நம்பகமான விசாரணையே எமக்குத் தேவை:- பர்ஹான் ஹக் தெரிவிப்பு !

un_2day_001இலங்கையில் இடம்பெற்ற போருடன் தொடர்புடைய சம்பவங்கள் தொடர்பாக நம்பகமான விசாரணைகளையே ஐ.நா வலியுறுத்துவதாக ஐ.நா பொதுச்செயலரின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.

போருடன் தொடர்புடைய சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளின் பின்னர், நீதிச்செயற்பாடுகளில் வெளிநாட்டு நீதிபதிகளை அழைக்கப்போவதில்லை என்று இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளது தொடர்பாக எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

விசாரணைகள் எவ்வாறு போகின்றன என்பதை ஐ.நா மனித உரிமைகள் பேரவை மதிப்பீடு செய்யும். ஆனால் இது நம்பகமான விசாரணையாக என்பதை உறுதிப்படுத்துவதே எமக்குத் தேவை. நம்பகமான விசாரரணை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான வழிகாட்டல்களை நாம் தெளிவாக கூறியுள்ளோம்.

எனவே அது நடப்பதை உறுதிப்படுத்துவதற்குத் தொடர்ந்தும் கலந்துரையாடுவோம். என்றும் ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.

-http://www.tamilcnnlk.com

TAGS: