போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நிபுணர்கள்! பல்வேறு தரப்புகள் வலியுறுத்தல்

channel-04எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கப்படவுள்ள போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நிபுணர்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகின்றது.

விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

இலங்கையின் நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் ஆகியோர் இந்த விசாரணைகளை நெறிப்படுத்தவுள்ளனர்.

வெளிநாட்டு நிபுணர்கள் சிலர் இவ்விசாரணைகளின் பார்வையாளர்களாகவும், ஆலோசகர்களாகவும் அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் நிபுணர்கள் செயற்பாட்டு ரீதியாக பங்களிக்கும் வகையில் உள்வாங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை சிவில் சமூகத்தினர் மத்தியில் வலுப்பெற்று வருகின்றது.

இலங்கையின் முக்கிய சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் 40 பேர் மற்றும் 11 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என்பன இணைந்து இது தொடர்பான கடிதமொன்றை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

-http://www.tamilwin.com

TAGS: