பாக்தாத்தில் தீவிரவாதிகள் நடத்திய இரட்டை வெடிகுண்டு தாக்குதல்: 70 பேர் பலி

bgdad_attack_001ஈராக் தலைநகர் பாக்தாத்தில் தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் 70 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈராக் தலைநகர் பாக்தாக் அருகே உள்ள ஷிட்டி(Shiite) நகரத்தில் உள்ள மார்க்கெட் பகுதியில் இந்த தாக்குதலை தீவிரவாதிகள் அரங்கேற்றியுள்ளனர்

 மோட்டார் சைக்கிள் வந்த தற்கொலைப்படை தீவிரவாதி  ஒருவன் வெடிகுண்டை வெடிக்க செய்து முதல் தாக்குதலை நடத்தியுள்ளான்.

இதேபோல் அன்பர் மாகாணத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 பொலிஸ் அதிகாரிகள் மரணமடைந்தனர்.

இந்த இரு தாக்குதல்களிலும் சேர்த்து 70 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு தாக்குதல்களுக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பெற்றுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த தாக்குதல் குறித்து அந்நாட்டு பிரதமர் ஹைதர் அல் அபாதி கூறியதாவது, இந்த தாக்குதல்கள் ஐ.எஸ். தீவிரவாதிகளின் தோல்வியை காட்டுகிறது.

ராணுவ வீர்ர்களிடம் தங்களின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை இழந்ததையடுத்து அப்பாவி பொது மக்களை அவர்கள் குறி வைத்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

-http://world.lankasri.com