பென்குயின் பறவை ஒன்று தனது உயிரை காப்பாற்றிய முதியவரை பார்ப்பதற்காக ஆண்டுதோறும் 5 ஆயிரம் மைல் பயணம் செய்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசிலின் ரியொ டி ஜெனிரோவுக்கு அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் ஜூவா பெரேரா டி சவுசா (Joao Pereira de Souza).
முதியவரான இவர் அருகில் உள்ள கடலில் மீன் பிடிப்பதை தனது பொழுதுப்போக்காக கொண்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த 2011ஆம் ஆண்டு பாறையில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பென்குயின் ஒன்றை பார்த்துள்ளார்.
உடனடியாக அதனை மீட்டு சிகிச்சை அளித்த ஜூவா அதற்கு டிண்டிம் (Dindim) என பெயரும் இட்டுள்ளார்.
பின்னர் அந்த பென்குயின் குணமடைந்ததும் கடலில் சென்று விட்டுள்ளார். இந்நிலையில் சில மாதங்கள் கழித்து தான் மீட்ட இடத்தில் டிண்டினை பார்த்த ஜூவா இன்ப அதிர்ச்சியடைந்துள்ளார்.
தற்போது ஆண்டில் 8 மாதங்கள் வரை அந்த பென்குயின் ஜூவாவை பார்ப்பதற்காக பிரேசிலுக்கு வருகிறது.
மீதமுள்ள நாட்களில் அர்ஜெண்டினா மற்றும் சிலி கடற்கரைகளில் செலவிடுகிறது. ஜூவாவை பார்ப்பதற்காக டிண்டிம் ஆண்டுக்கு 5000 மைல்கள் பயணம் மெற்கொள்கிறது.
இது குறித்து ஜூவா கூறியதாவது, இந்த பென்குயினை எனது வாரிசு போல் கருதுகிறேன்.
அதுவும் என்னிடம் பாசமாகவே இருக்கிறது. என்னை தவிர வேறு யாரையும் தொடுவதற்கு அது அனுமதியளிப்பதில்லை.
கடந்த நான்கு ஆண்டுகளாக அது என்னை பார்ப்பதற்கு வந்துகொண்டிருக்கிறது என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
-http://world.lankasri.com





























