இலங்கை இனப்பிரச்சினைக்கு நீதியான தீர்வு காண்பதில் கனடா அக்கறை!- வெளியுறவு அமைச்சர் தெரிவிப்பு!

stephane-dionஇலங்கையில் நீடித்து நிலைத்து வரும் இனப்பிரச்சினைக்கு ஒரு நியாயமான, நீதியான தீர்வு காண்பதில் கனடா அக்கறையோடு இருக்கின்றது. இவ்வாறு கனேடிய வெளியுறவு அமைச்சர் ஸ்ரபேன் டியோன் தெரிவித்தார்.

கனேடிய தமிழர் பேரவை கடந்த சனிக்கிழமை நடத்திய பொங்கல் விழாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு ‘வாழும் வீரர்’ (Living Hero Award) என்ற விருது வழங்கி மதிப்பளித்துள்ளது. சம்பந்தன் சார்பாக அந்த விருதை கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கனடா சென்று பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கனேடிய வெளியுறவு அமைச்சர் ஸ்ரபேன் டியோன் மேற்கண்டவாறு கூறினார்.

இந்நிகழ்வில் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. உரையாற்றும் போது, கடந்த ஒக்டோபர் முதல் நாள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவும் இலங்கை அரசும் கூட்டாக முன்மொழிந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு கனடாவின் பங்களிப்பு முக்கியமாக அமைந்திருந்த்து. அதற்காக கனேடிய அரசுக்கு நன்றி சொல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடமைப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இனப்பிரச்சினைக்கு ஒரு நியாயமான, நீண்டகாலம் நிலைத்து நிற்கக்கூடிய அரசியல் தீர்வை எட்டலாம் என்ற நம்பிக்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயாவுக்கு இருக்கின்றது. அதற்கான முயற்சியில் நாம் ஈடுபட்டு வருகின்றோம் என்று கூறினார்.

இதுவிடயம் தொடர்பாக பதிலுக்கு உரையாற்றும் போதே கனேடிய வெளியுறவு அமைச்சர் ஸ்ரபேன் டியோன் மேற்கண்டவாறு கூறினார்.

-http://www.tamilwin.com

TAGS: