பாதிக்கப்பட்ட மக்களை மைத்திரி அரசாங்கம் ஏமாற்றுகின்றது: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

tamil-thesiya-makkal-munnaniஇறுதி மோதல்களின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குவதிலிருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கம் தவறுகின்றது.

அது, ஏமாற்றும் நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபடுகின்றது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

போர்க்குற்ற விசாரணையில் சர்வதேசத்தின் பங்களிப்போ, ஒத்துழைப்போ, தலையீடோ இருக்காதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், அரசாங்க அமைச்சர்களும் தொடர்ந்தும் கூறி வருகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனைக் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் அனைத்தும், அமெரிக்க, இந்தியா மற்றும் மேற்குலக நாடுகள் தங்களின் பூகோள அரசியல் நிலைமையை பாதுகாத்துக்கொள்வதற்காகவே அன்றி, தமிழ் மக்களின் அடிப்படை நலன்களுக்காகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயங்களை பெற்றுக்கொடுப்பதற்காவும் அல்ல.

அத்தோடு, பாதிக்கப்பட்ட மக்களே தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நடக்கும் எல்லா விடயங்களையும் மக்கள் விமர்சன கண்ணோட்டத்தில் பார்க்கவேண்டியது அவசியம்.” என்றுள்ளார். -BBC

TAGS: