குற்றம் செய்ய தைரியம் இருந்தால் சவுதி அரேபியாவுக்கு செல்லுங்கள் என்று சொல்கிற அளவுக்கு கொடூர மரண தண்டணைகளை நிறைவேற்றும் நாடாக சவுதி அரேபியா மாறி வருகிறது.
ரத்தக்களறி சம்பவங்கள் மற்றும் முக்கிய ரகசியங்கள் நிறைந்த நாடு என்றால் அது சவுதி அரேபியாதான்.
சவுதியில் மக்களின் அன்றாட வாழ்க்கை நிலை மற்றும் அங்கு நிறைவேற்றப்படும் கொடூர தண்டனைகள் குறித்து ஆவணப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆவணப்படம் Chop Chop Square என்ற பெயரில் பார்வையாளர்களுக்கு திரையிடப்பட்டுள்ளது.
இந்த ஆவணப்படத்தின் மூலம் சவுதி அரேபியாவில் நடைபெறும் இருட்டிய சம்பவங்கள், வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
குற்றத்திற்கான மரண தண்டனைகள்
சவுதியின் நடுரோட்டில் வைத்து கருப்பு நிற ஆடை அணிந்த பெண் ஒருவர் தரையில் விழுந்து கிடக்கிறார், அவரைச்சுற்றி 5 பொலிசார் நிற்கின்றனர்.
இப்பெண்மணி தனது வளர்ப்புமகளை கொன்றுவிட்டார் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளார், ஆனால், இப்பெண்மணியோ நான் இதனை செய்யவில்லை என்று மறுத்தும், அவரது தலையை கொடூரமாக துண்டித்துவிடுகின்றனர்.
அடுத்த சம்பவமாக, குற்றம் புரிந்த 5 நபர்களின் உடல்களை, பொதுமக்கள் பார்வைக்காக கிரேன் வண்டியின் உதவியோடு மேலே கட்டி தொங்கவிட்டுள்ளனர்.
சவுதியில் பெண்களுக்கு வழங்கப்படும் தண்டனைகளில் கூட எவ்வித மாறுபாடும் காட்டப்படமாட்டது, சொல்லப்போனால் அவர்கள் சவுதியின் இரண்டாம் குடிமக்களாக பார்க்கப்படுவதால், அவர்கள் வேலை பார்க்கும் அங்காடிகளில் கூட ஆண் நுகர்வோர்கள், பெண் ஊழியர்களை எவ்வித காரணமும் இன்றி தரையில் தள்ளி விடுவார்கள்.
மேலும், சவுதியில் பெண்கள் வாகனங்கள் ஓட்ட தடைவிதிக்கப்பட்டிருக்கிறது, அவர்கள் அதனையும் மீறி வாகனம் ஓட்டினால், அவர்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டு சிறையில் தள்ளப்படுவார்கள்.
அதுமட்டுமின்றி அரசினை விமர்சிக்கும் நபர்களுக்கு, சவுக்கடி அல்லது நீண்டகாலம் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது, மேலும் தலைதுண்டித்துக்கொலை கல்லால் அடித்துக்கொலை செய்யப்படுவது போன்ற தண்டனைகள் நிறைவேற்றப்படுகின்றன.
யாரேனும் ஒருவர், இஸ்லாம் மதத்தை பற்றி இழிவாக பேசினால் அவர்களுக்கு 1,000 சவுக்கடி அல்லது 10 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது.
மேலும், சவுதிகளில் உள்ள பள்ளிகளில் மதங்கள் சார்ந்த பிரச்சனைகள் உள்ளதா என்று 14 வயது சிறுவன் ஒருவனிடம் கேள்வி எழுப்புகையில், இங்கு கிறிஸ்துவர்களை, ஷியா பிரிவிற்கு மதம் மாறுங்கள் அல்லது உங்களை கொலைசெய்துவிடுவோம் என மிரட்டல் விடுப்பார்கள்.
நாங்கள் இஸ்லாம் மதத்தோடு சண்டையிட்டுக்கொண்டிருக்கிறோம், ஆனால் பள்ளிமாணவர்கள் மதங்கள் மீது தங்கள் வெறுப்பை காட்டமாட்டார்கள் என்று கூறியுள்ளான்.
Promotion of Virtue and the Prevention of Vice (நல்லொழுக்கம் ஊக்குவிப்பு மற்றும் குற்றங்கள், தேவையற்ற நடத்தைகளை தடுத்தல்) ஆகிய இரண்டு கொள்கைளை கொண்டுள்ள சவுதி, பல்வேறு அத்துமீறல்களை புரிந்துவருகிறது.
தீவிரவாத இயங்கங்களான அல்கொய்தா மற்றும் ஐஎஸ் தீவிரவாதிகளின் கொள்கையும் இதுவே ஆகும், ஆனால் சவுதி அரசு இத்தீவிரவாதிகளுக்கும் தங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என எப்போது மறுத்து வருகிறது.
ஆனால், இவர்கள் அரங்கேற்றும் தண்டனைகள் மூலம், தீவிரவாதிகளுடன் இவர்களுக்கு தொடர்பு இருக்கிறது என்பது நிரூபணமாகின்றன.
இந்த இரண்டு இயக்கங்களுக்கும், $70 billion தொகையை சவுதி அரேபியா அரசு அளித்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.
-http://world.lankasri.com