பொங்கல் விழா என்று கூறி , யாழ் சென்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க , அங்கே மக்கள் மத்தியில் உரையாற்ற இருந்தார். ஒரு நாட்டின் பிரதமர் உரையாற்றிய பின்னரே, அன் நாட்டில் உள்ள முதலமைச்சர் உரையாற்றுவது வழக்கம். ஆனால் வழமைக்கு மாறாக முதலில் வட மாகாண முதலமைச்சர் விக்கி ஐயாவை உரையாற்ற அழைத்திருந்தார்கள். இதற்கு பின்னால் ஒரு சூட்சுமமும் இருந்தது. ஒருவேளை ரணில் உரையாற்றியதன் பின்னர் விக்கினேஸ்வரன் உரையாற்றி இருந்தால் , அவர் நிச்சயம் தனது அதிருப்த்திகளை முன்வைப்பார். அதன் பின்னர் யாரும் அதற்கான பதிலை வழங்க முடியாது போய்விடும். எனவே முதலில் அவரை பேசவிட்டால் , அவர் ஒருவேளை மேடையில் ஏதாவது அதிருப்த்தியை வெளியிட்டால், அதனை ரணில் கவுண்டர் பண்ண முடியும் அல்லவா.. இது தான் இவர்களது திட்டம்.
ஆனால் இதனை நன்றாக அறிந்து வைத்திருந்த விக்கினேஸ்வரன் ஐயா,
1. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சனை இன்னும் தீரவில்லை.
2 அரசியல் கைதிகள் விடுவிக்கபடவில்லை
3. வட கிழக்கில் ராணுவத்தின் பிரசன்னம் குறைக்கப்படவில்லை
என்ற மூன்று விடையங்களை முன்வைத்து ஒரு முழக்கம் இட்டார். வழமைபோலவிக்கினேஸ்வரன் ஐயா சில விடையங்களை மேடையில் போட்டு உடைப்பார் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்கனவே எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால் இப்படி தெளிவாக , ஒரு ஆணித்தரமாக சொல்லுவார் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. இதனால் மேடையில் இருந்த ரணில் சிறிய குறிப்பு ஒன்றை உடனே எழுதவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். ஏன் என்றால் , விக்கினேஸ்வரன் சொன்ன விடையங்களுக்கு பதில் சொல்லவேண்டும் அல்லவா ? அது தான். பொங்கல் விழா முடிந்துவிட்டது. ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள்…. இந்த மனுஷனை எப்படி திருத்துவது என்று தெரியவில்லை என்று பேசிக்கொண்டார்கள் என விடையம் அறிந்த வட்டாரங்கள் அதிர்வுக்கு தெரிவித்தார்கள்.
ரணில் முன் ஏன் இப்படி பேசவேண்டும் ? சற்று மெதுவான போக்கை கடைப்பிடித்து எமக்கு தேவையானதை நாம் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பது சம்பந்தர் சுமந்திரன் கருத்து(அதாவது சிங்களவர் காலில் விழுந்து). ஆனால் எமது உரிமையை நாமே தலை நிமிர்ந்து நின்று பெற்றுக்கொள்ளவேண்டியது எமது கடமை என்ற மனப் போக்கில் உள்ளார் விக்கினேஸ்வரன் ஐயா. இவர்களின் யார் சுத்த தமிழன் என்பது நாம் சொல்லிப் புரியவேண்டிய அவசியம் உங்களுக்கு இல்லை.
அதிர்வுக்காக,
கண்ணன்
-http://www.athirvu.com
விக்னேஷ் ஐயாவுக்கு தலை வணங்குகிறேன்.