தையும் பாதுகாக்க மறை மொழியில் எழுதி உள்ளனர். ஒரே வழி சைவ சமயம்,நம் அணாவத்தை அடியோடு இறக்கி வைத்தால் அனைத்திற்கும் விடை கிடைக்கும்.நீ பணிந்தால் பணியும் அகிலமெல்லாம் என்பது சான்றோர் வாக்கு.முயற்சி செய்யுங்கள்…வாழ்த்துக்கள்!
Loading...
குமரன் , நீங்கள் கூறுவதும் உண்மையே. பயிர்களில் பலவகை உண்டு. சில தாவரங்கள் துளிப்பதும் உண்டு இறப்பதும் உண்டு. தாவரத்தையும் மாமிசத்தையும் மனிதர்களும் சில மிருகங்களும் உண்பது என்பது இயற்கையே. பசு மாட்டிலிருந்து வரும் பாலும் அவ்வன்னாம்மே. பசு கன்று போட்டால் ஒழிய பால் கிடைக்காது. நம் ஹிந்து மதம் சைவ உணவையே உட்கொள்ளச் சொல்கிறது. ஆனால் இறைவன் மாமிசம் உண்பரை ஒதுக்குவதில்லை. இங்கு காண வேண்டியது பக்தி மற்றும் நமது அறச் செயல்களை தவிர வேறு ஒன்றும் இல்லை. சைவம் வைஷ்ணவம் என்று ஏன் இந்த வேற்பாடு நம்மிடையே ? தேவை யற்ற ஒன்று. .
Loading...
மன்னா,அரியும் அறனும் ஒன்று என்பதை நான் மறுக்கவில்லை! தங்களுக்கு உயிர்நாடி வைணவம் என்றால் எங்களுக்கு சைவம்.அதில் தப்பேதும் கண்டிர்களா? நான் சைவம் என்ற உடன் தங்களால் ஜீரணிக்க முடியவில்லை பிறகு ஏனையா வைணவத்தை எங்கள் மீது திணிக்க முயற்சி? நான் இங்கு வேற்றுமை காண வரவில்லை,உலகளவில் நடப்பதையே விவரிக்கிறேன்.தங்கள் கருத்து பரிமாற்றதிக்கு மிக்க நன்றி,என் வரிகள் தங்களை புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
Loading...
“மனித வயிர் மாமிசத்தை சீரணம் செய்ய உகந்தது அல்ல , மற்றும் மனிதனின் பல் அமைப்பும் மாமிசம் சாப்பிட உகந்ததல்ல , இதை நீங்கள் மருத்துவரிடம் உறுதி செய்துகொள்ளலாம் .” என்று tamil தமிழன் அவர்கள் குறிபிட்டுள்ளீர்கள். உலகத்தில் இருக்கும் 790 கோடி மக்கள் அசைவ உணவை உண்கிறார்கள். 10 கோடிக்கும் குறைவான சைவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக 2+3=7 விடுமா என்ன ? நீங்கள் சொல்வது போல் அல்ல மனிதனின் உடல் அமைப்பு. வேறு யாரிடிமாவது சொல்லுங்கள் உங்கள் கதையை….அதற்க்கு ஜால்ரா வேறு ….காச்சையில் இருக்கிறன். மீண்டு வந்து எழுதுவேன் … அதுவரை … விளையாடுங்கள் ….
Loading...
குமரன் நான் சைவமும் அல்ல வைஷ்ணவும் அல்ல. அரி ஹரன் ஒருவரே என்று வழிபடுபவன். எமக்கு இந்த சைவ சித்தாந்தம் மற்றும் வைஷ்ணவ சித்தாந்தம் இரண்டிலும் உடன் பாடு இல்லை. இவ்விரண்டும் இணைந்ததே ஹிந்து மதம். இதையே சிவனும் விஷ்ணுவும் போதிக்கிறார்கள். நாமும் இதையே பின்பற்றுகிறேன். நீர் சைவ மார்கத்தில் இருந்து சிவனை மட்டும் வழிபட்டாலும் வைஷ்ணவனாக இருந்து விஷ்ணுவை வழிபட்டாலும் அது அவர்தம் விருப்பம். யாம் என்ன கூற விரும்புகிறேன் என்றால் , சிவவிஷ்ணுவை தனி தனியே நீங்கள் வழிபட்டாலும் ஒருவருக்கொருவர் மற்றவரை மனம் புண்படி எழுத வேண்டாமே. இதையே நாம் சொல்ல விரும்புவது.. இறைவனும் விரும்புவது.
Loading...
சமய நெறியும் அதனதன் தத்துவங்களும் தெரியாதவன் வாழும் வாழ்க்கை எம்மதமும் சம்மதம் என்று வாழும் வாழ்க்கை. இது ஒருவரை இறை நெறியில் உய்யவைக்காது. இவ்வுயிர் மீண்டும் மீண்டும் பிறப்பெய்தும். பிறவாக் கடல் நீந்தாது.
Loading...
நன்றி மன்னன்,நீங்கள் சொல்வதும் உண்மைதான்….சிவவிஷ்ணு வழிபாட்டை தொடருங்கள் நல்லது நடக்கட்டும். திலிப், ஆணவ மலத்தை நீ வெல்லும் வரை அது உன்னை ஆளும் எனவே இன்று போய் நாளை வா!
தமிழர் நாந்தா, முதலில் உங்களுக்கு புரியுதா தேனியின் கருத்து ?இனத்துக்கும் மதத்துக்கும் எனக்கு வித்தியாசம் தெரியும் .. புரியாதது கடவுளை நம்புவன் முட்டாள் , பிள்ளையாருக்கு செருப்பு மாலை போட்டு செருப்பால அடித்தவன், தமிழ், மொழியை காட்டுமிரண்டு மொழின்னு சொல்லி அதை தமிழிலேயே எழுதியவன் உங்க தந்தை பெரியார் .. அவருடைய சீரிய தொண்டணானா . நீங்க (தேனீ) எப்படி இந்து மதத்தை பத்தி பேசுறீங்க ? ஒரு பக்கம் இந்து கடவுளுககு செருப்பு மாலை,கடவுள் மறுப்பு, மறுப்பக்கம் சிவனை பத்தி ஆராய்ச்சி .. இதுதான் தமிழரை சரியான பாதையில் நிறுத்தும் லட்ச்சணமா ? யாரை ஏமாற்ற இந்த சூழ்ச்சி? இதை கூட இருந்தே குழிபறிப்பதுன்னு சொல்லுவாங்க .. இதையேதான் உங்க கன்னடக்காரன் பெரியாரும் பண்ணினார் …தமிழ் தமிழ்னு சொல்லி கண்ட இனத்து பேச்சை கேட்டு இன்றைக்கு தமிழன் வீணா போனதுதான் மிச்சம்.
இன்று தமிழன் ஒற்றுமை இல்லாத்துக்கு காரணம் ஆரியன் இல்லை .. திராவிடம் என்னும் திருடன் , தமிழுக்கா தமிழனுக்கா போராடியவர்கள் நிறைய தமிழர்கள் .. அவர்களை மறந்து கண்ட இனத்துக்கா பெரியார் (கன்னடம்)( அம்பேத்கார்) வட மாநிலம் இவன்களுக்கா போராடி செத்து போறாங்க நம்ப அப்பாவி தமிழர்கள் ..நான் தமிழன் , நான் இந்து ,, இதை தப்ப பேசினா நான் கண்டிப்பா போராடுவேன் . இதுக்கு பேரு பற்று.. இதை வெறினா அதையும் ஏத்துக்குவேன் …
ஓர் இனம் நல்லதொரு சமய நெறியைக் கொண்டு அதனையே வாழ்க்கை நெறியாக கொண்டால், அவ்வினம் அற நெறியில் நின்று இறைவுண்மையை உணர்ந்து பண்பட்ட சமூதாயமாக வாழ்வாங்கு வாழும். ஏன் தமிழரின் இன்றைய ஒற்றுமையும், மேன்மையும் பிறரோடு ஒப்பிடுகையில் தாழ்ந்து நிற்கின்றது? ஏன் அவர்தம் சமய நெறி தமிழரை ஒற்றுமையாக வாழ வழி வகுக்கவில்லை? ஏன் இறை நெறியில் அறிவார்ந்த இறை வழிபாட்டை விட்டு வெறுமனே கிரியைகளில் உழன்று பணத்தை மூடத்தனமாக செலவழித்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்? ஏன் தமிழரிடையே சாதியப் பிரிவும் அதனால் வரும் ஒற்றுமின்மையும் நீடித்து நிலைக்கின்றது? ஏன் இந்து மதம் இதுநாள் வரை சாதிப் பிரிவை ஒழிக்க இயலவில்லை? நல்லதொரு வாழ்கை நெறிக்கு இந்து மதம் ஒரு வழிகாட்டியாக இருந்திருந்தால் ஏன் அந்த சாதிப் பிரிவினை ஒழிக்க முற்படவில்லை? ஏன் தமிழரிடையே பல தெய்வ வழிபாடும் ஒவ்வொரு பிரிவினருக்கும் வெவ்வேறு தெய்வ வழிபாடும் கிரியைகளும் கொண்டுள்ளனர்? ஏன் அந்த சமய வழிபாடுகளை வைத்துக் கொண்டு தரகர் குழுவும் வியாபார குழுமங்களும் இந்து மதத்தை மூட நம்பிக்கைகள் மலிந்த ஒரு வியாபார பொருளாக்கி விட்டனர்? ஏன் இன்று தமிழரும் பிறரும் அந்த இந்து மதத்தை விட்டுத் தொடர்ந்து வெளியேறிய வண்ணமாக உள்ளனர்? அறிவார்ந்த தமிழன் இதற்கு முதலில் அறிவார்ந்த பதில் கொடுக்கட்டும். மேலும் கேட்க வேண்டிய கேள்விகள் நிறையவே இருக்கின்றன.
