அரசியல் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் வரையில் சுதந்திர தினம் என்ற ஒன்று தமிழ் மக்களுக்கு கிடையாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
யாழ்பாணத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
சிவஞானம் சிறீதரன் குறிப்பிட்டுள்ளதாவது, “தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படாமல், மக்கள் இன்னும் தமது சொந்த இடங்களுக்குச் செல்ல முடியாமல், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வினையோ நல்லெண்ண நிலைப்பாடுகளையோ கொண்டுவர முடியாமல் இருக்கின்ற சூழலில், தமிழர்கள் தாம் இன்னும் ஒரு கௌரவமான நிலையை எட்டாமல் இருக்கும் நிலையில், இலங்கையில் சுதந்திர தின நிகழ்வை தங்களுடைய சுதந்திர தினமாக தமிழ் மக்கள் பார்க்கவில்லை.
அத்தோடு, நாளைய சுதந்திர தின கொண்டாட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்குபற்றுவது குறித்து இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை.” என்றுள்ளார்.
-http://www.puthinamnews.com