உள்நாட்டு யுத்தத்தால் சீர்குழைந்துள்ள சிரியாவில் இயல்பு நிலை திரும்புவதற்காக உலக நாடுகள் சுமார் 10 பில்லியன் டொலர் நன்கொடை வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிரித்தானிய தலைநகரமான லண்டனில் நேற்று நடைபெற்ற முக்கிய கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் பங்கேற்ற பிரித்தானிய பிரதமரான கமெரூன் பேசியபோது, ‘ஒரு நாளில் இவ்வளவு பெரிய தொகை திரட்டப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.
சிரியா மக்களின் சீரமைப்பிற்காக இந்த நன்கொடையில் இருந்து சுமார் 6 பில்லியன் டொலர் நடப்பாண்டிலேயே செலவிடப்படும். எஞ்சிய 5 பில்லியன் டொலர் தொகையை எதிர்வரும் 2020ம் ஆண்டு வரை செலவிடப்படும்’ என தெரிவித்துள்ளார்.
சிரியாவில் தற்போது சுமார் ஒரு மில்லியன் பிள்ளைகள் பள்ளிகளுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இதற்கு ஒரு தீர்வு ஏற்படுத்தி அடுத்த கல்வி ஆண்டிற்கு அவர்கள் அனைவரும் பள்ளிகளுக்கு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.
அதே சமயம், சிரியாவிற்கு அருகே உள்ள சில நாடுகளும் சிரியா மக்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுக்க சம்மதம் தெரிவித்துள்ளனர்.
சிரியாவிற்காக செலவிடப்பட உள்ள இந்த 10 பில்லியன் டொலர் தொகையில், பிரித்தானியா 1.75 பில்லியன் டொலரும், ஏற்கனவே செலவிட்டு வரும் தொகையுடன் கூடுதலாக 900 மில்லியன் டொலர் சேர்த்து மொத்தமாக 5 பில்லியன் டொலர் செலவிட அமெரிக்க ஒப்புதல் வழங்கியுள்ளது.
கடந்தாண்டு சுமார் 10 லட்சம் அகதிகளை ஏற்றுக்கொண்டு ஜேர்மனி தனது பங்கீடாக 2.5 பில்லியன் டொலர்களை சிரியாவிற்காக வழங்க முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-http://world.lankasri.com


























