பிரஸ்ஸல்ஸை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்புகள்: பலி எண்ணிக்கை 23க உயர்வு

terrorist-attack-502762பெல்ஜியத்தின் தலைநகரான பிரசல்ஸின் விமான நிலையமொன்றில் இரண்டு குண்டு வெடிப்புகள் இடம் பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேற்படி ,குண்டு வெடிப்பு சவெண்டம் என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

குண்டுவெடிப்பில் பலர் படுகாயமடைந்துள்ளதுடன் உயிராபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், குறித்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பிலான உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இரண்டாம் இணைப்பு

பெல்ஜியம் விமான நிலையத்தில் பயங்கர குண்டுவெடிப்பு: 11 பேர் பலி, பலர் படுகாயம்

பெல்ஜியம் தலைநகரான பிரஸ்சல்ஸில் உள்ள விமான நிலையத்தில் நிகழ்ந்த பயங்கர வெடிவிபத்தில் 11 பேர் பலியாகியுள்ளதாகவும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரஸ்சல்ஸில் உள்ள Zaventem என்ற விமான நிலையத்தில் சற்று முன்னர் இரண்டுக்கும் மேற்பட்ட வெடிகுண்டுகள் வெடிக்கும் பலத்த ஓசை எழுந்ததை தொடர்ந்து விமான நிலையம் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்துள்ளது.

இந்த பயங்கர வெடிவிபத்தில் 11 பேர் பலியாகியுள்ளதாகவும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அதிகாரிகள் உடனடியாக விமான நிலையத்தை மூடியதுடன், அங்கிருந்த பயணிகளை அவசரமாக வெளியேற்றியுள்ளனர்.

மேலும், இந்த விமான நிலையத்திற்கு வந்த பல விமானங்கள் Antwerp விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

அதேசமயம், சில விமானங்கள் தரையிறங்கவும் முடியாமல், மற்ற விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பவும் முடியாமல் Liege நகருக்கு மேல் இன்னும் வட்டமடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சில நிமிடங்களுக்கு முன்னர் வெளியான தகவலில் இந்த விமான நிலையத்தில் உள்ள அமெரிக்க விமான நிறுவன உதவி மையத்திற்கு அருகில் இந்த வெடிவிபத்துக்கள் நிகழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று பாரீஸ் தாக்குதலில் தொடர்புடைய முக்கிய தீவிரவாதி பிரஸ்சல்ஸ் நகரில் கைது செய்யப்பட்ட நிலையில், இதே நகரில் உள்ள விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் வெடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விமான நிலையத்தில் அதிகாரிகள் சோதனை செய்ததில் வெடிக்காமல் இருந்த பல வெடிகுண்டுகளை கண்டுபிடித்து மீட்டுள்ளனர்.

தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, இது தீவிரவாத தாக்குதல் தான் என அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.

ரயில் நிலையங்களிலும் வெடி குண்டு தாக்குதல்: 3 குண்டுவெடிப்புகளில் 27 பேர் பலி

Maalbeek, Schuman என்ற ரயில் நிலையங்களில் அடுத்தடுத்து வெடி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், இந்த தாக்குதலில் 10 பேர் வரை உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் நடந்த இந்த ரயில் நிலையங்களின் அருகில் ஐரோப்பிய ஆணையத்திற்கு சொந்தமான சில அலுவலகங்கள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், தலைநகரில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களும் மூடப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்ததாக்குதல்களை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த பெல்ஜியம் உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

-http://www.tamilwin.com