கடும் குளிரை தாங்காமல் உடல் உறைந்து உயிரிழந்த நபர்: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

winter_dead_001பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் வீசிய கடும் குளிரை எதிர்க்கொள்ள முடியாமல் உடல் உறைந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாரீஸ் நகரில் உள்ள பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் அதிக எண்ணிக்கையிலான வீடற்ற நபர்கள் இரவு பகல் என தங்கி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 3 நாட்களில் 0 டிகிரியில் கடும் குளிர் வீசி வந்ததை எதிர்க்கொள்ள முடியாத 50 வயதான நபர் ஒருவர் பரிதாபமாக உடல் உறைந்து உயிரிழந்துள்ளார்.

வீடற்ற நபர்களின் நலனிற்காக இயங்கி வரும் Les Enfants du Canal என்ற அமைப்பு கூறுகையில் ’கடும் குளிர் ஏற்பட்டபோது நபருக்கு திடீரென இதய கோளாறு ஏற்பட்டதால் உயிரிழப்பு ஏற்பட்டுருக்கலாம்’ என தெரிவித்துள்ளது.

உயிரிழந்த நபரின் ஆரோக்கியம் குறித்து கடந்த டிசம்பர் 9ம் திகதி இலவச மருத்துவ சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

வீடற்ற நபர்கள் அநியாயமாக உயிரிழப்பதற்கு அரசின் மோசமான கொள்கை திட்டங்கள் தான் காரணம் என அந்த அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் நாடு முழுவதும் சுமார் 1,40,000 நபர்கள் வீடு இல்லாமல் பொது இடங்களில் வசித்து வருகின்றனர்.

2016 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த 22 நாட்களில் மட்டும் 21 வீடற்ற நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

கடந்தாண்டு மட்டும் 450 வீடற்ற நபர்கள் மோசமான உடல்நிலைகள் காரணமாக உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்களின் சராசரி வயது 50 ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

-http://world.lankasri.com