மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்தும் போது, சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பை பெற்றுக் கொள்வதில் தான் எந்த விதத்திலும் இணங்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இலங்கையின் நீதித்துறை மற்றும் நீதிபதிகளின் மீது நம்பிக்கை வைத்து செயற்பட முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற தேசிய சட்ட சம்மேளன கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அதேவேளை நாடாளுமன்றத்தை வலுப்படுத்தி, பொறுப்புக் கூற, செயற்பாடுகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பல்வேறு துறைகள் சம்பந்தமாக நாடாளுமன்ற குழுக்களை நியமித்து, நாட்டு பொறுப்புக் கூறும் அரச நிர்வாகத்தை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் பிரதமர் கூறியுள்ளார்.
வெளிப்படை தன்மையான நிதி முகாமைத்துவத்தை ஏற்படுத்தும் அரசாங்கத்தின் நோக்கம் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
-http://www.tamilwin.com