ஐரோப்பிய கவுன்சில் தலைவருடன் துருக்கி சந்திப்பு : குடியேறிகள் நெருக்கடி

migrantsஐரோப்பாவின் குடியேறிகள் நெருக்கடியை சமாளிக்கும் விவகாரத்தில் துருக்கி மற்றும் ஐரோப்பாவின் கூட்டு அணுகுமுறையை வலுப்படுத்தும் முயற்சியாக, ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் டொனால்ட் டஸ்கும் துருக்கிய அதிபர் ரஜப் தயிப் எர்துவானும் இன்று பேச்சு நடத்தவுள்ளனர்.

அவர்கள் இஸ்தான்புலில் சந்திக்கின்றனர். கிரேக்கத்துக்கு ஆயிரக்கணக்கான குடியேறிகள் வந்துகுவிவதைத் தடுக்கும் முகமாக டொனால்ட் டஸ்க் விஜயம் செய்யும் ஆறு நாடுகளில் துருக்கியும் ஒன்றாகும்.

ஆட்கடத்தல்காரர்களின் வியாபாரத்தை ஒழிக்கும் விதமாக துருக்கிக்கே சில குடியேறிகளை கப்பலில் திருப்பி அனுப்பும் திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என்று டஸ்க் கூறிவருகிறார்.

-http://www.athirvu.com