கேள்விகள் நிறையவே இருந்து என்ன பயன்? நான் கேட்ட கேள்விக்கு பதிலை சொல்லமா எதற்கு எதிர் கேள்வி?
நல்ல வேடிக்கையாய் இருக்கிறது தேனீ அவர்களே. நான் உங்களை தேனீ அவர்களே என்கிறேன்; நீங்கள் என்னை அவன் இவன் என்கிறீர்கள்; அதுவும் ஏகதாலதுடன். என்னை தேச துரோக குட்ராவாளி போல் காண்பித்து, நீங்கள் என்னமோ கேப்டன் விஜயகாந்த் அளவுக்கு செயல் படுகிறீர்கள். அதிலும் மற்றவர்கலை எனக்கு எதிராக தூண்டல் வேறு. இதுதான் உங்கள் வீட்டில் சமைத்த சைவ சித்தாந்தமா ? நான் சைவ சித்தாந்தத்தை மதிப்பவன். ஆனால் உங்கள் வீட்டில் சமைத்த சைவ சித்தாந்தத்ததை அல்ல. குமரன் அவர்களே, தாங்களுக்கு தமிழிலேய தகராறான், இதுல ஆங்கில விளக்கம் வேறு. தேனீ அவர்களே, நீங்கள் இப்படி எழுதி உள்ளீர்கல்: “ஏன் இந்து மதம் இதுநாள் வரை சாதிப் பிரிவை ஒழிக்க இயலவில்லை?” தமிழில் தான் உலகத்திலேயே அதிக சாதி பிரிவு உள்ளது; அதுவும் 450 மேல். கிறிஸ்துவர்களில் பெந்தகோஸ், மெதோடிஸ், என்க்ளிகன், ரோமன் கதோலிக் என்று நிறைய பிரிவுகள் உள்ளது. இஸ்லாமியர்களில், ஷியா, சன்னி, குர்டிஷ், அளவிட்ஸ், என்று நிறைய உள்ளது. ஆனால் இந்து மதத்தில் நான்கு மட்டும் தான் உள்ளது. அதுவும் ஆண்களுக்கு மண்டும். பெண்கள் இதில் வருவதில்லை. விஷயம் தெரிய வில்லை என்றால், கடவுளின் காலில் விழுங்கள். இல்லை எண்ணிடம் கேளுங்கள். நான் ஒரே ஒரு கேள்விதான் கேட்டேன். ஏன் திருக்குறளில் காமத்துபால் வருகிறது, அதை ஏன் பொதுவில் போதிபதில்லை என்று ? உடனே கேப்டன் விஜயகாந்த் அளவிற்கு பேசுகிறார் தேனீ அவர்கள். மன்னன் அவர்களே “சிவனையும் ஹரியையும் நம் கடவுள்” இதற்க்கு நன்றி.
திலிப்,எனக்கு தமிழ் மொழி தகராறு….இப்போது சில காலமாக கற்றுவருகிறேன்.மேலே உள்ள விளக்கம் நான் சமீபத்தில் படித்தது,செம்பருத்தி நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் அவ்வளவுதான்.தாங்கள் ஏன் அடிக்கடி உணர்ச்சிவசம் படுகிறீர்? தாங்கள் தமிழ் மொழி கற்றவர்…ஏன் இன்னமும் தங்கள் பெயரை தமிழில் எழுத முடியவில்லை?
முதலில் மலேசிய தமிழனுக்கும் Dhilip 2க்கும் என் வாழ்த்துக்கள். தமிழை காட்டு மிராண்டி மொழின்னு ஒரு தறுதலை சொல்றான் .. அதை கேள்வி கேட்காமா அவனை தந்தைன்னு வெக்கமில்லாமா சொல்றீங்க . என்ன மானக்கேட்ட பொழைப்பு ? ஏன் தமிழரின் இன்றைய ஒற்றுமையும், மேன்மையும் பிறரோடு ஒப்பிடுகையில் தாழ்ந்து நிற்கின்றது. இதில தேனீக்கு கேள்வி வேற > எப்படிடா இருக்கும் ஒற்றுமை? தமிழனே தாய் மொழியை காலில் போட்டு மிதித்தால் எப்படி உருப்படுவோம் ? வெக்கமா இல்லை ..எதுக்க இந்து மதத்தில் உள்ள தமிழனை மட்டும் தாக்குற ? ஏன்னா அவன்தான் இழிச்சிவாயன்.. கிறிஸ்டியன் தமிழனை கேளு. முஸ்லிம் தமிழனை கேளு .. கேட்டுப்பாரு .. உன்னை உண்டு இல்லைன்னு ஆக்கிடுவான் . தந்தை புத்தி தானே மகனுக்கும் வரும் …..
ஜாதிகள் எல்லா மதத்திலும் உள்ளன. இதில் ஹிந்து மதத்திற்கும் மற்ற மதத்திற்கும் என்ன வேறுபாடு என்றால் நாம் ஜாதி என்கிறோம் மற்றவர் பிரிவு அல்லது குளம் என்கின்றனர். அவ்வளவே. எல்லா மதங்களிலும் ஒற்றுமை பற்றிய தகராறு உள்ளது. இதற்க்கு காரணம் மதம் அல்ல மனிதர்களின் எண்ண அலைகளே.இறைவன் மிருகங்களில் கூட ஜாதி / பிரிவு வைத்து தான் படைத்து உள்ளார். மனிதனுக்கும் மிருகத்துக்கும் உள்ள வேறுபாடு , மிருகங்கள் தங்களுக்குள் இனவாரியாக அடித்துக் கொள்வதில் இல்லை. மனிதனோ தாம் ஆறு அறிவு படைத்தவன் என்ற கர்வத்தினால் அடித்துக் கொள்கிறான் . நம் மதம் பல தெய்வங்களை கொண்டது போல் தருவிக்கப் பட்டுள்ளது. இதற்க்கு காரணம் நம் குடும்ப வாழ்வில் உள்ள குடும்ப பாங்கான அமைப்பையே கொண்டு நம் இறைவனையும் பல தெய்வங்களாக காண்கிறோம் வழி படுகிறோம். நம் மதத்தில் முனிவரையோ அல்லது சாமியாரையோ இறைவன் அடிகளாக பார்க்காமல் அவர்களையும் இறைவனுக்கு சம மாக கருதுவதால் தான் பல பிரச்சனைகள். இது நம்மில் காணும் அறியாமையே. மாதா பிதா முன்னறி தெய்வம் , மாதா பிதா, குரு தெய்வம் என்று என்று நம்புகிறோம். எனவே தான் சில பலரை நாம் தெய்வத்திற்கு சமமாக கருதுகிறோம்.
