கை-பையில் ரத்தம் சொட்ட குழந்தையின் தலை: நான் தீவிரவாதி – நான் தீவிரவாதி என்று கத்திய பெண் !

ரஷ்யாவின் தலை நகர் மாஸ்கோவில் , ரயில் நிலையம் முன்பாக “நான் தீவிரவாதி – நான் தீவிரவாதி” என்று கத்தியவாறு வந்த பெண்ணின் கைகளில் ஒரு குழந்தையின் தலை ரத்தம் சொட்டச் சொட்ட இருந்துள்ளது. அவர் பொலிசாரைக் கண்டவுடன் அல்லாகு அக்பர் என்றும் கத்தியுள்ளார். இதனால் அருகில் இருந்த மக்கள் அதிர்ந்து போனார்கள். குறித்த பெண் மொஸ்கோ நகரில் , சிறுவர்களை பராமரிக்கும் பணி புரிந்து வந்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

பரிதா அணிந்து வந்த குறித்த பெண், திடீரென தனது கைப் பையில் இருந்து குழந்தையின் தலையை வெளியே எடுத்து கூச்சலிட்ட விடையம் அனைத்து ஆங்கில ஊடகங்களிலும் பெரும் பரபரப்பான செய்தியாக வெளியாகியுள்ளது. இவர் உஸ்பெக்கிஸ்தானைச் சேர்ந்தவர் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இவர் கொண்டுவந்த தலை நான்கு வயதுப் பெண் குழந்தை ஒன்றினுடையது என ரஷ்ய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. குழந்தைப் பராமரிப்புப் பணியில் இருந்த இவரின் கண்காணிப்பில் இருந்த குழந்தையின் தலை இது என்றும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இன்று காலை தீவிபத்துக்குள்ளான தொடர் மாடியில் தலையற்ற முண்டம் ஒன்றை பொலிசார் கண்டெடுத்திருந்தார்கள். குறித்த சந்தேக நபர் காலையில் குழந்தையைக் கொலை செய்து தலையை வெட்டி எடுத்த பின்னர் இம்மாடி வீட்டுக்கு தீ மூட்டியிருக்கலாம் என நம்பப் படுகிறது.

-http://www.athirvu.com