ஜேர்மனி நாட்டில் குளிக்க வரும் பெண்களிடம் அகதிகள் அத்துமீறி நடந்துகொள்வதாக எழுந்த புகாரை தொடர்ந்து பொது நீச்சல் குளங்களில் குளிக்க அகதிகளுக்கு அரசு தடை விதித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஜேர்மனியின் Frankfurt மாகாணத்தில் உள்ள Bornheim என்ற நகராட்சி நிர்வாகம் தான் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த நகரில் உள்ள பொது நீச்சல் குளத்திற்கு அருகிலேயே 3 அகதிகள் முகாம்கள் அமைந்துள்ளன.
இங்குள்ள அகதிகள் நீச்சல் குளத்திற்கு குளிக்க செல்கையில், அங்கு நீச்சல் உடுப்பில் வரும் பெண்களிடம் அத்துமீறி செயல்படுவதாக இதுவரை 6 புகார்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு கிடைத்துள்ளது.
இந்த புகார்களை தொடர்ந்து, நகரம் முழுவதும் உள்ள பொது நீச்சல் குளங்களில் 18 வயதிற்கு மேல் உள்ள ஆண் அகதிகளுக்கு குளிக்க தடை விதிப்பதாக அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதுமட்டுமில்லாமல், அகதிகள் முகாம்களுக்கு சென்ற நகராட்சி அதிகாரிகள் அவர்களிடம் துண்டு பிரசுரங்களை கொடுத்து ‘நீச்சல் குளங்களில் குளிக்க உங்களை தடை செய்துள்ளதாக’ நேரடியாக தெரிவித்துள்ளனர்.
எனினும், இந்த நடவடிக்கைகள் மூலம் அகதிகள் அத்துமீறல்களில் ஈடுபடாமல் இருந்தால், இந்த தடை உடனடியாக விலக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், முனிச் நகர அதிகாரிகளும் அகதிகள் முகாம்களுக்கு நேரடியாக சென்று ’பொது நீச்சல் குளங்களில் எவ்வாறு நாகரீகமாக நடந்துக்கொள்ள வேண்டும்.
பெண்களுக்கு அச்சுறுத்தல் இல்லாமல் எவ்வாறு குளிக்க வேண்டும்’ என்ற விதிமுறைகள் அடங்கிய பிரசுரங்களை அகதிகளிடம் நேரடியாக வழங்கி அறிவுறுத்தியுள்ளனர்.
முனிச் நகரில் மட்டும் உள்ள 18 நீச்சல் குளங்களில் இதுபோன்ற புகார்கள் எழுந்ததால், நகராட்சி நிர்வாகம் இந்த அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-http://world.lankasri.com


