தமிழர் இனம் பெற்ற சித்தாந்த சைவம் உயிரைப் பற்றிதான் பேசுமே ஒழிய அவ்வுயிர் கொண்ட உடலைப் பற்றிப் பேசுவதில்லை. இது உயிருள்ள அனைத்து சீவான்மாகளுக்கும் பொருத்தும், நிற்பன, ஊர்வன, பறப்பன, நடப்பன என்ற அனைத்து சீவராசிகளுக்கும் கூறப்பட்டது. ஒவ்வொரு உயிருமே அதன் தன்மையில் ஒரே நிலையை உடையவை. வினைப் பயன் அடிப்படையில் அவை வெவ்வேறு உடலைப் பெறுகின்றன என்று கூறியது சித்தாந்த சைவம். அதனால், உயிர் குலத்தில் பிறப்பின் அடிப்படையில் சாதி பேதம் இல்லை என்று கூறும் ஒரே சமயம் சித்தாந்த சைவம். தமிழர் சமயம் கூறும் நெறியினை அறிந்து அதனையே நமது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு வாழ்வோமானால் சாதி பேதம் தமிழரை விட்டு நீங்கும்.அதற்கு முதலில் தமிழரின் சமய நெறியை நம்மர்வர்கள் உள்வாங்க வேண்டும். அதன் வழி வாழ மனவுறுதி கொள்ள வேண்டும். அதைவிடுத்து அயலார் கொண்டு வந்து நம் மீது திணித்த நெறியைக் கொண்டு அவர்களின் சுய நலத்திற்க்காக வகுத்த குலங்களை நம்மீது திணித்து அதில் இன்னும் வேற்றுமையை வளர விட்டதுதான் இந்து மதத்தின் சாதனை. இதற்குப் போய் திராவிடன் சொன்னான் என்று வேற்றான் மீது பழி சுமத்துவது ஏன்? ஏன், மலேசியாவில் திராவிடக் கட்சிக்காரர்கள் சொல்லித்தான் சாதியத்தை வளர்கின்றீர்களா? சொந்த புத்தி இல்லையா? ஏன் இன்னமும் இந்த சாதியம் அனைத்திலும் தலை விரித்தாடுகிறது? ஆக, தமிழர் இனம் அவர்தம் சமய நெறி பகரும் உயிர் போற்றுதல் என்ற நன்னெறியில் நின்றால் அங்கே சாதியத்திற்கு இடமில்லாமல் போகும். நல்லது ஒன்றை நமது சமய நெறிகளில் உள்ளதை உள்ளவாறு சொல்லும் பொழுது அதனை ஏற்காமால், அச்சாதியத்தை போற்றுவதர்க்காக பிற இனக் குழுக்களை கை நீட்டிக் காட்டுவதேன்? அறிவுரை தமிழருக்குத் தேவை என்பதால் பிறர் கெட்டு வாழ்ந்தால் நாமும் அவர்களைப் போல கெட்டுதான் வாழ வேண்டுமா? நாம் 21-ம் நூற்றாண்டில் வாழ்கிறோம் என்பதை உணர்ந்து திருந்தி வாழ தமிழர் கற்றுக் கொள்ள வேண்டும். அதற்கு நம் சமய நெறிகள் வழி காட்டுவது போல் போற்றி நடந்தால் ஒற்றுமை வரும் நம்மிடையே.
“சாத்திரம் பேசும் சழக்ர்காள்
கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்? (திருமுறை 5.60.3)
சாத்திரம் என்பது சமய இலக்கண வரம்புக்கு உட்பட்ட அறிவியலும் அருளியலும் கலந்த நூல்களைக் கற்றோர், தங்கள் பரம்பரையும் சாதியையும் பெரிதாகப் பேசுவதால் ஒரு பயனும் இல்லை என்று சொன்னவர் திருநாவுக்கரசர். இவ்வாறு சொல்லியது 1,300 வருடங்களுக்கு முன்.
ஏன் தமிழருக்கு இன்னும் அறிவு விளக்கம் பெற முடியவில்லை. வெகு காலமாக நம்மிடையே இருக்கும் சமய நெறிகளைப் போற்றத் தெரியாமல் அயலார் அவர்தம் பண்பாட்டை நம் மீது திணித்தைக் கூட உணர முடியாமால் நம் அறிவை மறைத்து வைத்திருப்பது இந்து மதம் என்ற வைதிக மதம். இதனை அறிந்து திருந்துங்கள் தமிழர்களே. தமிழர் சமய நெறியை அறிந்து அதன் வழி நில்லுங்கள் நாம் உய்வோம். நம்மிடையே ஒற்றுமை வளரும்.
எதற்கு தமிழர் சமய நெறி அறியாது மாறிப் போனவர்களைக் கேள்விக் கேட்க வேண்டும்? இந்து என்ற வைதிக மத நெறிகளை வெறுத்துப் போனார்கள் அவர்கள். குறை அவர்களிடம் இல்லை. நம் சமய நெறிகளை நாம் கற்று அறியாமல் வாழ்வதும், அதனால் மேலோர் என்றும் கீழோர் என்றும் பாகுபாடு காட்டுவதும் நமது அறியாமை. நம்மை நாம் திருத்திக் கொள்வோம். மாறிப் போனவர்களைப் பற்றி கவலை நமக்கு ஏன்? அவர்களை ஏன் இங்கு கொண்டு வந்து நிறுத்த வேண்டும்?
தமிழரின் சமய நெறிகளை அறியாது, அதனைக் கொச்சைப் படுத்தி, அது தப்பு என்று உணர்த்திய பிறகும், சொன்னதை மீட்டுக் கொள்ள மாட்டேன் எனும் தற்குறிக்கு மரியாதை ஒரு கேடா?
திலிப் 2 அவர்களே எனக்கு உங்களை தொடர்பு கொள்ள ஆவலாக இருக்கிறது தயவு செய்து எனக்கு உங்கள் மின் முகவரியை தர முடியுமா ?
கடைசியில் நான் கெட்டவன் என்று முடித்திருக்கிறார் நண்பர் தேனீ அவர்கள். மரியாதை கேட்டும் தர மறுக்கிறார்; பாரவாயில்லை. மன்னன் அவர்களே, நீங்கள் கல கட்சிதமாக எழுதியுள்ளீர்; பாராட்டுக்கள். எனக்கே சிலநேரங்களில் அப்படி வராது. சரி விசயத்திற்கு வருகிறேன். கண்ணப்பநாயனார் அவர்கள் கல்லில் தேனை கலந்து சிவபெருமானுக்கு (சிவலிங்கதிற்கு) வைத்து வணங்கி உள்ளார். மேலும் மான் இறைச்சி வைத்து படைத்தது, வணங்கியும் உள்ளார். அவர் 63 நாயன்மார்களில் ஒருவர். சிவத்தை கொண்ட சைவர்கள், சுத்த சைவம் என்பார்கள்; தமிழர்கள். இங்கே சைவம் என்றால் என்ன என்று பார்க்க வேண்டும். திருவள்ளுவ பெருங்தகை இப்படி கூருகிரார்: கொள்ளாள் புலாலை மறுத்தானை எல்லா உயிரும் கைக்கூப்பி தொழும். ஒரு உயிரை கொன்று தின்றாதவனை, எல்லா உயிரும் கைகூப்பி தொழும். அப்படி பார்தால்லும், செடி கொடி இலை என்று எல்லாதிற்கும் உயிர் உள்ளது. அதனால் தான் வளர்கிறது. இரும்புக்கு உயிர் இல்லை; எனவே அது வளர்வது இல்லை. நண்டுக்கு ரத்தம் பச்சை கலர். இப்படி பல குழப்படிக்கு மத்தியில், காஷ்மீரில் இருக்கும் சைவர்கள், மீன்களை கடல் புஷ்பம் என்று சாப்பிடுகிறார்கள். எனவே, சைவம் எது என்று நண்பர்கள் விளக்கம் தர வேண்டுகிறேன். தேனீ அவர்களை தவிர காரணம் அவர் பிடித்த முயல் சைவம் என்பார்.
குமரன் அவர்களே, உங்களுக்காக, முதல் முறையாக, என் புனை பெயரை தமிழில் எழுதிகிறேன். திலிப் இரண்டு! மஞ்சுளா, நான் என் ஈமெயில் தருவதை தவிர்க்கிறேன், விளக்க முடிய வில்லை; மனித்து கொள்ளுங்கள்.
திலிப்! நான் சமைக்க தோட்டத்தில் 2 கத்திரிக்காய்,2 தக்காளி,சில காய்கறிகளை பறித்து சமைத்தால் என் பசி அடங்கி விடும்.அந்த செடி கொடிகள் ஓரிரு வாரத்தில் மீண்டும் காய்த்திருக்கும்.அதே போலே புலால் புசிப்பவர்கள் பாதி கோழி,பாதி ஆடு அல்லது வேறு ஏதாவது வளர்ப்பு பிராணியை வெட்டி சமைத்து சாப்பிட்ட பிறகு அதே பிராணி தொடர்ந்து உயிர் வாழ முடியாது!
இந்துக்களிடம் இருக்கும் சாதி பிரிவுக்குப் பிறப்பின் அடிப்படையில் பொருள் கொள்வதும், பிற மதத்தவரிடம் இருக்கும் பிரிவுக்கு அவர்தம் கொண்ட சமய நெறி வேற்றுமைகளின் அடிப்படையில் பொருள் கொள்ளப்பட்டது என்பதை கூட பகுத்தறிய முடியாது போனால் தவறு யாரிடம் உள்ளது? தமிழர், பல காலமாக சிந்தித்துத் தெளிய மறந்து விட்டது என்பதற்கு இப்படிப் பட்ட கருத்தே தக்கச் சான்று.
தமிழர் சமய நெறியை நன்கு கற்றுத் தெளிந்தவருக்குக் கண்ணப்ப நாயனாரின் வரலாற்றில் எவ்வொரு சந்தேகமும் வராது. அவ்வாறு அல்லாதோருக்கு மாமிச உணவு உண்பதற்கும் அதனை இறைவனுக்குப் படைப்பதற்கும் கண்ணப்பரை காரண காரியமாகச் சொல்வது முழு அறியாமையேயாம். அடுத்து கண்ணப்ப நாயனாரின் வரலாற்றைச் சற்று அறிவோம். செம்பருத்தி வழியாக எம் தமிழருக்குத் தமிழரின் சமய நெறியை உணர்த்துவது யாம் செய்யும் சிவ புண்ணியத்தின் தொடர்ச்சியாகும். தொடரும்.
