130,000 பவுண்டு மதிப்பிலான தங்க நாணயங்களை கடலில் வீசிய பெரும் வணிகர்: காரணம் என்ன?

throws_gold_001பிரேசில் நாட்டின் பெரும் வணிகர் ஒருவர் 130,000 பவுண்டு மதிப்பிலான தங்க நாணயங்களை கடலில் வீசி எறிந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசில் நாட்டின் பெரும் வணிகர்களில் முக்கியமானவர் Eike Batista, இவரது நிறுவங்கள் பல ஆண்டுக்கு பல பில்லியன்கள் வருவாயாக ஈட்டி வருகின்றது.

இந்நிலையில் இவரது வணிகத்தில் திடீரென ஏற்பட்ட முடக்கம் காரணமாக இவருக்கு பெருந்தொகை இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் பெரும் வணிகர்களுக்கான தர வரிசையில் இருந்தும் அவர் பெரும் சரிவை சந்திக்க நேர்ந்தது.

இதனிடையே மதகுரு ஒருவரை சந்தித்த படிஸ்டா, தமது வணிகத்தில் ஏற்பட்டுள்ள சுணக்கம் நீங்க வழிவகை செய்யுமாறு கோரியுள்ளார்.

பாடிஸ்டா நடத்திவரும் பெரும்பாலானா வணிகங்கள் கடல் சார்ந்து இருப்பதால் கடல் தாயின் கோபம் ஏற்பட்டுள்ளதாக அந்த மதகுரு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

கடல் தாயின் கோபத்தை போக்கும் வகையில் தங்க நாணயங்களை கடலில் வீச வேண்டும் என பாடிஸ்டாவுக்கு தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து ரியோ டி ஜெனிரோ கடற்கரையில் 130,000 பவுண்டு மதிப்பிலான தங்க நாணயங்களை வீசி எறிந்துள்ளார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு பாடிஸ்டாவின் 6 நிறுவனங்களில் 25 பில்லியன் பவுண்டு அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

-http://world.lankasri.com