புதிய அரசியலமைப்பு அமைக்கும் அரசாங்கத்தின் முயற்சி வெற்றியளிக்காது என தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கம் புதிய அரசியலமைப்பு குறித்த உத்தேச யோசனையை கால தாமதப்படுத்தி இறுதியில், திட்டத்தை நிச்சயமாக கைவிட்டுவிடும்.
புதிய அரசியலமைப்பு உருவாக்கும் யோசனையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் சமர்ப்பித்தார், இது ஐக்கிய தேசியக் கட்சியின் தனி யோசனைத் திட்டமாகவே கொண்டு வரப்பட்டது.
இதனால், குறித்த யோசனைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் ஆதரவு வழங்கவில்லை.
புதிய அரசியல் சாசனம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனாதிபதித் தேர்தல் கொள்கைப் பிரகடனத்திற்கு முரணானது.
எனவே புதிய அரசியலமைப்பு உருவாக்கும் அரசாங்கத்தின் முயற்சி வெற்றியளிக்காது.
விரைவில் அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பு குறித்த யோசனை வாபஸ் பெற்றுக் கொள்ளப்படும் என வீரகுமார திஸாநாயக்க சிங்கள பத்திரிகையொன்றுக்கு நேர்காணல் வழங்கியுள்ளார்.
-http://www.tamilwin.com