சனவரி, 2016 மாத சிவனருள் இதழில், “அறுபத்து மூவரே நாயன்மார்! அறுபத்து நான்கு அல்ல!” என்ற தலைப்பில் முகப்புக் கட்டுரை ஒன்றை வரைந்துள்ளார் சித்தாந்தச் செல்வர், சைவ சிகாமணி முனைவர் நாகப்பன் ஆறுமுகம் அவர்கள். அக்கட்டுரையை இங்கே முழுமையாக பதிவு செய்து விட்டு கண்ணப்ப நாயனாரின் வரலாற்றில் இருக்கும் பசு கரணம் மற்றும் பதி கரணத்தைப் பற்றி விளக்குவோம்.
“அறுபத்து மூவரே நாயன்மார்! அறுபத்து நான்கு அல்ல!”
“சைவ சமய அடியார்களில் அறுபத்து மூவர் நாயன்மார் என்னும் சிறப்பு பெற்றனர். இச்சிறப்பு சிவபெருமானின் திருவருளால் அருளப் பெற்றது. அறுபத்து மூவருக்கு மேல் அறுபத்து நாலாமவர் எவரும் இல்லை.
அண்மைக் காலத்தில் சமயச் சொற்பொழிவாளர் கிருபானந்த வாரியாரை அறுபத்து நாலாம் நாயன்மார் என்று சிலர் பேசியும் எழுதியும் வருகின்றனர். இது முற்றிலும் தவறு.
கிருபானந்த வாரியார் சிறந்த சொற்பொழிவாளர், சமய அறிவு நிரம்பப் பெற்றவர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இந்தத் தகுதியை மட்டுமே நாயன்மாருக்குத் தகுதியாக கொண்டால் நூறு, இருநூறு என்று நாயன்மார் எண்ணிக்கை அளவு இன்றிப் பெருகும். அளவு பெருகினால் தகுதி தாழ்ந்து போகும். தனக்கு வேண்டியவரை இனம், சாதி பார்த்துக் கூட நாயன்மார் வரிசையில் சேர்த்துவிடத் தமிழர் முயற்சி செய்வர். எனவே அறுபத்து மூவருக்கு மேல் நாயன்மார் எண்ணிக்கையை உயர்த்துவது சைவ மரபுக்கு முரணும் இழுக்குமாகும்.
நாயன்மாருக்கு என்ன இலக்கணம் என்று ஆராய்ந்து பார்த்தால் அறுபத்து மூவருக்கு மேல் நாயன்மார் ஏன் இல்லை என்று அறிந்து கொள்ளலாம்.
1. நாயன்மார் சிவபெருமானை மட்டுமே வழிபட்டனர். சிவனைத் தவிர பிற தெய்வங்களை வழிபடவில்லை.
2. நாயன்மார் நல்ல செல்வ நிலயில் இருந்து சிவப்பணிக்காகவே தம் செல்வங்களை இழந்தனர்.
3. செல்வம் அனைத்தையும் இழந்த நிலையிலும் சிவ வழிபாட்டையும் சிவத் தொண்டையும் கைவிடாமல் செய்தனர்.
4. சிவ வழிபாட்டுக்கும் சிவ தொண்டுக்கும் தம் உயிரையும் ஈந்தனர். இறைவன் தோன்றி அவர்களை மீண்டும் உயிர்பித்தான். வீடுபேறு அருளினான்.
5. நாயன்மார்களை இறைவன் தேர்ந்து நமக்கு அறிவித்தான். சுந்தர மூர்த்தி நாயானார் திருத் தொண்டர் தொகை பதிகத்தில் அவர்களின் சிறப்பை அடைமொழியாகக் கொண்டு பதிவு செய்தார். இதனை அடிப்படையாகக் கொண்டே சேக்கிழாரும் திருத்தொண்டர் புராணம் பாடினார்.
இக்காரணங்களால் அறுபத்து மூவருக்கு மேல் எவரும் நாயன்மார் ஆகவில்லை. நாயன்மார் வரிசையில் அமரும் தகுதி முழுமையும் பெற்றிருக்கும் மாணிக்கவாசகர் கூட நாயன்மார் வரிசையில் இடம் பெறவில்லை. கிருபாந்த வாரியாரை நாயன்மார் என்று கூறுவதற்கு மேலே குறிப்ப்டப்பெற்ற ஐந்து தகுதிகள் பொருந்தவில்லை என்பது வெளிப்படை.
எனவே அறுபத்து மூவருக்கு மேல் நாயன்மார் எவரும் இல்லை. அறுபத்து மூன்று நாயன்மார் சைவருக்கு குருமார் ஆவர். நமது சமய வாழ்வுக்கு எடுத்துக் காட்டாக வழிகாட்டுவோர் நாயன்மார். நாயன்மாரைப் போற்றி இறைவன் திருவருளையும் திருவடியையும் அடைவோம். சிவ சிவ.
– முனைவர் நாகப்பன் ஆறுமுகம்
குமரன் அவர்களே, நம் நகம் மற்றும் முடியை வெட்டினாலும் அவை மீண்டும் வளரும். அது போலவே தாவர வகைகளும். இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில்,நீங்கள் பறித்த காய் கறி மீண்டும் பறித்த இடத்தில் காயித்திருக்க வாய்ப்பு இருக்காது. ஆனால் செடியின் மற்ற பகுதியில் காயித்திருக்கும். அதுபோலவே மனித மிருக உடலில் மற்ற உறுப்புகளை வெட்டினாலும் மீண்டு வளராது. திரு திலீப்பின் வாதத்தில் உண்மை உள்ளது. ஒரு குழந்தைக்கு எப்படி தாய் தந்தை முக்கியமோ அதுபோலவே நம் சைவமும் வைணமும் நம் மதத்திற்கு. அரியும் அறனும் ஒன்று . முதலில் இதை நினைவில் நிறுத்துங்கள். எல்லாம் சிவ மயம் என்ற போதிலும் அந்த சிவனே பெருமாளை தான் நினைக்கிறார் தாம் அவதாரமாக இருக்கும் பொழுதும். இதையே நம் புராணங்கள் கூறுகின்றன. தமிழன் என்பது இனம் அன்றி மதம் அல்ல. இறைவன் யாவரையும் ஒரு நிலையில் தான் பார்கிறார்.
இந்துக்களுக்கு ஜாதி பிரிவு உண்டு அதே போல மத்த மதத்திருக்கும் பிரிவு உண்டுன்னு mannan .. அவர்கள் தெளிவா சொல்லிட்டார் , அப்ப கூட இந்துவ இழிவுபடுத்துவிலே தீவிரமா இருக்கார் அறிவாளர் தேனீ … மத்த மதம் தான் அவருக்கு உயர்வு .. மலேசியா தமிழன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம கண்டதை பேசி எரிச்சல் அடைகிறார்..
மன்னா, எனக்கு உணவு கொடுத்த தாவரத்தை நான் கொல்லவில்லை!… உயிர் கொல்லாமைக்கு என் விளக்கம்.அரியும் அறனும் ஒன்று,தமிழன் என்பது இனம்,இறைவன் எல்லா உயிரினங்களையும் ஒரே நிலையில் தான் பார்க்கிறார்….என்பதற்கும் மாற்று காருத்து இல்லை….
(தங்கள் பெயரை தமிழில் எழுதினால் இன்னும் சிறப்பு – இது என் தனிப்பட்ட கருத்து)
மன்னன் தெலுங்கர்களுக்கு பெருமாளை வணகவேண்டுமேன்றால் அது அவர்களின் உரிமை ..
தமிழர்கள் சைவசமய நெறியாளர்கள் ..
ஆரியர்களுக்கும் அவர்களோடு இரண்டற கலந்த தெலுங்கர்களும் வைணவத்தை உயர்த்தி பிடிப்பதில் தப்பில்லை ..
ஆனால் தமிழர்களுக்கு அறிவுரைகூற கிளம்பகுடாது ..
தமிழர்ரோடு ஒட்டிஉறவாடி கலாசாரம் மொழி வழிபாட்டுக்கு குறுக்கே நிக்கக்கூடாது ….
நீங்க ராமனை / பெருமாளை /ஆன்சநெயரை/ சக்கம்மாவை வணங்குங்க அது உங்களது உரிமை ..
தமிழர் விசயத்தில் தலையிடாதிர் .
தேனீ அவர்கள் பொன்னான நேரத்தை வீணடிக்காதிர்கள்..
சைவ சமய வழிபாடு திருமுறை தேவார விளங்கங்களோடு சிறு சிறு கட்டுரையாக செம்பருத்திக்கு எழுதுங்கள் ..
