தமிழரின் வலி மகிந்தவிற்கு புரிகிறதா இன்று? ஆதங்கப்படும் முன்னாள் போராளி!

alutha_mahinda_001தமிழர்களுக்கு தீராத வலிகளைக் கொடுத்து வந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று தனது மகனை சிறை வைத்ததை எண்ணி கண் கலங்கினார். இது சாதாரண தந்தையின் நிலை. இப்படிப்பட்ட பல தந்தையர்கள் தாய்மாரின் வலிகளை கடந்த சனிக்கிழமை முன்னாள் ஜனாதிபதி மகிந்தவினால் உணர்ந்திருக்க முடியும் என கூறும் ஆதங்க வரிகள்.

எனது மன ஆதங்கத்தை இதில் குறிப்பிடுகிறேன். இன்று உங்கள் செய்திப் பக்கத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் மகன் யோசித ராஜபக்ச கைது பற்றிய செய்தியினை படித்தேன்.

அதில் யோசிதவின் தாயார் கடுவெல நீதிமன்றம் முன்பாக காத்திருந்தது பற்றிய செய்தியை படித்த போது, என் தாய், என் உறவுகளின் தாய்மார் எத்தனை நாட்கள் இப்பேர்ப்பட்ட துன்னபங்களை அனுபவித்திருப்பார்கள் என்று சிந்தியுங்கள்.

இன்று மகிந்த குடும்பம் படும் துன்பம் என் தாய் உறவுகள் பட்ட அவலங்களுக்கு ஈடாகாது. ஆயினும் இதை ஒரு நாளும் மகிந்தவோ மகிந்தவின் குடும்பமோ என்றும் உணரமாட்டாது.

எம் உறவுகள் எத்தனை பேர் கைதாகி காணாமலாக்கப்பட்டார்கள். அப்படி ஒரு சம்பவம் இதில் இடம் பெறாது. எம் சகோதர சகோதரிகள் அத்தனை பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவேண்டிய நிலையிலே தான் கைதாகி பலர் தடுப்புக்காவலில் மரணமடைந்தார்கள்.

என்னையும் கைது செய்தார்கள். இந்த கொடுமையான சம்பவங்களை நானிருந்த முகாமிலேயே நடந்தது. மகிந்த பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளார். அவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கவில்லை என்று.

ஆனால் கைதான உங்கள் சகாக்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படாவிட்டால் ஒன்றும் மரணமடைய மாட்டார்கள். மற்றும் உமது மகனின் கைதானது என்னையோ எமது உறவுகளையோ மகிழ்ச்சிப்படுத்தாது. ஏனெனில் எம்மால் உணரமுடியும் ஒரு தாயின் வலி. தந்தையின் வலிகளை.

எம் இனத்திற்கு இழைத்த துரோகத்தை என்றும் எம்மால் மன்னித்துவிட முடியாது. எத்தனையோ வருடங்களாக காரணமின்றி இன்றும் சிறையில் வாடும் எம் சொந்தங்களின் தாய்மார் மனைவிமார் பிள்ளைகள்படும் அவலவலி வேதனை இன்றாவது, உணர்ந்து கொள்ள முயற்சி செய்வது நல்லது.

நானும் யுத்தத்தில் பாதிக்கப்பட்டு சிறையில் வாடியவன் தான். பின்னர் விடுதலையானேன். ஆனால் என்னை ஒரு தடவை கூட வைத்தியசாலைக்கு அனுமதிக்கவில்லை.

யுத்தப் பிரதேசத்தில் ஏற்பட்ட காயங்கள், சிறையில் வாடியதால் சரியான சிகிச்சை இல்லாமல் எனது கையின் செயற்பாடு செயலிழந்து விட்டது.

இன்று மிகவும் கடினமுயற்சியால் வெளிநாடு வந்துள்ளேன். அதைவிட இதை எழுத தைரியம் வந்ததும் எனக்காக பாதுகாப்பை உறுதிப்படுத்தியதன் பின்பு தான்.

எனது கை செயலிழந்ததால் இடது கையினால் எழுதப்பழகினேன். ஆகையால் தான் என் எழுத்து புரியுமளவுக்கு இல்லை. எனினும் நிச்சயம்  இதனை பிரசுரிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

இவ்வண்ணம் முன்னாள் பிறையாளன்..

-http://www.tamilwin.com

TAGS: