நேபாள் நாட்டை சேர்ந்த 112 வயதான மூதாட்டி ஒருவர் தொடர்ந்து 95 வருடங்களாக புகைபிடித்துக்கொண்டு ஆரோக்கியமாக வாழ்ந்து வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேபாளத்தில் உள்ள பெயர் வெளியிடப்படாத கிராமம் ஒன்றில் Batuli Lamichhane என்ற பெயருடைய 112 வயதான மூதாட்டி வசித்து வருகிறார்.
இவர் கடந்த 1903ம் ஆண்டு மார்ச் மாதத்தில் பிறந்தவர். 17 வயது இளம்பெண்ணாக இருந்தபோது புகைப்பிடிக்கும் பழக்கத்தை தொடங்கியுள்ளார்.
அன்று முதல் இன்று வரை ஒவ்வொரு நாளும் 30 சிகரெட்டுகளை தொடர்ந்து பிடித்து வருகிறார்.
இதுமட்டுமல்லாமல், இவருடைய அன்றாட பணிகளை இவரே கவனித்து வருகிறார்.
தொடர்ந்து புகைப்பிடிப்பது குறித்தும், நீடித்து ஆயுளுடன் வாழ்வதற்கு என்ன காரணம் என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
‘இந்த நவீன காலத்தில் அனைவரும் பல்வேறு பிரச்சனைகள் அல்லது வேலைப்பளு காரணமாக மிகுந்த மன அழுத்தத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
வெளியே சென்று வேலை செய்யாமல் இருக்கும் நபர்கள் மற்றும் எந்தவிதமான உடல் அசைவுகள் இல்லாமல் சோம்பேறிகளாக இருக்கும் முதியவர்கள் விரைவில் வாழ்க்கையை முடித்துக்கொள்வார்கள்.
மன அழுத்தமும், உற்சாகமின்மையும் தான் ஒருவரின் ஆயுளை குறைக்கும் என நான் நம்புகிறேன்.
80 வருடங்களுக்கு முன்னர், எனது கணவர் வேலை தேடி இந்தியாவிற்கு சென்றுவிட்டார். இன்னும் திரும்பவில்லை. ஆனால், எனக்கு எந்த மன அழுத்தமும் ஏற்படவில்லை.
தொடர்ந்து 95 வருடங்களாக புகைபிடித்து வருகிறேன். எனக்கு இதுவரை எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. ஆனால், விற்பனைக்கு வரும் சிகரெட்டுகளை நான் பிடிப்பதில்லை.
இந்த கிராமத்தில் போதை தரும் காய்ந்த இலைகளில் செய்யப்படும் பீடி போன்ற சிகரெட்டுகளை மட்டுமே பிடிக்கிறேன்’ என பதிலளித்துள்ளார்.
ஏழ்மையான குடும்பத்தில் வசித்து வரும் அந்த மூதாட்டியின் அன்றாட செலவுகளுக்கு அந்த கிராமத்தை சேர்ந்த இந்து கோயில் நிர்வாகிகள் மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை நன்கொடையாக வழங்கி வருவதால், அதன் மூதம் தனது தேவைகளை மூதாட்டி நிறைவேற்றி வருகிறார்.
-http://world.lankasri.com
அது நவீன சிகரெட்டுகள் அல்ல நண்பர்களே! அது கிராமத்து தயாரிப்பு. அதை அடிச்சிக்க ஆளில்லை!
அந்த சிகிரெட் எந்த கடையிலே கிடைக்கும் ?
அது கஞ்சாவாக இருக்குமோ என்னவோ ! யாருக்கு தெரியும் ? கஞ்சா பல நோய்களை குணபடுத்தும் என்று கூகளில் படித்த ஞாபகம் !
கஞ்சா என்ற பட்டத்துக்கு பொருத்தமானவர் நம் தமிழர் நந்தா
இது விதி விளக்கு. எல்லாருமே நீண்ட ஆயுளுடன் இருக்க முடியுமா? புகை பிடித்தல் நலக்கேடு. சாராயமும் நலக்கேடு -குடும்பக்கேடு- நாட்டுக்கேடு. எதோ ஒரு விதி விளக்கினை வைத்து நாம் ஏதும் கூற முடியாது. பாம்பின் கொடிய நஞ்சுவே மருந்தாகும் போது கஞ்சாவும் மருந்தாக முடியும் எல்லாவற்றிற்கும் ஒரு அளவு இருக்கிறது– ஆராய்ச்சியின் மூலம்தான் நாம் பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.