முடிந்தால் ஆங்கிலத்திலும் எழுதி செம்பருத்தி ஆசிரியருக்கு அனுப்புங்கள் ..
தினசரி நாளிதழ்களை எல்லாம் ஆரிய கொண்டு மசாலா வழிபாடு பாபா ரத ஊர்வல செய்திதான் ..தமிழர்களை தமிழ் நாளிதழ் தவறாக மூட பழக்கவழக்கங்களை போதிக்கிறதா ! இந்தமண்ணில் த .நேசன் பத்திரிக்கை முதலாளியம்மா இந்த பாபா பிரசாரத்தை மேட்கொண்டார்கள் வெற்றியும் பெற்றார்கள் .. இன்னுமொரு தோழர் பத்திரிக்கை காரங்க எப்போதும் தமிழக திருட்டு கொள்ளைகார வடுகட்சிக்கு மலேசிய மண்ணிலிருந்து சால்ரா அடிக்கிறதே பத்திரிக்கை தர்மம் ! தமிழக தமிழர் தேசிய கட்சிகளையும் அரசியலையும் மழுங்கடிகிரார்கள்…
தமிழ் இனத்தின்மேல் பற்றுள்ள எவனும் இவர்களின் பத்திரிகையை வாங்கமாட்டன் ..தமிழ் மீது பற்றும் இனத்தின் மீது பாசாமும் கொண்ட ஒவ்வொரு இஸ்லாமிய தமிழனும் என் சகோதரனே ..ஆரதளுவுவேன் .. நாளும்பொழுதும் இனத்தையும் மொழியையும் சமயத்தையும் அழிக்க கிந்து என்கிறபோர்வையில் வரும் ஆரியனையும் அவர்களின் அடிவருடிகள் என்றும் தமிழர்களுக்கு எதிரியே .. தமிழர்களே எதிரியை விட அருகில் இருந்து உறவாடி துரோகம் செய்பவனிடம் எப்பொழுதும் எச்சரிக்கையாய் இரு ..
ஆதியோகி
1 hr ·
மற்ற மதத்தினரை விட இந்துக்களே மிகவும் மகிழ்ச்சியானவர்கள்!
சில தினங்களுக்கு முன், லண்டனின் தேசிய ஆய்வறிக்கை மையம் (UK Office for National Statistics) எந்த மதத்தினர் மிகவும் மகிழ்ச்சியானவர்கள் என்ற அடிப்படையில் பரவலான ஓர் ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின் முடிவாக, இந்துக்களே மிகவும் மகிழ்ச்சியானவர்கள் என அந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வின் முடிவுகள் லண்டன் பத்திரிக்கைகளில் பரவலாக வெளிவந்தன. ஹஃபிங்டன் பத்திரிக்கையாளர், கத்ரின் சினவ்டவுன், ”மற்ற மதத்தினரை காட்டிலும் இந்து மதத்தினரே மிகவும் மகிழ்ச்சியானவர்களாக திகழ்கின்றனர்” என ஆய்வின் முடிவை தன் செய்தியுரையில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
இந்துக்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதன் பின்னால் அவர்களின் உடல்நலம், பாதுகாப்புமுறை மற்றும் வாழ்க்கைத்தரம் ஆகியவை அடங்கியுள்ளன. இதனால் இந்துக்களே உடல்நலமிக்கவர்களாகவும், லண்டனுக்கு எந்தவொரு தீமைகள் விளைவிக்காதவர்களாகவும், வாழ்க்கைத் தரத்தில் உயர்ந்தவர்களாகவும் திகழ்கின்றனர்.
இந்துக்கள் உடல்நலத்திற்கும் மனநலத்திற்கும் யோகாசனப் பயிற்சியும் தியானமும் மேற்கொள்வர். இந்துக்களின் உணவுமுறையும் மிகவும் ஆரோக்கியமானதாகவும், இதமளிப்பதாகவும் அமைந்துள்ளது. இந்துக்கள் கடைப்பிடிக்கும் தர்மநியதி உலகவாழ்க்கைக்கு நன்மை விளைவிப்பதாகவும் எந்தவகையிலும் அது மற்ற அப்பாவி உயிர்களைக் கொல்லவும் தூண்டுவதில்லை. இதனால் இந்துக்களால் லண்டனுக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் கிடையாது.
மேலும், இந்த ஆய்வறிக்கையின் படி இந்துக்களுக்கு அடுத்தபடியாக பௌத்தர்கள், கிறிஸ்துவர்கள் மற்றும் யூதர்கள் உள்ளனர். இறுதியாக மகிழ்ச்சி குறைந்த மதத்தினராக இஸ்லாமியர்கள் உள்ளனர். மதமற்றவர்களும் மகிழ்ச்சி குறைந்தவர்களாக உள்ளனர்.
m.huffpost.com/uk/entry/9138076
[https://www.facebook.com/aathiyoki/photos/a.1390753284495218.1073741825.1381600902077123/1736853989885144/?type=3&தியேட்டர்
தமிழர் எழுச்சிப்பறை, உம்மை போன்று நானும் தமிழனே. ஆனால் உம்மை போன்று வெறியன் அல்லவே. யார் சொன்னது தமிழர் அனைவரும் சைவ சமயம் என்று… தவறு. உமது இந்த விவாதத்தால் நம் தமிழ் இனத்தை கேவலம் செய்யாதீர். நீங்கள் போடும் இந்த கூப்பாடு அந்த சிவனுக்கே உடன்படாது. எப்ப்போது நீர் ஹிந்து மதத்தை சைவம் வைஷ்ணவம் என்று பிரித்து கூற முற்பட்டிரோ அப்போதே நீர் ஒரும் வெறும் …..என்று சொல்லாமல் சொல்லி விட்டீர். தமிழர் என்றால் திராவிடன் என்று அர்த்தமில்லை. தமிழ் நாட்டில் தான் மட்டமான திராவிட மாந்தை திரிகிறது என்றால் மலைய்சியவிலுமா? எம்மை பொறுத்தவரை சிவனையும் பெருமாளையும் வேறாக கருதுபவர் மூடரே. உம்மை போன்ற மட்டமான தமிழர்களால் நம் ஹிந்து மதம் படும் பாடு பெரும்பாடு தான்.
குமரா நன்றி. . தங்களின் விருப்பம் போல் யாம் எம் பெயரை தமிழில் தந்து விட்டோம் .
தேனியின் சிவ சித்தந்தர்க்கு மாற்று கருத்து இல்லை. ஆனால் அவரின் கருத்தும் அதை சொல்லும் முறையும் அழகன்று.அவர் தம் சைவ சித்தாந்த்தடிற்கு சான்றாக 63 நாயன்மார்களை வைத்து விவாதிப்பது அழகே. அதற்காக வைஷ்ணவத்தை இழிவாக பேசுவது முறையாகாது. எஹ்னெனில் அறனும் அறியும் ஒன்றே.
தமிழர் எழுச்சிப்பறை, உம்மை போன்று நானும் தமிழனே. ஆனால் உம்மை போன்று வெறியன் அல்லவே. யார் சொன்னது தமிழர் அனைவரும் சைவ சமயம் என்று… தவறு. உமது இந்த விவாதத்தால் நம் தமிழ் இனத்தை கேவலம் செய்யாதீர். நீங்கள் போடும் இந்த கூப்பாடு அந்த சிவனுக்கே உடன்படாது. எப்ப்போது நீர் ஹிந்து மதத்தை சைவம் வைஷ்ணவம் என்று பிரித்து கூற முற்பட்டிரோ அப்போதே நீர் ஒரும் வெறும் …… என்று சொல்லாமல் சொல்லி விட்டீர்.
ஆமாயா நாம் தமிழ் வெறியர் .சைவவமைய வெறியர் ..
அதனால்தான் அடுத்த இனத்துக்குள் ஊடுருவி அந்த இன மொழி சமயத்தை நாசம் பண்ணி நடுத்தெருவில் வைத்துள்ளோம் !
இந்த மலேசிய மண்ணில் தமிழர்களிடத்தில் என்னமா அன்னியர்கள் சமய பிசினஸ் பண்ணுகிறார்கள் .. இங்குள்ள் இந்துசமய விற்பனர்கள் 100/95% ஒரு இனம்தான் முன்னிலை வகிக்கிறது ..சரியாக அவதானித்தால் புரியும் ..சரி தமிழர்கள் வைஷ்ணவர்களும் இருக்கிறார்கள் ..அங்கு பூசை புனஸ்காரம் தெலுங்கர்கள் அல்லது தெலுங்கு பார்பனர்கள் மட்டுமே ..என்ன ஒரு இனவெறி ..எந்த தமிழன் நாமம் போட்டுட்டு அலைகிறான் ?
ராமனை அதிகமாக தெலுங்கர்கள்தான் வழிபடுவார்கள் .. மலையாளிகளோ தமிழர்களோ வழிபடுவது மிகவும் அரிது ..
