டிபிபிஏ-யை எதிர்த்து நண்பர்களும் எதிரிகளும் ஒன்று கூடுகின்றனர்

rally2016ஆம்  ஆண்டில்  முதலாவது  முக்கிய  பேரணி  இன்று    நடைபெறுகிறது.

இன்னும்  மூன்று  நாள்களில்  நாடாளுமன்றத்தில்  விவாதிக்கப்படவுள்ள  பசிபிக்  மண்டல  வர்த்தக்  பங்காளித்துவ  ஒப்பந்தத்தை(டிபிபிஏ)  எதிர்த்து  கோலாலும்பூரில்  நடைபெறும்  அப்பேரணியில்  ஆயிரக்கணக்கானோர் திரள்வார்கள்  என்று  எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற  விவகாரங்களில்  ஒன்றுக்கொன்று  மோதிக்  கொள்ளும்  பல  அமைப்புகள்  டிபிபிஏ- எதிர்ப்பில்  ஒன்றுபட்டிருப்பது  குறிப்பிடத்தக்கது.

அபிம்  ஏற்பாடு  செய்துள்ள  இப்பேரணியில்  பாஸ்,  அமானா,  பெர்க்காசா, பெர்சே,  இஸ்மா,  பிஎஸ்எம்  முதலிய  அமைப்புகள்  கலந்துகொள்கின்றன.

பெர்க்காசா, இஸ்மா  ஆகியவை  டிபிபிஏ-யால்  மலாய்க்காரர்களின்  உரிமை  பறிபோகும்  என  அஞ்சுகின்றன.

பிஎஸ்எம்,  அமானா,  பெர்சே  ஆகியவை  டிபிபிஏ-யால்  உள்ளூர்  மக்கள்  பாதிக்கப்படுவார்கள்  என்றும்  பொருளாதாரத்  தொல்லைகள்  மேலும்  மோசமடையும்  எனக்  கவலை  கொண்டுள்ளன.

கருத்து  வேறுபாடு  கொண்ட  அமைப்புகள்  பேரணியை  எப்படி  வெற்றிகரமாக  நடத்தப்போகின்றன  என்பதைக்  காண  சுவாரஸ்யமாக  இருக்கும்.