கைதிகளின் தலைகளை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றும் சவுதி அரேபியா அரசுக்கு பிரான்ஸ் நாடு உயரிய விருது வழங்கி கெளரவித்துள்ளது அந்நாட்டு மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சவுதி அரேபியாவின் இளவரசரும் அந்நாட்டு உள்துறை அமைச்சருமான Mohammed bin Nayef கடந்த 4ம் திகதி அரசு முறை பயணமாக பிரான்ஸ் நாட்டிற்கு வந்துள்ளார்.
இந்த பயணத்தின் இறுதியில் பிரான்ஸ் நாட்டின் Legion d’Honneur என்ற உயரிய விருதினை இளவரசருக்கு ஜனாதிபதி பிராங்கோயிஸ் ஹாலேண்டே வழங்கி கெளரவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜனாதிபதி அலுவலக அதிகாரி வெளியிட்டுள்ள தகவலில், ‘தீவிரவாதத்திற்கு எதிராக சவுதி அரேபியா போரிட்டு வருவதை பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக’ தெரிவித்துள்ளார்.
சவுதிக்கும் பிரான்ஸிற்கு உள்ள உறவுமுறை வலுவாக உள்ள நிலையில், இருநாடுகளிலுக்கு இடையே ஆயுத ஒப்பந்தங்களும் போடப்பட்டுள்ளன.
மேலும், பாரீஸில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலுக்கு பின்னர் தீவிரவாதிகளை ஒடுக்க பிரான்ஸ் நாட்டுக்கு சவுதி ராணுவம் உதவி வருகிறது.
சவுதியின் இந்த நடவடிக்கைகளை பாராட்டி தற்போது விருது வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், சவுதி இளவரசருக்கு விருது வழங்கப்பட்டுள்ள பிரான்ஸ் நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
‘கைதிகளின் தலைகளை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றும் சவுதி அரசுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது கடுமையாக கண்டிக்கத்தக்கது’ என மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
சவுதி அரேபியாவில் இந்த ஆண்டு தொடக்கம் முதல் நேற்று நிறைவேற்றுப்பட்டுள்ள மரண தண்டனையை கணக்கிட்டால் இதுவரை 70 மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-http://world.lankasri.com