புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் உள்ளிட்ட சிலர் இறுதி யுத்தத்தின்போது நந்திக்கடல் தென் பகுதிக்கு தப்பிச் சென்றதாக கே.பி.கூறியிருக்கிறார். அத்துடன் பிரபாகரன் திரும்பி வந்த தாகவும் பொட்டு அம்மான் வரவில்லை என்றும் அவர் கூறியிருக்கின்றார்.
அந்த தகவல் மட்டுமே எங்களுக்கு தெரியும். பொட்டு அம்மான் அந்த இடத்தில் உயிரிழந்திருக்கலாம் என்று நான் நினைக்கின்றேன் என்று முன்னாள் இராணுவ தளபதியும் அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
பிரபாகரனை கொழும்புக்கு அழைத்து வந்திருந்தால் இப் போது கே.பி.யை அரச அரண்மனையில் வைத்திருந்ததைப் போன்று அவரையும் பாதுகாப்பாக வைத்திருந்திருப்பார்கள். அத்துடன் அவருக்கு வடகிழக்கு முதலமைச்சர் பதவியும் கொடுக்கப்பட்டிருக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமுமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை மன்றக் கல்லூரியல் இன்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் சரத் பொன்சேகா கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
யுத்தம் முடிந்த பின்னர் மஹிந்தவின் பிள்ளைகள் சுகபோகமாக காலத்தை கழித்தார்கள். காலைமுதல் மாலைவரை ரகர் விளையாடினர். போட்டியில் தோல்வியடையும்போது நடுவர்களை தாக்கினர். ரசிகர்களை தாக்கினர். இதுதானா அபிவிருத்தியின் பிரதிபலன்?
கடந்த அரசாங்கத்தில் ஊடகங்களுக்கு உண்மை தன்மையை வெளிப்படுத்த முடியவில்லை. வெளிப்படுத்தினால் தொழில் அற்றுப்போகும். அதிகமான ஊடகவியலாளர்களை பலாத்காரமாக தங்கள் பக்கம் இழுத்துக்கொண்டார்கள்.
ஊடக நிறுவனங்கள் அரசாங்கம் தொடர்பில் உண்மை தன்மையை வெ ளிப்படுத்தினால் அவர்களின் அனுமதிப்பத்திரத்தை செயலிழக்கச்செய்வதாக பகிரங்கமாக தெரிவித்தனர்.
நாட்டின் சட்டத்தை கையிலெடுத்துக்கொண்டிருந்தனர். நாட்டில் அவர்களுக்கு தேவையானவர்களுக்கு எதிராக வழக்கு தொடுத்தார்கள் விரும்பியவர்களை விடுவித்தார்கள்.
அதேபோன்று நீதிமன்றங்களுக்கு தனக்கு தேவையானவர்களை நியமித்தனர். அவர்களுக்கு எதிராக செற்பட்டவர்களை பதவி நீக்கினார்கள். முன்னாள் பிரதம நீதியரசருக்கு என்ன நடந்தது என்ற முழுநாட்டுக்கும் தெரியும் . இவ்வாறு தான் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தார்.
மக்கள் பீதியில் வாழ்ந்தனர். அன்றிருந்த பயம் இன்று இருக்கின்றதா ? இன்று அந்த நிலைமை யாருக்கும் இல்லை. அந்த வித்தியாசத்தை நாட்டுக்கு கொண்டுவந்தோம். நாங்கள் உயிரை பணயம் வைத்து பெற்ற சுதந்திரத்தை மீண்டும் இழக்க ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்.
-http://www.tamilwin.com