ஜெனீவா யோசனைக்கும் ஹூசைனின் விஜயத்துக்கும் தொடர்பு இல்லை! அரசாங்கம் மறுப்பு

husain_ina_01இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட  யோசனைகளுக்கும் ஐ.நா ஆணையாளர் செய்ட் அல் ஹூசைனின் வருகைக்கும் எந்தவித தொடர்புகள் இல்லை என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்தத் தகவலை த ஹிந்து செய்தித்தாள் வெளியிட்டுள்ளது.

செய்ட் அல் ஹூசைன் எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார்.

இந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் விடுத்த அழைப்புக்கு இணங்கவே அவர் இலங்கைக்கு வருவதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் மஹிசினி கொலன்னே தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஓய்வுப்பெற்ற நிலையில், பதவியேற்ற ஹூசைன் இலங்கைக்கு வரவேண்டும் என்று மஹிந்த ராஜபக்ஸ அழைப்பு விடுத்திருந்தார்.

இதன் அடிப்படையிலேயே அவர் இலங்கை வருகிறார். எனவே அவரின் விஜயத்துக்கும் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட யோசனைக்கு தொடர்பு இல்லை என்று மஹிசினி குறிப்பிட்டுள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: