’ஜேர்மனியில் குடியேற வந்த 1,30,000 அகதிகளை காணவில்லை’: உள்துறை அமைச்சகம் பரபரப்பு தகவல்

asylum_seekermissing_001ஜேர்மனி நாட்டில் கடந்தாண்டு குடியேற வந்த சுமார் 1,30,000 அகதிகளை காணவில்லை என உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனியின் உள்துறை அமைச்சகத்தை சேர்ந்த செய்தி தொடர்பாளர் ஒருவர் நேற்று முன் தினம் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அப்போது, ‘ஜேர்மனிக்கு குடியேற வந்த புலம்பெயர்ந்தவர்களை ஒரு குறிப்பிட்ட அரசு மையத்திற்கு அதிகாரிகள் அனுப்பி வைப்பார்கள்.

ஆனால், இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட சுமார் 1,30,000 பேர் அரசுக்கு தெரியாமல் எங்கு இருக்கிறார்கள் என்ற தகவல் இதுவரை பெறப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

ஒருவேளை, காணாமல் போனவர்கள் அருகில் உள்ள நாடுகளுக்கு அல்லது ஜேர்மனி நாட்டிலேயே அரசுக்கு தெரியாமல் மறைந்து வசித்து வரலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

ஜேர்மனியில் 2015ம் ஆண்டில் மட்டும் சுமார் 11 லட்சம் பேர் புகலிடம் கோரி வந்துள்ளனர். ஆனால், தற்போது காணாமல் போனவர்களை ஒப்பிடுகளை இந்த எண்ணிக்கையில் 13 சதவிகிதமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், புலம்பெயர்ந்தவர்கள் காணாமல் போவதை தடுக்கும் விதத்தில் சில புதிய திட்டங்களுக்கு பாராளுமன்றம் கடந்த வியாழக்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த புதிய திட்டங்கள் மூலம், ஜேர்மனியில் தற்போது உள்ள புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் எதிர்காலத்தில் வரும் நபர்களுக்கு புதுவிதமான அடையாள அட்டைகள் கொடுக்கப்பட்டு அதனை அரசாங்கத்தின் குறிப்பில் பதியப்படும்.

அதே சமயம், ஜேர்மனியில் ஏற்கனவே உள்ள உறவினர்களை புலம்பெயர்ந்தவர்கள் சந்திக்கவும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பதன் மூலம் புலம்பெயர்ந்தவர்கள் காணாமல் போவதை தடுக்க முடியும் என உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

-http://world.lankasri.com