மைத்திரியின் செயற்பாடுகளுக்கு இந்தியா ஆதரவளிக்கும்! பிரணாப் முகர்ஜி

pranap_maithiri_001ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நோக்கத்துக்காக இந்தியா தொடர்ந்தும் ஆதரவு அளிக்கும் என இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 68வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு அனுப்பியுள்ள செய்தியிலேயே அவர்  இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா இலங்கையின் நெருங்கிய அயல்நாடு என்றும் அவர் தமது செய்தியில் தெரிவித்துள்ளார்.

68 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இலங்கை மக்களுக்கு தமது வாழ்த்துக்களை முகர்ஜி வெளியிட்டுள்ளார்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பல நூற்றாண்டு உறவு உள்ளது.

இந்தநிலையில் சிறிசேனவின் தலைமையின் கீழ் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு இந்தியா ஆதரவளிக்கும் என்றும் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: