இலங்கை மனித உரிமைகள் மாநாட்டில் மலேசிய எம்.பி! அரச சார்பற்ற அமைப்புக்கள் கண்டனம்

kasthuri--100x80கொழும்பில் இடம்பெற்ற மனித உரிமைகள் தொடர்பான மாநாட்டில் மலேசியா பட்டு கவான் பிராந்திய நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டு பங்கேற்றமை குறித்து மலேசியாவில் உள்ள இந்தியர்களின் அரச சார்பற்ற நிறுவனங்கள் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளன.

கடந்த பெப்ரவரி முதலாம் திகதி முதல் மூன்றாம் திகதி கொழும்பில் இடம்பெற்ற இந்த மாநாட்டை, ஆசியன் பொதுநலவாய சம்மேளனம், பொதுநலவாய செயலகம் மற்றும் இலங்கை நாடாளுமன்றம் என்பன ஏற்பாடு செய்திருந்தன.

இதன் போது, மனித உரிமைகள் தொடர்பான ஒத்துழைப்புகளை அதிகரிக்க பொதுநலவாய ஆசிய நாடாளுமன்ற மனித உரிமை குழுவும் ஏற்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், மலேசியாவின் செப்பிரங்பிறையில் கடந்த வியாழக்கிழமை கூடிய இந்திய அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதி, இலங்கையில் சிவில் போரில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை இலங்கை அரசாங்கம் கொலை செய்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி அந்நாட்டுக்கு விஜயம் செய்தமை குறித்து தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

இதனிடையே இலங்கையில் இடம்பெயர்ந்துள்ள மக்களின் முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து மதிப்பீட்டை மேற்கொள்ளவே தான் இலங்கைக்கு சென்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டு விளக்கமளித்துள்ளார்.

-http://www.puthinamnews.com

TAGS: