முகாம்களில் இருந்து அகதிகளை வெளியேற்ற உத்தரவு: அச்சத்தில் தவிக்கும் 4,000 அகதிகள்

refugee_out_001பிரான்ஸ் நாட்டில் உள்ள முகாமில் தற்காலிகமாக தங்கியுள்ள அகதிகள் 3 நாட்களுக்குள் வெளியேற வேண்டும் என்றும், மீறினால் பொலிசார் மூலம் பலவந்தமாக வெளியேற்றப்படுவார்கள் என அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாரீஸ் நகருக்கு அருகே உள்ள ‘ஜங்கில்’ எனப்படும் கெலைஸ் பகுதியில் அமைந்துள்ள முகாம்களில் சுமார் 4,000 அகதிகள் தங்கி வருகின்றனர்.

இவர்களில் பெரும்பாலும் சிரியா மற்றும் ஈராக் நாடுகளை சேர்ந்த சுமார் 1,000 அகதிகள் அவர்களது உடமைகளுடன் எதிர்வரும் செவ்வாய்கிழமை மாலை 8 மணிக்குள் அப்பகுதியை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு மூலம், அகதிகள் முகாமில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட கடைகள், தேவாலயங்கள், மசூதிகள் உள்ளிட்டவைகளையும் நீக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும், நீக்கப்படும் இந்த 1,000 அகதிகளை கப்பல் வழியாக சரக்குகளை ஏற்றிச் செல்லப்படும் இரும்பு கொள்கலன் பெட்டிகளில் தங்க வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனினும், இந்த கெலைஸ் பகுதியில் சுகாதார குறைபாடுகள் அதிகளவில் இருந்தாலும், பெரும்பாலான அகதிகள் இங்கேயே தங்குவதையே விரும்புகின்றனர்.

தற்போது அரசின் உத்தரவு அகதிகளை நிலையகுலைய வைத்திருப்பதுடன், இப்பகுதியில் இருந்து வெளியேற முடியாது என அகதிகள் ஏற்கனவே கூறியுள்ளனர்.

இந்த நிலையில், பொலிசாரை கொண்டு அகதிகளை வெளியேற்ற முயற்சி நடக்கும் என்ற சூழல் உருவாகியிருப்பதால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளும்போது பொலிசாருக்கும் அகதிகளுக்கும் இடையே தகராறு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

-http://world.lankasri.com