புதிய அரசியலமைப்பு எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பில் பொதுமக்களின் கருத்துகளை அறிவதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழு, அடுத்த மாதம் 5 ஆம் திகதி முதல் வடக்கில் பொதுஅமர்வுகளை நடத்தவுள்ளது.
இதற்காக அக்குழுவினர் வடக்கிலுள்ள ஐந்து மாவட்டங்களுக்கும் செல்லவுள்ளனர்.
இதன்படி, பெப்ரவரி 5, 6ஆம் திகதிகளில் வவுனியா மாவட்டத்திலும், 8, 9 ஆகிய திகதிகளில் கிளிநொச்சி மாவட்டத்திலும்,10,11 ஆகிய திகதிகளில் மன்னார் மாவட்டத்திலும் 12,13 ஆகிய திகதிகளில் யாழ்ப்பாணம் மாவட்டத்திலும் அமர்வு நடத்தப்பட்டு பொதுமக்களிடம் கருத்து கோரப்படும்.
அத்துடன், பெப்ரவரி 23ம் திகதி முதல் கிழக்கு மாகாணத்துக்கும் குறித்த குழு செல்லவுள்ளது.
அந்தவகையில் 23 , 24 ஆகிய திகதிகளில் திருகோணமலை மாவட்டத்திலும், 25,26 ஆகிய திகதிகளில் மட்டக்களப்பு மாவட்டத்திலும், 27,29 ஆகிய திகதிகளில் அம்பாறை மாவட்டத்திலும் அமர்வு நடத்தப்படும்.
கொழும்பு மாவட்டத்தில் பணிகள் நேற்று ஆரம்பமாகின. எதிர்வரும் 22ஆம் திகதி முதல் விசும்பாய அலுவலகத்துக்கு வந்து கொழும்பு மாவட்டத்தில் வாழ் மக்கள் புதிய அரசியலமைப்பு எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பில் தமது கருத்துக்களை முன்வைக்க முடியும்.
-http://www.tamilwin.com