ஜேர்மனியில் அதிகரித்து வரும் அகதிகளின் எண்ணிக்கையால் யூதர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் அதிகரித்துள்ளது.
ஜேர்மனியின் தஞ்சமடையும் அகதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது.
மேலும் அகதிகளில் பெரும்பாலானோர் இஸ்லாமிய நாடுகளில் இருந்து வருவதால் ஜேர்மனியில் உள்ள யூதர்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அகதிகளாக வருபவர்களில் பெரும்பாலானோர் Antisemitism (யூத எதிர்ப்பு) மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான கொள்கை உடையவர்களாக இருப்பதே இதற்கு காரணம் என்று யூதர்களுக்கான மத்திய குழுவின் தலைவர் Josef Schuster தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகவே முகாம்களில் பணியாற்றும் யூதர்கள் தங்களின் அடையாளத்தை மறைத்தபடி பணியாற்றும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஹிட்லர் காலத்தில் சுமார் 6 மில்லியனுக்கும் அதிகமான யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதன்பின்னர் தற்போது 1 லட்சம் யூதர்கள் மட்டுமே ஜேர்மனியில் வசிக்கின்றனர்.
அவர்களில் 64 சதவீதம் பேர் தாங்கள் யூதர்கள் என்ற அடையாளத்தை பொது இடத்தில் காட்டாமல் வாழ்ந்து வருகின்றனர் என்று ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
ஜேர்மனியின் சான்செலர் ஏஞ்சலா மேர்கல் இது தொடர்பாக கூறுகையில், நாம் நினைத்ததை விட யூத எதிர்ப்பு என்பது அதிகரித்து வருகிறது.
எனவே நாம் அதை எதிர்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அங்குள்ள யூதர்கள் அச்சத்துடனேயே தங்களின் வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.
-http://world.lankasri.com




























எத்தனை யூதர்களை இவர்கள் கொன்று உள்ளனர் ?????????????