ஐ.எஸ். அமைப்பை சேர்ந்த சிறுவன் ஒருவன் கொலை செய்வதற்கு முன்பு ஆங்கிலத்தில் எச்சரிக்கை விடுக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
ஐ.எஸ். தீவிரவாதிகள் அவ்வப்போது குழந்தைகள் மூலம் கொலைகளை அரங்கேற்றி வருகின்றனர்.
அவர்களின் இச்செயலுக்கு உலகம் முழுவதிலுமிருந்து கண்டனங்கள் குவிந்தாலும் தொடர்ந்து இத்தகைய செயல்களில் அவர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் சிறுவன் ஒருவன் கொலை செய்வதற்கு ஆங்கிலத்தில் எச்சரிக்கும் வீடியோவை ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர்.
அந்த வீடியோவில் தோன்றும் சிறுவன் கமெராவை நோக்கி, அமெரிக்காவே, எங்களுக்கு எதிராக போராடுவதற்காக நீங்கள் பணத்தையும் ஆயுதங்களை செலவு செய்து தயார் படுத்திய வீரர்கள் இவர்கள், இராக்கில் கொலை செய்தது போன்று இவர்களையும் கொலை செய்வோம்.
நீங்கள் எங்களிடமிருந்து தப்ப முடியாது என்று ஆங்கிலத்தில் எச்சரிக்கிறான்.
மேலும் தாபிக் (உலகின் கடைசி யுத்தம் நடைபெறும் என்று நம்பப்படும்) மலையில் உங்களை சந்திப்போம் என்றும் தெரிவித்துள்ளான்.
பின்னர் தன் முன்னால் இருக்கும் கைதியை கத்தியால் கொடூரமாக கொல்ல தொடங்குகிறான்.
சிறுவனால் கொல்லப்பட்டவர் லெவண்ட் முன்னணி எதிர்க்குழுவை சேர்ந்தவராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் தொடர்பான காட்சிகளும் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளன.
தற்போது வெளியாகியுள்ள இந்த வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உளவாளியை சிலுவையில் அறைந்து கொலை செய்த ஐ.எஸ். தீவிரவாதிகள்
தங்களுக்கு எதிராக உளவு வேலை பார்த்த உளவாளிகளை சிலுவையில் அறைந்து கொலை செய்யும் புகைப்படங்களை ஐ.எஸ்.தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர்.
உலகம் முழுவதுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருந்துவரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்களுக்கு எதிராக போராடுபவர்களை கொடூரமான முறையில் கொலை செய்துவருகின்றனர்.
இந்நிலையில் தங்களுக்கு எதிரான உளவு வேலை பார்த்த உளவாளிகள் இருவரை ஐ.எஸ். தீவிரவாதிகள் கொலை செய்யும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
இந்த படுகொலைகள் லிபியா நாட்டில் நடந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த புகைப்படங்களில், முழங்காலிட்டபடி உள்ள உளவாளி அருகில் , மூன்றுசக்கர நாற்காலியில் ஐ.எஸ். தீவிரவாதி ஒருவன் அமர்ந்திருக்கிறான்.
மேலும் அந்த புகைப்படத்தில் சிர்ட்டே நகரில் உளவாளிகளுக்கு மரணதண்டனை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் சில புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. ஐ.எஸ். அமைப்பின் பிரச்சார ஆயுதம் மூலம் இப்புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
முன்னாள் சர்வாதிகாரி முகமது கடாஃப்பியின் சொந்த நகரமான சிர்ட்டே தற்போது ஐ.எஸ். பிடியில் உள்ளது.
ஒரு வேளை சிரியாவின் ரக்காவை இழந்தாலும் மாற்று தலைநகராக சிர்ட்டேவை மாற்றும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-http://world.lankasri.com






























