அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் வெள்ளியன்று சமூகவலைத்தளத்தில் பதிவேற்றப்பட்ட புகைப்படம் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சமூகவலைத்தளமான பேஸ்புக்கில் வெளியான கலக்கத்துக்குள்ளாக்கும் புகைப்படம் ஒன்று மெம்பிஸ் நகர பொலிசாரை தொடர் விசாரணைக்கு தூண்டியுள்ளது.
அந்த பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்டிருந்த புகைப்படத்தில் இரு சிறு குழந்தைகள் கைகள் இரண்டும் கட்டப்பட்ட நிலையில் இருந்தன.
குழந்தைகள் விற்பனைக்கு என தலைப்பிட்டுருந்த அந்த பதிவில், மிகவும் மோசமான குழந்தைகள் என்பதால் 45% விலை குறைத்து தரப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த புகைப்படத்தை பதிவேற்றியவர் அந்த குழந்தைகளின் தாயாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ள விசாரணை அதிகாரிகள், தற்போது அந்த பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது என்றனர்.
இந்நிலையில் டென்னிசி குழந்தைகள் சேவை மையம் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கினை டென்னிசி பொலிசார் மற்றும் வேறு பல அரசு துறைகளும் விசாரணைக்கு எடுத்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக ஆராய்ந்த பின்னரே வழக்கு பதிவு செய்வதாக முடிவெடுத்துள்ள விசாரணை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட குழந்தைகளை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
-http://world.lankasri.com