பிரஸல்ஸ் தாக்குதல் எதிரொலி: ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக போர் அறிவிப்பை வெளியிட்ட ஹக்கர்ஸ்

anony_isis_001பெல்ஜியம் தலைநகரில் நிகழ்ந்த தாக்குதலையடுத்து ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக இணைய ஹக்கர் குழு போர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸ் பகுதியில் உள்ள விமான நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் தீவிரவாதிகள் தற்கொலை தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் 34 பேர் பலியாகினர் மற்றும் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலை தாங்கள் தான் நடத்தியதாக ஐ.எஸ். அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தாக்குதல் நடத்திய ஐ.எஸ். அமைப்புக்கு எதிராக இணைய போர் நடத்தப்போவதாக அனானிமஸ் (Anonymous) என்ற இணைய ஹக்கர்ஸ் குழு தெரிவித்துள்ளது.

தொடர்பாக அனானிமஸ் வெளியிட்டுள்ள வீடியோவில், ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான இணைய பேரணியை தொடரவுள்ளோம்.

ஐ.எஸ். அமைப்பை சேர்ந்த பலரின் டுவிட்டர் கணக்குகளை முடக்கியுள்ளோம். மேலும் அவர்களது தனிப்பட்ட விபரங்களை திருடி அவர்களுக்கு சொந்தமான பணங்களை திருடியுள்ளோம்.

தீவிரவாதிகள் தங்களின் தாக்குதலை நடத்தி வரும்வரை நாங்கள் ஓயப்போவதில்லை. அவர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்துவோம்.

சகிப்புத்தன்மை மற்றும் சுதந்திரத்திற்கான உரிமைகளை பாதுகாப்போம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பாரிஸ் தாக்குதல் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அனானிமஸ் இவ்வாறு மிரட்டலை விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-http://world.lankasri.com