முருகனை இந்து என்கிற வடநாட்டவர்கள் வழிபடுவார்களா வெங்காயம் பதில் சொல்லு ? இல்ல எங்கயாச்சும் ஆலயம் கட்டி வச்சிருகிரார்களா ? கிந்து இந்தியா என்கிற பெயரை சூட்டியவன் வெள்ளைக்காரன் ..
தமிழர் எழுச்சிப்பறை வேண்டுகோளுக்கு இணங்க இப்பகுதியில் இதுவே எமது இறுதி கருத்தாக இருக்கும்.
கண்ணப்ப நாயனார் வரலாற்றில் அவரின் இறுதி 6 நாட்களே அதி முக்கியத்துவம் வாய்ந்தவை. திண்ணப்பனென்ற கண்ணப்ப நாயனார் வேடுவர் குலத்தில் பிறந்து குறிஞ்சி நிலப் பகுதியில் வாழ்ந்தவர். அவர் முருக வழிபாட்டைக் கொண்டவர். அக்காலத்தில் குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த மக்கள் முருக வழிபாட்டை கொண்டிருந்தனர் என்பதனை சேக்கிழார், “முருகுஅலர் அலங்கல் செவ்வேள்; முருகவேள் முன்றில் சென்று; பரவுதல் செய்து நாளும்; பராய்க் கடன் நெறியில் நிற்பார்” என்று தெரிவிக்கிறார். மேலும், அவர்தம் வழிபாட்டில் “வாரணச் சேவலோடும்; வரிமயில் குலங்கள் விட்டுத்; …. புகழ்புரி குரவை தூங்கப்; பேர் அணங்கு ஆடல் செய்து பெருவிழா எடுத்த பின்றை” என்று கூறுவதால், அவ்வழிபாட்டில் புலால் படைத்து குரவைக் கூத்துடன், வெறியட்டாமும் கொண்டு வழிபடுவர் என்பது தெளிவு. இவ்வகையில் வந்த திண்ணன், ஒரு நாள் கன்னி வேட்டைக்குச் செல்லும் பொழுது திருக்காளத்தி மலை உச்சியைப் பார்த்து தன் நண்பனிடம் வினவ அங்கே குடுமித் தேவர் உள்ளார் என்று கூறியவுடன், தன்னையுமறியாது மலை உச்சியை நோக்கி ஓடுகிறார். அங்கே சிவலிங்கம் ஒன்று எவ்வொரு பாதுகாப்பும் இன்றி இருப்பதைப் பார்த்து அப்பெருமான் மீது அன்பு கொண்டு அச்சிவலிங்கத்தைப் பாதுகாக்கவும், தம் குல வழக்கப்படி புலால் உணவை படைத்து வருகின்றார். எம்பெருமான் அவர்தம் அன்பை மெச்சி உலகத்தாருக்கு அவரை அடையாளங்காட்ட திருவுள்ளம் கொண்டு 6-வது நாள் சிவலிங்கத் திருமேனியில் வலது கண் பகுதியில் உதிரம் கொட்டச் செய்து, அதனை நிறுத்த முற்பட்டு கண்ணப்ப நாயானார் தனது வலகண்ணை பெயர்த்து சிவலிங்கத் திருமேனி மீது பதிக்க உதிரம் நின்று, மீண்டும் இடது கண் பக்கம் உதிரம் கொட்ட ஆரம்பிக்கிறது. அதற்காக தனது இடது கண்ணையும் பெயர்க்க முட்பட்ட போதே இறைவன் தோன்றி தடுத்தாட்க் கொள்கிறார். இதில் முதல் 5 நாட்கள் கண்ணப்பர் செய்த வழிபாடு பசுகரணம் எனப்படும். மாந்தர் தன் சிற்றறிவால் ஐம்புலன்களையும் அந்தக்கரணங்களையும் கொண்டு செயல்படும் முறை. இது அவர்தம் குல வழக்கப் படி செய்த வழிபாடாகும். 6-வது நாள் அவர் செய்த செயல் பதி கரணமாகும். இறைவனே அவரை ஆட்கோண்டு அவ்வாறு செய்ய வைத்தமையால் தான் செய்வது அறியாது சிவன் செயலே என்று பெறப்படுவது பதி கரணமாகும். இவ்வாறு நடந்தது கண்ணப்ப நாயனாரின் முன் தவப் பயன் என்றும் சேக்கிழார் விளக்குவார். முப்பிறவியில் சிவ சம்பந்தமுடையவர் என்பது இதன் பொருளாகும். ஆகையால், கண்ணப்ப நாயனாரை மேற்கோள் காட்டி மாமிசம் படைத்து வழிபாடு செய்வது சைவத்தில் ஏற்புடையது என்பது பிழையான கருத்தாகும். இன்றோ முருக வழிபாட்டில் அவ்வாறான மாமிச உணவு படைத்தல் என்பதும் களைந்து விட்டதை நாம் அறிவோமே. அப்புறம் ஏன் தமிழர் வழிபாட்டு முறையை அறியாதவர் போல் தேவை இல்லாத கருத்துட்டத்தை இங்கு பதிவு செய்ய வேண்டும்? இவ்வாறான கருத்திற்கே எமது ஆட்சேபத்தைத் தெரிவித்து தமிழர் சமய நெறியினை விளக்க முற்பட்டது. இதில் ஆதங்கமும் கலந்து இருந்ததின் காரணம் தன்னை இந்து என்று சொல்லிக் கொண்டவரே தமிழரின் உண்மை சமய நெறி அறியாமல் ஆரிய புராணக் கூற்றுகளையும், அயலார் கொடுத்த தப்பான விளக்கங்களையும் கொண்டு கட்டுரைத் தலைப்புக்குச் சற்றும் சம்பந்தம் இல்லாமல் இங்கே அவர்தம் கருத்தைப் பதிவு செய்ததுதான். இனியாவது அவர் திருந்தி வாழ்வாராக.
“அவ்வழிபாட்டில் புலால் படைத்து குரவைக் கூத்துடன், வெறியட்டாமும் கொண்டு வழிபடுவர் என்பது தெளிவு.” முதலில் நம் முதுகின் அழுக்கை சுத்தம் செய்ய வேண்டும். அடுத்தவரை சொரண்டுகிறேன் என்கிறார் ஒருவர்…..”தம் குல வழக்கப்படி புலால் உணவை படைத்து வருகின்றார்” புலால் படைக்கும் பொழுது குலம் தேவைபடுகிறது….”இன்றோ முருக வழிபாட்டில் அவ்வாறான மாமிச உணவு படைத்தல் என்பதும் களைந்து விட்டதை நாம் அறிவோமே.”….முருக வழிப்பாட்டில், அதர்வண தெய்வமான இடும்பனுக்கு, தைபூசதிர்க்கு பிறகு 16 வது நாள் இறைச்சி கறி கலபார்கலே ? தெரியாதா ? முருகர் அதர்வண தெய்வமான இடும்பனை, தன் காவலாளியாக வைத்துள்ளாரே, நேரிடியாக அவரிடமே சைவத்தை போதிக்கலாமே? என்னவே, அடுத்தவரின் வாழ்க்கையை விமர்சனம் செய்வதை நிறுத்துங்கள். “உங்கள் மனைவி அழகானவள் என்று சொல்ல உங்களுக்கு எல்லா உரிமைகளும் உள்ளது. ஆனால் அடுத்தவரின் மனைவியை பற்றி அல்ல” – கவியரசர் கண்ணதாசன் இப்படிதான் சொல்கிறார்.
அன்பே சிவம் என்று கூறும் வாயில் இப்போது தான் ஒரு வெறியர் என்று கூறுவது வேடிக்கை. சிவ புராணம் படித்து முருகன் ஏன் தென்முக கடவுள் என்று அறிவது சிறப்பு.. மலையாளிகள் ராமரை வழிபடவில்லையா ? பிறகு குருவாயூர் குருவாயுரப்பன் மற்றும் திருவனத்தபுரம் பத்மநாபன் யாராம் ? ஹ…ஹ… சரி போகட்டும். நம் மதம் எப்போதும் மாமிச உணவுவகைகளை இறைவனுக்கு படைக்க சொன்னதில்லை. கண்ணப்பறை போன்று குல அடிப்படையில் படைத்த புலாலையே இறைவன் அவரின் பக்தியை பாராட்டி ஆட்கொண்டார் . இது கான்னப்பரின் தூய பக்தியினை காட்டுகிறது. அதற்காக நாமும் புலால் படைத்தது வழிபடலாம் என்று அர்த்தமாகாது.
முருகனுக்கு , ஒரிசா , மேற்கு வங்காளம் மற்றும் ஹிமாச்சல் மாநிலங்களில் கோவில் உள்ளன. சிவனை போற்றும் பக்தர் அவர்தம் மகனான முகனை வழிபட மாட்டாரா!!1 ஹிந்து மதம் சமுத்திரம் போன்றது . அதன் அருமையை உணர்வதற்கு அவ்வளவு எளிதல்ல .
