நீண்டதூரம் இலக்கை கொண்ட ராக்கெட்டை வடகொரியா ஏவி உள்ளது உலகநாடுகள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஐ.நா.வின் தடையையும் மீறி வடகொரியாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.
வடகொரியாவின் இச்செயல் ஆத்திரமூட்டும் செயலாகும் என்று அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மந்திரி ஜான் கெர்ரி, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தொழில்நுட்ப பயன்பாட்டில் ஐ.நா.வின் தீர்மானத்தை வெளிப்படையாக மீறுவதாகும்.
இது கொரிய தீபகற்பகத்திற்கு மட்டும் பாதுகாப்பு எச்சரிக்கை கிடையாது, இப்பிராந்தியத்திற்கும் அமெரிக்காவிற்கும் எச்சரிக்கையாகும் என்று கூறியுள்ளார்.
கடந்த மாதம் 6-ம் திகதி ஹைட்ரஜன் குண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளதாக வடகொரியா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனையடுத்து தென் கொகொரியா மற்றும் ஜப்பான், வடகொரியாவை தண்டிக்கும் விதமாக கடுமையான தடைகளை விதிக்கவேண்டும் என்று வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
-http://world.lankasri.com