ஐ.எஸ்.அமைப்பில் தொடர்புடைய 7 நபர்கள்: அதிரடி நடவடிக்கை எடுத்த ஸ்பெயின் பொலிசார்

spanish_arrest_001ஸ்பெயின் நாட்டில் ஐ.எஸ்.அமைப்பில் தொடர்புடைய 7 நபர்கள் மீது அந்த நாட்டு பொலிசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஸ்பெயின் நாட்டில் ஐ.எஸ்.அமைப்பு மற்றும் ஜபத் அல் நுஸ்ரா அமைப்புகளில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 7 நபர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.

Valencia and Alicante மாகாணத்தில் இருந்து செயல்பட்டு வந்த 6 நபர்களை அப்பகுதியில் சோதனை மேற்கொண்ட பொலிசார் கைது செய்துள்ளனர்.

தீவிரவாத தொடர்புடைய நபர்களை கைது செய்துள்ளதாக உள்விவகாரத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது ஆனால் போதிய விளக்கங்களை தர அமைச்சகம் மறுத்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபர்கள் ஈராக் மற்றும் சிரியா நாடுகளில் செயல்பட்டுவரும் தீவிரவாத அமைப்புகளுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டு உருவாக்கும் பொருட்களை அனுப்பி வந்ததாக உள்விவகாரத்துறை அமைச்சர் Jorge Fernandez Diaz தெரிவித்துள்ளார்.

குழுவின் தலைவனாக கருதப்படும் நபர் கப்பல்களில் பொருட்களை அனுப்பும் தொழிலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த 2014 ஆம் ஆண்டில் இருந்தே இந்த நபர்கள் குறித்து பொலிசார் விசாரிக்கவும் தொடர்ந்து கண்காணித்தும் வந்துள்ளனர்.

போதிய ஆதாரங்கள் சிக்கியதும் அவர்களை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ள ஸ்பெயின் பொலிசார், அவர்களில் 4 பேர் ஸ்பானிய குடிமக்கள் என்றனர்.

தீவிரவாத அச்சுறுத்தலை முறியடுக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

-http://world.lankasri.com