உலகில் வன்முறைகள் அதிகம் தலைவிரித்தாடும் நகரங்களின் பட்டியலை மெக்சிகோவின் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் குற்றவியல் நீதியகம் வெளியிட்டுள்ளது.
மெக்சிகோவின் பொதுமக்கள் பாதுகாப்பு எனும் அமைப்பு வெளியிட்ட இந்த பட்டியலில் குறிப்பிட்டுள்ள் 21 நகரங்கள் பிரேசில் நாட்டில் உள்ளதாக தெரிய வந்துள்ளது.
லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒட்டுமொத்தமாக 41 நகரங்களில் உலக அளவில் அதிக வன்முறை நடைபெற்று வருவதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
போதை மருந்து கடத்தல், குழுக்களுக்கு இடையேயான சண்டைகள், ஸ்திரத்தன்மை அற்ற அரசியல், ஊழல், ஏழ்மை என பல காரணிகளை அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
ஆனால் அந்த அமைப்பு அமெரிக்க நகரங்களான St Louis, Baltimore, Detroit, New Orleans உள்ளிட்ட நகரங்களை குறிப்பிடவில்லை.
இந்த பட்டியலில் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதியாக வெனிசுலாவின் கராகஸ் நகரத்தை குறிப்பிட்டுள்ளனர்.
பொருளாதாரம் மற்றும் அரசியல் சீர்கேடு காரணமாகவே அங்கு அதிக வன்முறைகள் நடந்தேறுவதாக கூறப்படுகிறது.
-http://world.lankasri.com