சீர் கொடுப்பது கசக்ஸ்தான் மரபு- நஜிப்பின் மருமகன் விளக்கம்

kazakபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  மருமகன்  டனியார்  கெஸ்ஸிக்பயேவ்  2011-இல், தம்முடைய  நிச்சயதார்த்த  சடங்கின்போது  மணமகளுக்கு  “ஆடம்பரமான”  பொருள்கள்  சீராகக்  கொடுக்கப்பட்டது  கடுமையாகக்  குறைகூறப்பட்டாலும்  அப்படிச்  சீர்  கொடுப்பது  கசாக்ஸ்தான்  மரபு  என்று  விளக்கமளித்துள்ளார்.

அந்த  நிச்சயதார்த்த  சடங்கின்போது  “16 பீப்பாய்களில்”  அன்பளிப்புகள்  வழங்கப்பட்டதாக  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்  கூறியிருப்பதற்கு  அவர்  விளக்கம்  அளித்தார்.

“அவை  நூர்யனாவுக்கான  வரதட்சிணையாகும். 16  பீப்பாய்கள்  அன்று 16 பெட்டிகள்தான்  கொடுக்கப்பட்டன.

“கசாஸ்தானில்  மணமகன்  மணமகளுக்கு  நகைகள், நறுமணப் பொருள்கள்,  பட்டு   போன்றவற்றைக்  கொடுப்பது  வழக்கமாகும்”, என்றார்.

கசாக்ஸ்தான்  நாட்டவரான  கெஸ்ஸிக்பயேவ், 2015  மார்சில்  நூர்யானா  நஜ்வா  நஜிப்பை   மணம்  செய்து  கொண்டார்.