எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் சமஷ்டி அடிப்படையிலான தீர்வொன்றுக்கு வலியுறுத்தி வருவதாக திவயின சிங்களப் பத்திரிகை கவலை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அப்பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தமிழ் மக்களை நிர்வகிக்க கொழும்பு அரசாங்கத்துக்கு எந்தவித உரிமையும் இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் கிளிநொச்சியில் தெரிவித்துள்ளார்.
இறையாண்மை என்பது அரசாங்கத்துக்கு அன்றி பொதுமக்களுக்கே உரியது என்று தெரிவித்துள்ள அவர், இந்நாட்டில் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் அமைப்பு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும் சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வு என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ் மக்கள் பேரவை அரசியலமைப்பு மாற்றம் தொடர்பாக முன்வைக்கும் பிரேரணைகள் தொடர்பில் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளதாகவும் குறித்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-http://www.tamilwin.com