ஒவ்வொரு ஆணும் இரண்டு பெண்களை திருமணம் செய்ய வேண்டும்! எதற்காக இந்த அதிரடி உத்தரவு?

eritria_001ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான எரித்திரியாவில் உள்ள ஒவ்வொரு ஆணும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்றும், மீறினால் சிறை தண்டனை விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

எரித்திரிய அரசாங்கத்தின் உயரிய மத அமைப்பான கிராண்ட் மஃப்ட்டி(Grand Mufti) இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அரேபிய மொழியில் உள்ள அந்த அரசு அறிவிப்பில், ‘எரித்திரிய நாட்டு ஒவ்வொரு ஆண்களும் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

மேலும், இந்த திருமணத்திற்கு ஆகும் செலவுகள் மற்றும் புதிய வீடுகளில் குடியேறுவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கமே செலவு செய்யும் எனவும் அந்த அரசு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசின் இந்த உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஆயுள் தண்டனைக்கூட விதிக்க வாய்ப்புள்ளதாகவும் அந்த அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எரித்திரியா நாட்டில் ஆண்களை விட பெண்களே அதிக எண்ணிக்கையில் இருப்பதால் இந்த அதிரடி உத்தரவிற்கு காரணம் என கூறப்படுகிறது.

எரித்திரியா நாட்டிற்கு அருகில் உள்ள எத்தியோப்பியா நாட்டுடன் கடந்த 1998 மற்றும் 2000 ஆண்டுகளில் கடும் யுத்தம் ஏற்பட்டது.

அந்த காலக்கட்டத்தில் எரித்திரியாவில் சுமார் 40 லட்சம் மக்கள் தொகையே இருந்துள்ளனர்.

மேலும், இந்த கடுமையான யுத்தத்தில் பங்கேற்ற சுமார் 1,50,000 வீரர்கள் உயிரிழந்ததால், அந்நாட்டில் ஆண்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

எனவே, நாட்டின் ஆண், பெண் விகிதாசாரத்தை சமன்படுத்தவே அரசு இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

-http://world.lankasri.com