வெளிஉலக தொடர்பு இல்லாமல் வாழ்ந்துவரும் பூர்வக்குடி மக்கள்

mentai_people_001இந்தோனேசிய தீவுகளில் வெளி உலக தொடர்பு இல்லாமல் வாழ்ந்துவரும் ஆதிவாசிகள் பற்றிய புகைப்படங்கள் மற்றும் வீடியோ வெளியாகியுள்ளன.

மலேசியாவின் கெலண்டன் பகுதியை சேர்ந்தவர் முகமது சாலே பின் டோலாஹ். புகைப்படத்துறை ஆர்வமுடைய இவர்.

பல்வேறு பகுதிகளுக்கு சென்று அங்குள்ள மக்கள், சூழல் ஆகியவற்றை புகைப்படம் எடுத்துள்ளார்.

இந்நிலையில் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் வசிக்கும் மென்டாவை ( Mentawai) ஆதிவாசிகள் தொடர்பான புகைப்படத் தொகுப்பை வெளியிட்டுள்ளார்.

இந்தோனேசியாவின் பூர்வக்குடிகளான மென்டாவை மக்கள் அவர்களின் பச்சைகளுக்காகவும்(Tattoos) மற்றும் மென்டாவை தீவுகளில் வாழ்ந்துவரும் அரை நாடோடி வாழ்க்கைக்காகவும் புகழ் பெற்றவர்கள்.

மேலும் தாங்கள் வசிக்கும் இடங்களை வேட்டையாடும் விலங்குகளின் மண்டையோடு மூலம் அமைத்து வாழ்பவர்கள் அவர்கள்.

அந்த இனத்தை சேர்ந்த மருத்துவரே உயர்ந்தவராக மதிக்கப்படுகிறார். மேலும் ஆவிகளுடன் பேசும் வல்லமை மருத்துவருக்கு உள்ளதாக அம்மக்கள் நம்புகின்றனர்.

மென்டாவை மக்கள் குறித்து முகமது கூறியதாவது, அவர்கள் நவின உலகத்தில் இருந்து ஒதுங்கியபடி முழுமையான வாழ்க்கையை வசிக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

மென்டாவை இனமக்கள் சுமார் 64 ஆயிரம் பேர் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. செடி, கொடி உள்ளிட்ட அனைத்துக்கும் ஆத்மா உள்ளது என்று அவர்கள் நம்புகின்றனர்.

அதற்கு காரணம் தங்களின் வாழ்க்கை முறையையும் தங்களின் தீவையும் வெளியாட்களுக்கு காட்ட அவர்கள் விரும்புகின்றனர்.

இதனால் அவர்கள் யாருக்கும் தொந்தரவு அளிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-http://world.lankasri.com