அணு ஆயுத சோதனை விடயத்தில் உலக நாடுகளுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ள வடகொரியா, அந்த ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு எந்தே நேரத்திலும் தயாரா இருக்குமாறு தனது இராணுவத்தினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் ஒப்பந்தத்தை மீறிய வகையில் ஹைட்ரஜன் குண்டுகளை வெடித்து பரிசோதித்தது, விண்வெளி ஆய்வு என்ற பெயரில் அதிநவீன ஏவுகணையை செலுத்தியது போன்ற அத்துமீறல்களுக்காக வடகொரியா மீது ஐ.நா. பாதுகாப்பு சபை பொருளாதார தடை விதித்துள்ளது.
இதற்கிடையில், வடகொரியாவின் அதிநவீன ராக்கெட்கள், ஏவுகணைகளை பார்வையிட்ட அதிபர் கிம் ஜாங், நமது எதிரிநாடுகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் நம்மிடம் இருக்கும் அணு ஆயுதங்களை எந்த நேரத்திலும் பயன்படுத்த தயார் நிலையில் இருக்குமாறு ராணுவத்தினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அணு ஆயுதங்களின் தரத்தையும் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்திய அதிபர், நாட்டை பாதுகாப்பதற்காக நம்மிடம் உள்ள அணு ஆயுதங்கள் எந்த நிமிடத்திலும் சீறிப்பாயும் வகையில் தயாராக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
-http://world.lankasri.com
சொந்த காசில் சூனியம் வச்சஈக்கிரன் மடையன்