ஒரிசாவில் பலஆயிரகணக்கான தமிழர்கள் அங்கெ வாழ்கிறார்கள் ..மற்ற மாநிலங்களிலும் வாழலாம் .. –
தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்ந்தார்களோ அங்கெல்லாம் சென்று ஆக்கிரமிப்பது வடுக வரலாறு .. அதிலும் சொந்த அடையாளத்தை மறைத்தே ஆக்கிரமிப்பது தனிச்சிறப்பு !
போங்க நைனா போய் திசைமாறும் வைணவர்களை சங்கத்தில் இணைத்து இந்துமதத்தை பெருக்குங்கள் …எங்க நேரத்தை வீணடிகாதீர்கள்.. நன்றி வணக்கம்
மனிதனின் உணவு செரிமான வழியை முதலில் புரிந்து கொள்ளுங்கள். ஆடு இல்லை தலை மட்டும் உண்ணும் ஒரு பிராணி; அல்லது ஒரு உயிரினம். புலி சிங்கம் ரத்த உணவைதான் சாப்பிடும். ஆனால் உலகில் உள்ள அணைத்து மனிதர்களும், காய்கறி, தாவர இறைச்சி, இப்படி வகைவகையான உணவுகளை செரிமானாம் செய்யும் வயிறு கடவுள் படைத்திருக்கிறார்… உலகத்தில் இருக்கும் 800 கோடி மக்களில், 10 கோடி தமிழர்கள். அதிலும் ஒரு சிறு சாரர் சொல்கிறார்கள், கடவுள் சைவம் என்ற உயிர் உள்ள காய்கறிகளை, தாவர வகைகளை மட்டும் சாப்பிட சொன்னார் என்று. அந்த காய் கறிகளை பறிக்கும் போதும், வெட்டும் போதும், அவைகளுக்கு வலிக்கும். அவைகளின் ரத்தம் வெள்ளை. நம் காது 20-20 கிலோ ஹெர்ட்ழ்(HERTZ) ஒலி மட்டும் கேட்கும் தன்மையுடையது. அவைகள் அழும் பொழுது, 10 ஹெர்ட்ழ் ஒலிக்கு கீழ் ஒலி எழுப்பும். நமக்கு விளங்காது. எனவே அவை அழவில்லை என்பது, எப்படி அறிவுடைமை ஆகும் ?
ஹ…ஹ… தமிழர் எழுச்சிப்பறை உம்மை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது. வடக்கில் எங்கே கந்தன் கோவில் என்றீர் , எங்கு உள்ளது என்று குறிப்பிட்டேன். இப்போது அங்கு தமிழர்கள் வாழ்கிறார்கள் என்று கூறுகிறீர் ..நீர் எந்த அளவிற்கு சிவனையும் சைவத்தையும் பின்பற்றுகிறீர் என்று தெரிகிறது. சரி போகிறது. சிவனையாவது நல்ல முறையில் வழிபட்டு வாருங்கள்.
இறைவன் நமக்கு வேண்டிய அனைத்தையும் நம்மிடமே வழங்கி விட்டார்,புலன்கள் ஐந்தும் அவ்வாரே. x – men சக்திகள் எல்லாம் சித்தர்கள் நிலை,உயிர் கொல்லாமை சாதாரண மனிதனின் ஐம்புலன்களுக்கு (பஞ்ச புதங்களுக்கு) https://en.wikipedia.org/wiki/Tattva_(Siddha_Medicine) உற்பட்டது.திலிப் ஐயா…இதை தங்களுக்கு நான் சொல்ல செய்ய தேவை இல்லை! நமது விவாதம் இங்கே மனிதனுக்கு தன்னையே உணவாக அளித்த தாவரம் இறக்குமா? அல்லது பிராணி இறக்குமா?
தைபூசமும் முடிந்து விட்டது. இன்னும் பொங்கலை கட்டிக்கிட்டு அழுவதை பார்த்தால் சிரிப்புதான் வருது.
பிராணிகள் குட்டி போட்டு கொண்டே இருக்கும். அதுதான் அதனின் வேலை. குமரன் அவர்களே, எல்லா உயிரினங்களுக்கும் வேலை உண்டு. பேய்களுக்கும் கூட. இந்து மதம் மிகவும் தத்ருபமாக விளக்குகிறது. உங்கள் வாததிர்க்கே வருகிறேன். எங்கே ஒரு புலியிடம் சென்று, கடவுள் நம்மை சைவமாக சாப்பிட சொல்கிரா என்று சொல்லுங்கள் பாப்போம் ?
தமிழர் சமயத்தை உள்வாங்கி கொண்டு அதில் ஆரியன் பல பல சேர்க்கைகளை சேர்த்து உருவாக்கியதுதான் தற்பொழுது உள்ள இந்து சமயம் . ஆரியனின் கட்டமைப்ப்பு எப்படி என்றால் , எதிரியை பலத்தால் எதிர்க்க முடியாவிடில் அவனை உறவாடி கவிழ்ப்பது . இதற்க்கு நல்ல உதாரணம் , சில காலங்களுக்கு முன்பு திருவள்ளுவர் சிலை அல்லது படத்தில் திருவள்ளுவர் பூணூல் இருக்கும் படியாக செய்து அவரை பிராமணன் என்றான் ஆரியன் , பின்பு பலத்த எதிர்ப்பு கிளம்பியதுடன் அது கை விட பட்டது .
ஆரியனின் முதல் வேதத்தில் என்ன உள்ளது , எழுத பட்ட காலம் எது, எப்படி தமிழ் சொற்கள் அதில் பிரயோகிக்க பட்டது ? ஆரியனின் DNA /மரபணு ஏன் திராவிடர்களுடன் வேருபடிகிறது (திராவிடர்கள் தென் இந்தியாவை வடக்கிலும் உள்ளனர் )? ஆரியனின் DNA ஏன் இந்தியன் அல்லாதவரோடு ஒன்று படுகிறது ? அவன் வந்தேறி என்பதற்கு இதுவே முதல் சான்று .
ஆரியனின் தலைவன் / அரசனே இராமன் போன்ற அவனின் கடவுள்கள் மேலும் அவனின் கடவுள்கள் 170,000 ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் வாழ்த்தாக கூறுவது நகைப்பாக உள்ளது. பூமியில் மனிதன் இனம் எப்படி , எப்பொழுது உருவாகியது அதன் பிறகு பனிக்காலம் , கற்காலம் பின் உலோக காலங்களின் வயது என்ன ?
சரி அப்படியே ஆரியன் கூறுவது உண்மை என்று வைத்தாலும் அந்த கதைகளெல்லாம் எப்படி நேற்று நடந்ததுபோல் அவ்வளவு நேர்த்தியாகவும் கோர்வையாகவும் எழுத முடியும் ? யோசிக்கவும்..
ஏதேனும் நம்பும் அளவுக்கு ஆதாரம் உண்டா ?
தமிழரிடமிருந்து தன் வசமாக்கப்பட்ட பல பொக்கிசங்கள் ஆரியனின் வேதத்தில் உள்ளது , அவனின் வேதங்கள் எழுத பட்ட கால கட்டங்கள் எதுவென்று ஆரிய பற்றாளர்கள் கூற இயலும்மா ?
ஆரியன் தமிழரை தனது ஆதிக்கத்தில் எப்பொழுதும் வைத்துகொள்ள கையாண்ட பல தந்திரங்களில் ஒன்றுதான் இந்த “சித்திரை தமிழ் வருட பிறப்பு ” இதை அறியாமல் பலர் ஆரிய நா….ய்களை தை மேல் வைத்து ஆடுகின்றனர் . தமிழனுக்கு புத்தாண்டை நிர்ணைக்க இந்த ஆரிய நா …..ய் யார் ?
முதலில் ஆரிய நா….ய்களின் வரலாறை படியுங்கள் பிறகு புரியும் அவன் யார் என்று . சுமார் 2 அல்லது 3 விழுக்காடு தான் தமிழ் நாட்டில் ஆரியன் ஆனால் அவன் தான் மற்ற 97 விழுக்காடு மக்களை சூழ்ச்சியுடன் ஆண்டுகொண்டுவருகிறான் . இது ஏன் யாருக்கும் புரிய மாட்டின்கிறது? சும்மா கண்மூடி தனமாக ஆரிய நா…ய் விட்ட கதைகளை ஏன் நம்புகிறார்கள் என்றுதான் புரியவில்லை, இதில் படித்தவர்கள் என்று கூறி கொள்பவர்கள் அவனை தாங்குவதுதான் நகைப்பாக உள்ளது ….பகுத்தறிவுடன் சிந்தியுங்கள் தமிழர்களே…
திலிப் 2 அவர்களே, உங்கள் கேள்வி வேடிக்கையாக இருக்கிறது. முதலில் புலியின் பல் அமைப்பு , ஆடு/மாடு/குதிரையின் பல் அமைப்பு மற்றும் மனிதனின் பல் அமைப்பு எவ்வாறு அமையபெற்றுள்ளது என்று பாருங்கள் , உங்கள் கேள்வியின் பதில் அதில் உள்ளது . இயற்கையின் “food chain ” எப்படி நடைபெறுகிறது மற்றும் அதன் முக்கியத்துவம் என்ன என்பது நான் சொல்ல தேவையில்லை உங்களுக்கு .
