ஜப்பானை நோக்கி ஏவுகணைகளை செலுத்திய வட கொரியா: வெளியான அதிர்ச்சி தகவல்

north_japan_001ஜப்பான் கடற்கரையை நோக்கி வட கொரியா ராணுவம் ஏவுகணைகளை செலுத்தியுள்ளதாக சற்று முன்னர் வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டாம் இணைப்பு:

வட கொரியா செலுத்திய இந்த ஏவுகணைகள் சுமார் 200 கி.மீ வரை பயணித்து கொரியன் பெனின்சுலாவில் தரையிறங்கியுள்ளன

வட கொரியாவின் இந்த நடவடிக்கை குறித்து தென் கொரியா ராணுவம் வெளியிட்டுள்ள செய்தியில், ‘வட கொரியாவில் உள்ள Hamhung என்ற பகுதியிலிருந்து சர்வதேச நேரப்படி 6.19 மணியளவில் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், தற்போது ஒரு அசாதாரண சூழல் நிலவி வருவதால், தங்களுடைய ராணுவத்தினரை தயார் நிலையில் வைத்திருப்பதாக தென் கொரியா தெரிவித்துள்ளதாக Yonhap செய்தி ஏஜென்சி தகவல் வெளியிட்டுள்ளது.

முதலாம் இணைப்பு:

தென் கொரியா நாட்டை சேர்ந்த Yonhap என்ற செய்தி ஏஜென்சி சற்று முன்னர் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது.

அதில், வட கொரியா ராணுவம் ஜப்பான் கடற்கரையை நோக்கி ஏவுகணைகளை செலுத்தியுள்ளதாகவும், ஆனால், அவைகள் எந்த வகை ஏவுகணைகள் என தெரியவில்லை என்ற தகவலை வெளியிட்டுள்ளது.

’ஏவுகணை பரிசோதனைகள் நடத்தப்படும்’ என கடந்த சில நாட்களாக வட கொரியா எச்சரிக்கை விடுத்து வந்த நிலையில், தற்போது அதனை செயல்படுத்தியுள்ளது சர்வதேச அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

-http://world.lankasri.com