சைவம் என்பது சமயம் உணவல்ல ! சைவர்கள் சார்ந்திருப்பது சைவ சமயம் . மரக்கறி உனவென்பதெ சரி.
உங்களின் கீதையில் “அணைத்து உயிரினத்திலும் கடவுள் உள்ளதாக ” கூறப்பட்டுள்ளதே ???? அப்படியாயின் எவ்வாறு மனிதன் மற்ற உயிரை கொன்று தன் பசி தீர்க்க முடியும் ?
மனித வயிர் மாமிசத்தை சீரணம் செய்ய உகந்தது அல்ல , மற்றும் மனிதனின் பல் அமைப்பும் மாமிசம் சாப்பிட உகந்ததல்ல , இதை நீங்கள் மருத்துவரிடம் உறுதி செய்துகொள்ளலாம் . மனிதனின் முன்னம் பல் வெட்ட , அதற்க்கு பிறகு கிழிக்கும் பற்கள் இறுதியாக அரைக்கும் பற்கள். மாமிசம் உண்ணும் மிருகத்திற்கு இவ்வாரா அமைத்துள்ளது ?
எப்பொழுது இடும்பன் “தெய்வம் ” ஆனார் ? எப்பொழுது அவர் முருகனுக்கு காவலாளி ஆனார் ? எப்போது இடும்பன் மாமிசம் கேட்டார் ?? ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும் …..என்ன எழுதுகிறோம் என்று அறியாமலே சிலர் எழுதுகின்றனர் போலும்………..
மனிதனுக்கு உணவாகும் சில தாவரமும் இறக்கின்றன. அவற்றுள் தண்டுக்கீரை , சிறுகீரை போன்ற கீரை வகைகளும், வெங்காயம் ,கேரட் போன்ற மண்ணிற்குள் உருவாகும் கிழங்கு வகைகளும் இறக்கின்றனவே .
மன்னா,தாங்கள் கூறுவதும் அனைத்தும் உண்மை,அதே தாவரங்களின் அறுவடைக்கு பிறகு அதாவது தேவையானதை எடுத்து கொண்டு தேவையற்றத்தை விட்டு செல்லுங்கள்,ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் கழித்து பயிர் செய்த இடத்தை சென்று பாருங்கள்,மீண்டும் தளிர் வரும்.
திலிப் ஐயா, இன விருத்தி இறைவன் படைப்பு அதில் மாற்று கருத்து இல்லை ,ஆனால் அவைகளை கொன்று உண்பவறல்ல சைவ சமயத்தார். மனிதன் herbivore அல்லது omnivore வகையை சார்ந்த பாலுட்டி என்பதை தெளிவாக tamilan tamilan கூறிவிட்டார்.நாம் மனிதனின் உணவு சங்கிலி food chain யை விவாதிக்கும் பொது ஏன் carnivore புலி சிங்கம்…..? தாங்கள் முனைவர் பட்டம் பெற்றவர் தங்களின் அறிவு பசிக்காக இங்கே Q&A session யை நடத்துவதையும் நான் அறிவேன்.தங்கள் எல்லா கேள்விகளுக்கும் இங்கே பதில் கிடைக்க வாய்ப்பு இல்லை காரணம் சித்தர்கள் அனைத்தையும் பாதுகாக்க மறை மொழியில் எழுதி உள்ளனர். ஒரே வழி சைவ சமயம்,நம் அணாவத்தை அடியோடு இறக்கி வைத்தால் அனைத்திற்கும் விடை கிடைக்கும்.நீ பணிந்தால் பணியும் அகிலமெல்லாம் என்பது சான்றோர் வாக்கு.முயற்சி செய்யுங்கள்…வாழ்த்துக்கள்!
குமரன் , நீங்கள் கூறுவதும் உண்மையே. பயிர்களில் பலவகை உண்டு. சில தாவரங்கள் துளிப்பதும் உண்டு இறப்பதும் உண்டு. தாவரத்தையும் மாமிசத்தையும் மனிதர்களும் சில மிருகங்களும் உண்பது என்பது இயற்கையே. பசு மாட்டிலிருந்து வரும் பாலும் அவ்வன்னாம்மே. பசு கன்று போட்டால் ஒழிய பால் கிடைக்காது. நம் ஹிந்து மதம் சைவ உணவையே உட்கொள்ளச் சொல்கிறது. ஆனால் இறைவன் மாமிசம் உண்பரை ஒதுக்குவதில்லை. இங்கு காண வேண்டியது பக்தி மற்றும் நமது அறச் செயல்களை தவிர வேறு ஒன்றும் இல்லை. சைவம் வைஷ்ணவம் என்று ஏன் இந்த வேற்பாடு நம்மிடையே ? தேவை யற்ற ஒன்று. .
மன்னா,அரியும் அறனும் ஒன்று என்பதை நான் மறுக்கவில்லை! தங்களுக்கு உயிர்நாடி வைணவம் என்றால் எங்களுக்கு சைவம்.அதில் தப்பேதும் கண்டிர்களா? நான் சைவம் என்ற உடன் தங்களால் ஜீரணிக்க முடியவில்லை பிறகு ஏனையா வைணவத்தை எங்கள் மீது திணிக்க முயற்சி? நான் இங்கு வேற்றுமை காண வரவில்லை,உலகளவில் நடப்பதையே விவரிக்கிறேன்.தங்கள் கருத்து பரிமாற்றதிக்கு மிக்க நன்றி,என் வரிகள் தங்களை புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
“மனித வயிர் மாமிசத்தை சீரணம் செய்ய உகந்தது அல்ல , மற்றும் மனிதனின் பல் அமைப்பும் மாமிசம் சாப்பிட உகந்ததல்ல , இதை நீங்கள் மருத்துவரிடம் உறுதி செய்துகொள்ளலாம் .” என்று tamil தமிழன் அவர்கள் குறிபிட்டுள்ளீர்கள். உலகத்தில் இருக்கும் 790 கோடி மக்கள் அசைவ உணவை உண்கிறார்கள். 10 கோடிக்கும் குறைவான சைவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக 2+3=7 விடுமா என்ன ? நீங்கள் சொல்வது போல் அல்ல மனிதனின் உடல் அமைப்பு. வேறு யாரிடிமாவது சொல்லுங்கள் உங்கள் கதையை….அதற்க்கு ஜால்ரா வேறு ….காச்சையில் இருக்கிறன். மீண்டு வந்து எழுதுவேன் … அதுவரை … விளையாடுங்கள் ….
குமரன் நான் சைவமும் அல்ல வைஷ்ணவும் அல்ல. அரி ஹரன் ஒருவரே என்று வழிபடுபவன். எமக்கு இந்த சைவ சித்தாந்தம் மற்றும் வைஷ்ணவ சித்தாந்தம் இரண்டிலும் உடன் பாடு இல்லை. இவ்விரண்டும் இணைந்ததே ஹிந்து மதம். இதையே சிவனும் விஷ்ணுவும் போதிக்கிறார்கள். நாமும் இதையே பின்பற்றுகிறேன். நீர் சைவ மார்கத்தில் இருந்து சிவனை மட்டும் வழிபட்டாலும் வைஷ்ணவனாக இருந்து விஷ்ணுவை வழிபட்டாலும் அது அவர்தம் விருப்பம். யாம் என்ன கூற விரும்புகிறேன் என்றால் , சிவவிஷ்ணுவை தனி தனியே நீங்கள் வழிபட்டாலும் ஒருவருக்கொருவர் மற்றவரை மனம் புண்படி எழுத வேண்டாமே. இதையே நாம் சொல்ல விரும்புவது.. இறைவனும் விரும்புவது.
சமய நெறியும் அதனதன் தத்துவங்களும் தெரியாதவன் வாழும் வாழ்க்கை எம்மதமும் சம்மதம் என்று வாழும் வாழ்க்கை. இது ஒருவரை இறை நெறியில் உய்யவைக்காது. இவ்வுயிர் மீண்டும் மீண்டும் பிறப்பெய்தும். பிறவாக் கடல் நீந்தாது.
நன்றி மன்னன்,நீங்கள் சொல்வதும் உண்மைதான்….சிவவிஷ்ணு வழிபாட்டை தொடருங்கள் நல்லது நடக்கட்டும்.
திலிப், ஆணவ மலத்தை நீ வெல்லும் வரை அது உன்னை ஆளும் எனவே இன்று போய் நாளை வா!